துத்தநாக நைட்ரைடு

வேதிச் சேர்மம்

துத்தநாக நைட்ரைடு (Zinc nitride) என்பது Zn3N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். துத்தநாகம் மற்றும் நைட்ரசன் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. தூய்மையான நிலையில் இச்சேர்மம் கனசதுர அமைப்பில் காணப்படுகிறத[1][2]

துத்தநாக நைட்ரைடு
இனங்காட்டிகள்
1313-49-1 Y
பண்புகள்
Zn3N2
வாய்ப்பாட்டு எடை 224.15 கி/மோல்[1]
தோற்றம் சாம்பல் நிறத் தூள்[1]
அடர்த்தி 6.22 g/cm³, திண்மம்[1]
கரையாது (சிதைவடையும்)
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம், cI80
புறவெளித் தொகுதி Ia-3, No. 206[1][2]
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

வேதியியல் பண்புகள்

தொகு

காற்றிலா சூழலில் துத்தநாகமைடு என்றழைக்கப்படும் துத்தநாக ஈரமீன், 200° செ வெப்பநிலையில் வெப்பச் சிதைவு மூலமாக துத்தநாக நைட்ரைடாக உருவாகிறது. [3] அமோனியா இவ்வினையில் உடன் விளை பொருளாக கிடைக்கிறது.[4]

3Zn(NH2)2 → Zn3N2 + 4NH3

துத்தநகத்தை 600° செ வெப்பநிலைக்கு அமோனியா பாய்வில் சூடுபடுத்தினாலும் இதைத் தயாரிக்கலாம்.ஐதரசன் வாயு உடன் விளைபொருளாக உண்டாகிறது.[3][5]

3Zn + 2NH3 → Zn3N2 + 3H2

துத்தநாக நைட்ரைடு தண்ணீருடன் தீவிரமாக வினைபுரிந்து அமோனியா மற்றும் துத்தநாக ஆக்சைடாக உருவாகிறத[3][4]

Zn3N2 + 3H2O → 3ZnO + 2NH3

துத்தநாக நைட்ரைடு, ஐதரோ குளோரிக் அமிலத்தில் [6]கரைகிறது. மின்வேதியியல் முறையில் மீள்வினையாக இலித்தியத்துடன் வினைபுரிகிறது.[7] மக்னீசியம் நைட்ரைடு (Mg3N2) மற்றும் இலித்தியம் நைட்ரைடு Li3N) போல இச்சேர்மமும் உயர் உருகுநிலை கொண்டுள்ளது[8].

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Sangeeta, D. (1997). Inorganic Materials Chemistry Desk Reference. CRC Press. p. 278. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-8900-9. பார்க்கப்பட்ட நாள் 2007-09-30.
  2. 2.0 2.1 Partin, D. E.; Williams, D. J.; O'Keeffe, M. (1997). "The Crystal Structures of Mg3N2 and Zn3N2". Journal of Solid State Chemistry 132 (1): 56–59. doi:10.1006/jssc.1997.7407. Bibcode: 1997JSSCh.132...56P. http://www.ingentaconnect.com/content/els/00224596/1997/00000132/00000001/art97407. பார்த்த நாள்: 2015-11-02. 
  3. 3.0 3.1 3.2 Roscoe, H. E.; Schorlemmer, C. (1907) [1878]. A Treatise on Chemistry: Volume II, The Metals (4th ed.). London: Macmillan. pp. 650–651. பார்க்கப்பட்ட நாள் 2007-11-01.
  4. 4.0 4.1 Bloxam, C. L. (1903). Chemistry, Inorganic and Organic (9th ed.). Philadelphia: P. Blakiston's Son & Co. p. 380. பார்க்கப்பட்ட நாள் 2007-10-31.
  5. Lowry, M. T. (1922). Inorganic Chemistry. Macmillan. p. 872. பார்க்கப்பட்ட நாள் 2007-11-01.
  6. Comey, A. M.; Hahn, D. A. (1921). A Dictionary of Chemical Solubilities: Inorganic (2nd ed.). New York: Macmillan. p. 1124. பார்க்கப்பட்ட நாள் 2007-11-01.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  7. Amatucci, G. G.; Pereira, N. (2004). "Nitride and Silicide Negative Electrodes". In Nazri, G.-A.; Pistoia, G. (ed.). Lithium Batteries: Science and Technology. Kluwer Academic Publishers. p. 256. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-7628-2. பார்க்கப்பட்ட நாள் 2007-11-01.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  8. Grolier Incorporated (1994). Academic American Encyclopedia. Danbury, CT: Grolier Inc. p. 202. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7172-2053-3. பார்க்கப்பட்ட நாள் 2007-11-01.

உசாத்துணை

தொகு

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=துத்தநாக_நைட்ரைடு&oldid=3349106" இலிருந்து மீள்விக்கப்பட்டது