துன்முகி ஆண்டு
தமிழ் ஆண்டுகள் 60 வதில் முப்பதாம் ஆண்டு
துன்முகி ஆண்டு என்பது தமிழ்ப் புத்தாண்டில் பிரபவ ஆண்டு துவங்கி அறுபது ஆண்டுகள் என ஆண்டு வட்ட முறையில் வரக்கூடிய ஆண்டுகளில் முப்பத்தாம் ஆண்டாகும். இந்த ஆண்டை செந்தமிழில் வெம்முகம் என்றும் குறிப்பர்
துன்முகி ஆண்டு வெண்பாதொகு
துன்முகி ஆண்டு எப்படிப்பட்டது என்பது குறித்து இடைக்காட்டுச் சித்தர் இயற்றியதாக கூறப்படும் வெண்பா
மிக்கான துன்முகியில் வேளாண்மை யேறுமே
தொக்க மழை பின்னே சொரியுமே மிக்கான
குஜர தேசத்தில் குறைதீர வே விளையும்
அச்சமில்லை வெள்ளையரி தாம்[1]
இந்த வெண்பாவின்படி இந்த ஆண்டில் உலகெங்கும் மழை பொழியும். மண்வளம் அதிகமாகும். வேளாண்மை தழைக்கும். தானியங்கள் பெருகுவதுடன் பால் உற்பத்தியும் கூடி மக்கள் மகிழ்வுடன் வாழ்வார்கள் என்கிறது.[2]
மேற்கோள்கள்தொகு
- ↑ "துன்முகி வருடம் புத்தாண்டு ராசி பலன்கள்". http://www.trttamilolli.com. 14 ஏப்ரல் 2017 அன்று பார்க்கப்பட்டது. External link in
|publisher=
(உதவி) - ↑ ஜோதிபூஷண் வேங்கடசுப்பிரமணியன் (2016 ஏப்ரல் 21). "துன்முகி வருட ராசி பலன்கள்". கட்டுரை. தி இந்து. 14 ஏப்ரல் 2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|date=
(உதவி)