துருவ் (நடிகர்)

துருவ் (Dhruv) இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் விக்ரமின் மகன் ஆவார்.[1] இவர் பாலாவின் இயக்கத்தில் வர்மா எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.[2]

துருவ் (நடிகர்)
பிறப்புசென்னை
இருப்பிடம்சென்னை
தேசியம்இந்தியன்
பணிநடிகர்
பெற்றோர்விக்ரம்,சைலஜா பாலகிருஷ்ணன்

பிறப்புதொகு

துருவ் 1995 ஆம் ஆண்டில் சென்னையில் பிறந்தார். இவரின் தந்தை விக்ரம் திரைப்பட நடிகர், மற்றும் தாயார் சைலஜா பாலகிருஷ்ணன் ஆவார். இவருக்கு அக்சிதா எனும் சகோதரி உள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கைதொகு

சென்னையில் பிறந்து வளர்ந்தார். பின் கல்வி பயில இலண்டன் சென்றார். இலண்டனில் எம் இ டி திரைப்பள்ளியில் பயிலும் போது குட்நைட் சார்லி எனும் குறும்படத்தை இயக்கினார்.[3] தன்னுடைய முதல் படத்தின் மூலம் கிடைத்த வருமானத்தை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக அளித்தார்.[4]

சான்றுகள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=துருவ்_(நடிகர்)&oldid=3204364" இருந்து மீள்விக்கப்பட்டது