துரை. விஜய ரகுநாத பல்லவராயர்
துரை. விஜய ரகுநாத பல்லவராயர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் தமிழக ராஜீவ் காங்கிரசு கட்சியின் மாநில துணைத் தலைவரும், மற்றும் புதுக்கோட்டை மாவட்டத் தலைவரும் ஆவார். இவர் சிறந்த தேசபக்தச் செம்மலும், 1965-ம் ஆண்டில் இருந்து 1996-ம் ஆண்டு வரை கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவராகவும் இருந்தார்.[1][2] இவரின் சிறிய தந்தை விஜய ரகுநாத பல்லவராயர் துரை ராஜா புதுக்கோட்டை அரசு நிர்வாகியும், அரச இல்லத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.
வாழ்க்கை வரலாறு
தொகுதுரைச்சாமி பல்லவராயருக்கும், ஜானகி அம்மையாருக்கும் மூன்றாவ குழந்தையாக பிறந்தார். பல்லவராயர் பாரம்பரியச் சிறப்புமிக்க புதுக்கோட்டை ராஜ குடும்பத்தில் பிறந்தவர்.
1953- ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் சிறந்த கால்பந்தாட்ட வீரராக தேர்தெடுக்கப்பட்டார்.[1]
தீண்டாமை ஒழிப்பிலும் அவர் துணிவோடு பாடுபட்டார். தனது பகுதியில் முள்ளங்குறிச்சி ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாவட்ட ஆட்சித் தலைவர் ஊல்வம் அவர்களை அழைத்து கோபுரத்தின் மேல் தண்ணீரை ஊற்ற வைத்தார். கிராம அளவில் தொடங்கி மாவட்ட அளவில் வரை உள்ளாட்சி மன்றங்களில் பல பதவிகளை வகித்து அனைத்துப் பகுதி மக்களுக்கும் மனித நேயத்தோடு தொண்டாற்றி கரம்பக்குடி சேர்மன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். இவரது முயற்சியால் வெட்டன்விடுதியில் அமைந்த உயர்நிலைப் பள்ளியைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் திறந்து வைத்து இவரைப் பாராட்டியுள்ளார்.
ஸ்ரீபிரகதாம்பாதாள் இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பகதூர் ஜி.சி.ஐ.இ லண்டனில் அகால மரணம் அடைய, பின்னர், அவர் மைந்தரும் அகால மரணம் அடைய, அவர்களின் கோடிக்கணக்கான சொத்துக்களை விஜயரகுநாத பல்லவராயர் அவர்களிடம் ஒப்படைக்க அரசு ஆணை பிறப்பித்தது, ஆனால் அதை இவர் வாங்க மறுத்துவிட்டார்.
இவரது மகன்கள் விஜய ரவி பல்லவராயர், விஜய ராஜசேகரன் பல்லவராயர், விஜய முத்து மார்த்தாண்டன் பல்லவராயர் ஆவர்கள். விஜய ரவி பல்லவராயர் கறம்பக்குடி ஒன்றிய தலைரும் ஆவர்.[3][4]
மணிமண்டபம்
தொகுபல்லவராயர் சொந்த ஊரான கரம்பக்குடியில் அவர் பெயரால் மணிமண்டபமும், நூலகமும், அவரது திருவுருவச் சிலையும் தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் 11-02-2000 அன்று திறந்து வைக்கப்பட்டது. அவரது வரலாற்று நிகழ்ச்சிகள் அடங்கிய “நீதி தந்த நெஞ்சம்” எனும் பெயரில் சிறு நூல் ஒன்று வெளியிடப்பட்டது.[1][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 துரை விஜய ரகுநாத பல்லவராயர் வரலாறு. p. 06.
- ↑ Cirani. p. 108.
- ↑ "முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா". மாலை மலர். https://www.maalaimalar.com/news/district/2022/04/18153146/3683954/PUDUKOTTAI--NEWS---JALLIKATTU-COMPETITION-OF-THE-TEMPLE.vpf.
- ↑ "பிலாவிடுதி ஊராட்சி மன்ற தலைவர்". தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/State/bilaviduthi-panchayat-president-resigns-788628.
- ↑ "விஜய ரெகுநாத பல்லவராயர் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் விழா". அரசியல் டைம்ஸ். https://arasiyaltimes.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95-15/.