துருஸ்

அரபு மொழிபேசும் இனக்குழுவினர்

துருஸ் (Druze[1] அரபு மொழி: درزيdarzī அல்லது durzī பன்மை دروز durūz ; எபிரேயம்: דְּרוּזִיdrūzī பன்மை  druzim ) என்பது மேற்கு ஆசியாவில் தோன்றிய அரபு மொழி பேசும் எஸோதெரிக் இனவழி குழுவினர் ஆவர். இவர்கள் தங்களை ஏகத்துவத்தின் மக்கள் (அல்-முவாசிடன்) என்று அடையாளப் படுத்திக் கொள்கின்றனர். மிடியனின் ஜெத்ரோ துரூஸின் மூதாதையராகக் கருதப்படுகிறார். அவரை இவர்கள் தங்கள் ஆன்மீக நிறுவனர் மற்றும் தலைமை தீர்க்கதரிசி என்று போற்றுகிறனர்.[2] இது ஹம்ஸா இப்னு அலி இப்னு அஹ்மத் மற்றும் ஆறாவது பாத்திமிட் கலீஃப், அல்-ஹக்கீம் பி-அம்ர் அல்லாஹ் மற்றும் பண்டைய கிரேக்க தத்துவஞானிகளான பிளேட்டோ, அரிசுட்டாட்டில், பித்தாகரசு, சிட்டியத்தின் ஜெனோ ஆகியோரின் போதனைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஏகத்துவ மற்றும் ஆபிரகாமிய சமயமாகும்.

இஸ்ரேலிய செய்தி நிறுவனமான இஸ்ரேல் சேனல் 2 அலைவரிசையின் காப்பகத்திலிருந்து காணொளி காட்சிகள், இஸ்ரேலிய துரூஸ் ஆண்களை பாரம்பரிய உடையில் காட்டுகின்றன. காட்டப்பட்ட கொடிகள் துரூஸ் கொடிகள்.

ஞானத்தின் நிருபங்கள் என்னும் நூல்கள் துரூஸ் நம்பிக்கையின் அடித்தளமாக உள்ளன. துரூஸ் நம்பிக்கையானது சியா இஸ்லாத்தின் ஒரு கிளையான இஸ்மாயிலிசத்தின் கூறுகளையும், ஞானக் கொள்கை, கிறிஸ்தவம், சரதுசம், பௌத்தம், இந்து சமயம், நியோபிளாடோனிசம், பித்தகோரியனிசம், மற்றும் பிற தத்துவங்கள் மற்றும் நம்பிக்கைகள் போன்றவற்றின் கூறுகளையும் உள்ளடக்கியது. துரூஸ்கள் தெய்வம் காட்சியளித்தல் மற்றும் மறுபிறப்பு அல்லது பரகாயப் பிரவேசம் போன்றவற்றை நம்புகிறனர். [3] தொடர்ச்சியான மறுபிறப்பு சுழற்சியின் முடிவில், ஆன்மா அண்ட மனதுடன் ( அல்-அக்ல் அல்-குல்லே ) ஒன்றுபடுகிறது என்று துரூஸ்கள் நம்புகிறனர். [4]

துருஸ் நம்பிக்கையானது முதலில் இஸ்மாயிலியத்திலிருந்து வளர்ந்திருந்தாலும், துரூஸ் முஸ்லிம்களாக கருதப்படவில்லை. [5] [6] [7] கடவுள் காட்சிதரல் மற்றும் மறுபிறப்பு மீதான நம்பிக்கை கோட்பாடுகளின் காரணமாக துரூஸ் இறையியல் ரீதியாக முஸ்லிம்களிடமிருந்து வேறுபடுகிறனர். [8] மேலும் இவர்கள் இஸ்லாத்தின் ஐந்து தூண்களை ஏற்கவோ பின்பற்றவோ இல்லை.

லெவண்ட்டின் வரலாற்றை வடிவமைப்பதில் துரூஸ் சமூகம் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. சமய சிறுபான்மையினரான, இவர்கள் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு முஸ்லீம் ஆட்சிகளால் அடிக்கடி துன்புறுத்தல்களை அனுபவித்திருக்கிறார்கள். மிக சமீபத்தில், துரூஸ் மக்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளால் குறிவைக்கப்பட்டனர். [9] [10] துரூஸ் சமய நம்பிக்கை லெவண்டின் பெரிய சமயக் குழுக்களில் ஒன்றாகும், இதை 800,000 முதல் பத்து லட்சம் வரையிலான மக்கள் பின்பற்றுகின்றனர். இவர்கள் முதன்மையாக சிரியா, லெபனான் மற்றும் இஸ்ரேலில் காணப்படுகின்றனர், ஜோர்டானில் சிறிய சமூகங்களாக உள்ளனர். பழமையான மற்றும் அதிக அடர்த்தியான துரூஸ் சமூக மக்கள் லெபனான் மலையிலும், சிரியாவின் தெற்கிலும் ஜபல் அல்-துரூஸைச் (அதாவது "துரூஸின் மலை") சுற்றிலும் உள்ளனர். [11] துரூஸின் சமூக பழக்கவழக்கங்கள் முஸ்லிம்களிடமிருந்தும் இன்றைய நகரமயமாக்கப்பட்ட கிறிஸ்தவர்களிடமிருந்தும் குறிப்பிடத்தக்க வகையில் வேறுபடுகின்றன.

குறிப்புகள் தொகு

  1. "Definition of druze". Dictionary.com. 2013-07-18. பார்க்கப்பட்ட நாள் 2019-08-26.
  2. Lev, David (25 October 2010). "MK Kara: Druze are Descended from Jews". Israel National News. Arutz Sheva. பார்க்கப்பட்ட நாள் 13 April 2011.
  3. Nisan 2002.
  4. "Druze". druze.org.au. 2015. Archived from the original on 14 February 2016.
  5. The Encyclopedia of Cults, Sects, and New Religions. Prometheus Books. https://books.google.com/books?isbn=1615927387. பார்த்த நாள்: 13 May 2015. 
  6. "Are the Druze People Arabs or Muslims? Deciphering Who They Are". Arab America (in ஆங்கிலம்). Arab America. 8 August 2018. பார்க்கப்பட்ட நாள் 13 April 2020.
  7. The Political Role of Minority Groups in the Middle East. Michigan University Press. 
  8. "Druze". Britannica.
  9. Al-Khalidi, Suleiman. "Calls for aid to Syria's Druze after al Qaeda kills 20". Reuters. Archived from the original on 2015-11-23. பார்க்கப்பட்ட நாள் 2021-01-07.
  10. "Syria: ISIS Imposes 'Sharia' on Idlib's Druze". Archived from the original on 2015-05-20. பார்க்கப்பட்ட நாள் 2021-01-07.
  11. Radwan, Chad K. (June 2009). "Assessing Druze identity and strategies for preserving Druze heritage in North America". Scholar Commons. http://scholarcommons.usf.edu/cgi/viewcontent.cgi?article=3158&context=etd. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=துருஸ்&oldid=3558831" இலிருந்து மீள்விக்கப்பட்டது