துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்

(துபாய் சர்வதேச விமான நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Dubai International Airport), ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் இரண்டாவது பெரிய அமீரகமான துபாயில் அமைந்துள்ள பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இது, மையக் கிழக்குப் பகுதியின் முக்கியமான வானூர்திப் போக்குவரத்து மையமாகவும் உள்ளது. 2008 ஆம் ஆண்டில் மையக் கிழக்கு, ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளுக்கு வரும் பறப்புக்களினதும், இப் பகுதிகளிலிருந்து புறப்படும் பறப்புக்களினதும், மொத்த எண்ணிக்கையின் 34% துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் பங்கு ஆகும்.

துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்

مطار دبي الدولي
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்துபாய் அரசு
இயக்குனர்குடிசார் வானூர்திப் பயணத் துறை
சேவை புரிவதுதுபாய், ஐக்கிய அரபு அமீரகம்
உயரம் AMSL62 ft / 19 m
ஆள்கூறுகள்25°15′10″N 055°21′52″E / 25.25278°N 55.36444°E / 25.25278; 55.36444
இணையத்தளம்www.dubaiairport.com
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
12L/30R 4,000 13,124 ஆஸ்பால்ட்டு
12R/30L 4,000 13,124 ஆஸ்பால்ட்டு
புள்ளிவிவரங்கள் (2008)
Aircraft Movements260,530
பயணிகள்37,441,440
முனையங்கள்3
பயணிகள் புள்ளிவிபரங்கள் அனைத்துலக வானூர்தி நிலைய அவை இலிருந்து பெறப்பட்டது]][1]
பிற புள்ளிவிபரங்கள் துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து.[2]

துபாயின் குடிசார் வானூர்திப் பயணத் துறையினால் இயக்கப்பட்டு வரும் இவ் வானூர்தி நிலையம், துபாய் அமீரகத்தின் பன்னாட்டு வானூர்தி நிறுவனங்களான "எமிரேட்ஸ் எயர்லைன்", "எமிரேட்ஸ் ஸ்கைகார்கோ", "ஃபிளைதுபாய்" போன்றவற்றின் இருப்பிடமாகவும் உள்ளது. அத்துடன் குவைத்திலிருந்து இயங்கும் "ஜசீரா எயர்வேய்ஸ்", "வத்தனியா எயர்வேய்ஸ்" போன்றவற்றின் துணை மையமாகவும் உள்ளது. "டால்ஃபின் எயர்", ""ஃபால்க்கன் எக்ஸ்பிரஸ் கார்கோ எயர்லைன்ஸ்", "அரியா எயர்" ஆகிய சிறிய விமான நிறுவனங்களும் இதனைத் தமது முதன்மையிடமாகக் கொண்டு இயங்குகின்றன. இவ் வானூர்தி நிலையத்தைத் துணை மையமாகக் கொண்ட பிற வானூர்தி நிறுவனங்களுள், "ராயல் ஜோர்தானியன்", "பிரித்தானிய கல்ஃப் இண்டர் நஷனல் எயர்லைன்ஸ்", "ஈரான் அசெமான் எயர்லைன்ஸ்", "எயர்புளூ", "ஈரான் எயர்", "ஆப்பிரிக்கன் எக்ஸ்பிரஸ் எயர்வேய்ஸ்" என்பனவும் அடங்கும். "சிங்கப்பூர் எயர்லைன்ஸ்", "யெமேனியா", "பிமான் பங்ளாதேஷ் எயர்லைன்ஸ்", "எயர் இந்தியா", "பாகிஸ்தான் இண்டர்நஷனல் எயர்லைன்ஸ்", "ஜுப்பா எயர்வேய்ஸ்" என்பவற்றை உள்ளடக்கிய பல நிறுவனங்கள் துபாயை இலக்கு நகரமாகக் கொண்டு இயங்குகின்றன. 2008 ஜூன் 8 ஆம் தேதி பெறப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, இங்கிருந்து 140 வானூர்தி நிறுவனங்கள், 260 இடங்களுக்கு ஒரு கிழமைக்கு 5,100 பறப்புக்களை இயக்கி வருகின்றன.

இவ் வானூர்தி நிலையத்தில் இருந்து, வட அமெரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா, கிழக்காசியா, தென்கிழக்காசியா, தெற்காசியா, ஆஸ்திரலேசியா, ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளுக்குப் பறப்புக்கள் உள்ளன. இதற்குத் துணையாக அல் மக்தூம் பன்னாட்டு வானூர்தி நிலையம் என்ற பெயரில் புதிய வானூர்தி நிலையம் ஒன்று துபாயில் கட்டப்பட்டு வருகிறது. 140 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந் நிலையம் எதிர் காலத்தில் துபாய்க்கு வரக்கூடிய பயணிகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

2008 ஆம் ஆண்டில் இந் நிலையத்திற்கு ஊடாக 37,441,440 பயணிகள் வந்து போயினர். இது 2006 இல் இருந்ததைக் காட்டிலும் 18.3% கூடுதலானது. 2007 ஆம் ஆண்டில் உலகின் 27 ஆவது சுறுசுறுப்பான வானூர்தி நிலையமாக இருந்த இது, 2008 ஆம் ஆண்டில் 21 ஆவது இடத்துக்கு முன்னேறியது. பன்னாட்டுப் பயணிகள் போக்குவரத்தைப் பொறுத்தவரை இது உலகின் 8 ஆவது சுறுசுறுப்பான வானூர்தி நிலையம் ஆகும். பயணிகள் போக்குவரத்தில் முக்கியமான இடத்தை வகிக்கும் இது சரக்குப் போக்குவரத்துக்கான முக்கிய மையமாகவும் விளங்குகிறது. 2008ல், இந் நிலையம் 1.824 மில்லியன் தொன்கள் சரக்குகளைக் கையாண்டது.

இவ் வானூர்தி நிலையத்தில் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவான முனையம் 3 (Terminal 3), 2008 அக்டோபர் 14 ஆம் நாள் திறந்து வைக்கப்பட்டது. முனையம் 2 உம் தரமுயர்த்தப்பட உள்ளது.

குறிப்புகள்

தொகு
  1. [1]
  2. Facts and Figures