துருக்கியில் இந்தியர்கள்

துருக்கியில் இந்தியர்கள் (Indians in Turkey) ஒரு சிறிய சமூகமாக, எண்ணிக்கையில் 300 நபர்கள் சுமார் 100 குடும்பங்களாக வாழ்கின்றனர்.[1][2] இவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவர்கள் மற்றும் கணினி பொறியாளர்கள் அல்லது பன்னாட்டு நிறுவனத்தில்[2] தொழிலாளர்கள் ஆவர். துருக்கியில் இந்தியாவின் சார்பாக ரிலையன்சு தொழில் நிறுவனம், டாட்டா மோட்டார்சு போன்ற தனியார் நிறுவனங்களின் வர்த்தகமும் நடைபெறுகிறது.

துருக்கியில் இந்தியர்கள்
Indians in Turkey
மொத்த மக்கள்தொகை
(300)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
இசுதான்புல்
மொழி(கள்)
இந்தி · துருக்கியம்
சமயங்கள்
இந்து சமயம்

துருக்கியிலுள்ள இந்தியர்களில் பெரும்பாலோர் இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் ஒரு பெரிய இந்து சமூகமாக வாழ்கிறார்கள். இந்திய உணவுகள், பண்பாடு மற்றும் சினிமா போன்ற பழக்கவழக்கங்கள் துருக்கி முழுவதும் பரவலாக பிரபலமாகியுள்ளன. சமீப காலங்களில், இந்திய துருக்கிய நல்லுறவுகளை மேம்படுத்தும் விதமாகவும் இந்திய சமூகத்தினர்ரின் வளர்ச்சிக்காகவும் இந்தியாவில் இருந்து சுற்றுலா மற்றும் கலாச்சாரத்தை பரவலாக்கி ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Estimated Size of Overseas Indian Community: Country-wise" (PDF). Archived from the original (PDF) on 2009-06-19. பார்க்கப்பட்ட நாள் 2015-12-10.
  2. 2.0 2.1 2.2 Rasheeda Bhagat (31 January 2007). "Turkey "stuck in the Awaraa days?"". பிசினஸ் லைன். http://www.thehindubusinessline.com/2007/01/31/stories/2007013101822000.htm.