துப்லி விரிகுடா
துப்லி விரிகுடா (Tubli Bay) பகுரைன் நாட்டுக்கு கிழக்கில், பகுரைன் தீவுக்கும் சிட்ரா தீவுக்கும் இடையில் உள்ள ஒரு விரிகுடா ஆகும். பகுரைன் வளைகுடா என்றும் இது அழைக்கப்படுகிறது. மனாமா தீபகற்பத்திற்கு நேர் தெற்கே நீர்நிலை உள்ளது. நபி சலே தீவு இவ்விரிகுடாவில் உள்ளது.
இவ்விரிகுடா பகுதி வளமான கடல் வாழ் உயிரினங்கள், பறவைகள் மற்றும் அதன் எல்லையைச் சுற்றியுள்ள சதுப்புநிலக் காடுகளுக்கு பெயர் பெற்றதாகும். . பண்ணைகள் வழியாக விரிகுடாவிற்குள் சென்ற பிறகு நன்னீர் ஊற்றுகளின் நீரோட்டத்தில் சதுப்புநிலங்கள் செழித்து வளர்கின்றன. இறால் மற்றும் மீன்களின் முக்கிய இனப்பெருக்கம் இங்கு நிகழ்கிறது. பல புலம்பெயர்ந்த பறவை இனங்களுக்கு இது ஒரு தங்குமிடமாகும்.
இன்று துப்லி விரிகுடா சட்டவிரோத நில மீட்பு, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் நீரூற்றுகளில் இருந்து நன்னீர் விநியோகம் குறைந்து இடருக்கு உள்ளாகி வருகிறது. 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிலப்பரப்பின் அளவு 25 சதுர கிலோமீட்டரில் இருந்து இப்போது வெறும் 11 சதுர கிலோமீட்டர்களாக குறைது விட்டது.. [1] கடற்கரையின் பெரும்பகுதியில் இருந்த சதுப்புநிலங்கள் ராசு சனத் மற்றும் ராசு துப்லி பகுதிகளில் ஒரு சில சிறிய திட்டுகளாக குறைக்கப்பட்டுள்ளன.
1997 ஆம் ஆண்டில், துப்லி விரிகுடா பன்னாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ராம்சார் ஈரநிலங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. [2]
மேற்கோள்கள்
தொகுபுற இணைப்புகள்
தொகு- பகுரைனில் பாதுகாப்பு பரணிடப்பட்டது 2018-09-18 at the வந்தவழி இயந்திரம்
- துப்லி விரிகுடா 'ஒரு தொலைந்து போன பாரம்பரியம்', Gulf Daily News, 25 மார்ச் 2007
- பாலத் திட்டம் 'புளோ டு டூப்லி பே', வளைகுடா டெய்லி நியூசு, 14 ஏப்ரல் 2008
- துப்லி விரிகுடா 2010 (வீடியோ அறிக்கை)