தும்பமன் வடக்குநாதர் கோயில்

தும்பமன் வடக்குநாதர் கோயில், இந்தியாவின் கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் பந்தளம் [1] அருகே உள்ள ஒரு பழமையான கோயிலாகும். [2] இக்கோயிலில் இரண்டு கருவறைகள் உள்ளன. [3] அவை இரண்டும் வட்டமாக உள்ளன.

தும்பமன் வடக்குநாதர் கோயில்

முதல் கருவறை தொகு

முதல் கருவறையில் வடக்குநாதர் மூலவராக உள்ளார். அன்றாடம் பூசைகள் மூலவரை சுப்ரமணியர் அல்லது முருகன் எனப்படுகின்ற கார்த்திகேயனின் பிரதிநிதியாகக் கருதி நிகழ்த்தப்படுகிறது. ஆனால் சில வழிபாட்டாளர்கள் இக்கருவறை சிவபெருமானின் ஒரு வடிவத்தைக் கொண்டுள்ளதாக நம்புகின்றனர். [4] முருகனை மையமாக் கொண்ட கருத்து இங்கு பரவலாக உள்ளது.

இரண்டாவது கருவறை தொகு

இரண்டாவது கருவறையில் தெக்கும்நாதன் என்று அழைக்கப்படுகின்ற பாலமுருகன் என்று வழிபாட்டாளர்கள் நம்புகின்றனர். கூடியாட்டத்திற்கான ஒரு நாடகமான ஆச்சார்யா சூடாமணியை [5] எழுதிய சக்திபத்ரா இவரை வழிபட்டதாக நம்பப்படுகிறது. இக்கருவறையில் அற்புதமான சுவரோவியங்கள் உள்ளன. [2] இந்த கோவிலில் கொண்டாடப்படும் முக்கியமான திருவிழாக்களில் உத்ராதா மகோற்சவம் (ஆண்டு விழா), ஸ்ரீமத் பாகவத சப்தாஹம், மகாசிவராத்திரி, தைப்பூசம், விஷு, ஓணம் போன்றவை அடங்கும். மலையாள மாதமான மீனத்தின் உத்ராடம் நட்சத்திரத்தில் உத்ராதா மகோற்சவமான ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. [6]

படத்தொகுப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Thumpamon Vadakkumnatha Temple" (in ஆங்கிலம்). 2020-04-29. பார்க்கப்பட்ட நாள் 2023-11-22.
  2. 2.0 2.1 Vadakkumnatha temple website
  3. "Thumpamon Vadakkumnatha Temple, Pathanamthitta, India Tourist Information" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-22.
  4. Ashish (2020-06-12). "Thumpamon Vadakkumnatha Temple in Kerala - Thumpamon Vadakkumnatha Temple Pooja Timing, Location". பார்க்கப்பட்ட நாள் 2023-11-22.
  5. "Thumpamon Vadakkumnatha Temple" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-22.
  6. "Sree Vadakkunnathan Temple – Althara Kshethram, Thrissur - Hindu Temples". பார்க்கப்பட்ட நாள் 2023-11-22.

வெளி இணைப்புகள் தொகு

மேலும் பார்க்கவும் தொகு