துத்தநாக மாலிப்டேட்டு
வேதியியல் மூலக்கூறு
துத்தநாக மாலிப்டேட்டு (Zinc molybdate) என்பது ZnMoO4 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மம் ஆகும். வெண்மை நிறமியாகக் காணப்படும் இதை அரிமானத் தடுப்பியாகப் பயன்படுத்துகிறார்கள். சோடியம் மாலிப்டேட்டு போன்ற நன்கு கரையக்கூடியவை அதிக அளவுகளில் நச்சுப்பொருளாகச் செயல்படுகின்ற அதேவேளையில் துத்தநாக மாலிப்டேட்டு நீரில் கரைவதில்லை என்பதால் அது நச்சுத்தன்மையற்றதாகக் கருதப்படுகிறது. குரோமேட்டுகள் அல்லது ஈய உப்புகளைக் காட்டிலும் மாலிப்டேட்டுகள் குறைவான நச்சுத்தன்மையைக் கொண்டுள்ளன. இதனால் இவ்வுப்புகள் அரிமானத்தடுப்பியாகப் பயன்படும் மாற்றாக கருதப்படுகின்றன. கரையும் உப்பு கலவைகளில் இருந்து சிக்கல் ஏதுமில்லாமல் கரையாத துத்தநாக மாலிப்டேட்டுகள் படிகமாகின்றன.
இனங்காட்டிகள் | |
---|---|
13767-32-3 | |
பப்கெம் | 16213780 |
பண்புகள் | |
ZnMoO4 | |
வாய்ப்பாட்டு எடை | 225.33 கி/மோல் |
தோற்றம் | வெண்மையான நாற்கோணப் படிகங்கள் |
அடர்த்தி | 4.3 கி/செ.மீ3, திண்மம் |
உருகுநிலை | 900 °C (1,650 °F; 1,170 K) |
கரையாது | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நாற்கோணம் |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | பட்டியலிடப்படவில்லை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–95, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2