விஜய ரகுநாத பல்லவராயர்

கள்ளர் குலத்தில் பிறந்தவர்

விஜய ரகுநாத பல்லவராயர் துரை ராஜா (Vijaya Raghunatha Pallavarayar Dorai Raja) (1872-1930) ஒரு இந்திய அரசு ஊழியரும், நிர்வாகியும், புதுக்கோட்டை அரச இல்லத்தின் உறுப்பினராகவும் இருந்தார். இவர் 1909 முதல் 1922 வரை புதுக்கோட்டை மாநில முதல்வராகவும், 1922 முதல் 1929 வரை ஆட்சிப் பொறுப்பாளராகவும் பணியாற்றினார்.[1]

விஜய ரகுநாத பல்லவராயர் துரை ராஜா
பிறப்பு1872
புதுக்கோட்டை மாவட்டம், பிரித்தானிய இந்தியா
இறப்பு1930
தேசியம் இந்தியா
அறியப்படுவதுஅரசப் பிரதிநிதி
சமயம்இந்து
பெற்றோர்குழந்தைசுவாமி பல்லவராயர்,
பிரகதாம்பாள் ராஜா அம்மணி சாகேப்

சுயசரிதை

தொகு

இவர், 1872 ஆம் ஆண்டில் புதுக்கோட்டையில் பிறந்தார், இளவரசி பிரகதாம்பாள் என்பவருக்கும் குழந்தைசுவாமி பல்லவராயருக்கும் மகனாக பிறந்தார். புதுக்கோட்டை அரசனான இராமச்சந்திர தொண்டைமானின் பேரனும், மார்த்தண்டா பைரவ தொண்டைமானின் மூத்த சகோதரரும் ஆவார்.[2] பல்லவராயர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கலையில் இளங்கலை பட்டம் பெற்றார். மேலும், சென்னை அரசு சேவையில் சேர்ந்தார். துணை ஆட்சியராகவும் சில குறுகிய காலத்திற்கு பணியாற்றினார்.

புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் அவர்கள் 1898 இல் ஏப்ரல் மாதம் ஐரோப்பிய தேசங்களுக்கு பயணம் மேற்கொண்டார். மன்னரின் பயணக்காலத்தில் இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் அரசு நிர்வாகத்தை கவனித்து வந்தார்.[3] 1898 - 1908 ஆம் ஆண்டு வரை நிர்வாக கவுன்சிலின் தலைவராக பணியாற்றி வந்தார். 1909 ல் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் திவான் பதவிக்கு உயர்ந்தார். 1922இல் அரசப் பிரதிநிதி எனும் பதவியைப் பெற்று 1928 வரையிலான காலகட்டத்தில் புதுக்கோட்டை சமஸ்தான அரசப் பிரதிநிதியாக இருந்தார்.[1] 

இவரது நிர்வாகத்தில் 1924 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் புதுக்கோட்டை சட்டசபை குழு உருவாக்கினார். 1926இல் தொடக்க கல்வி சட்டம் இயற்றப்பட்டது. கிராமப் பஞ்சாயத்து நீதிமன்ற சட்டம் இயற்றப்பட்டு, சிறு கிராமங்களிலும் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன. விவசாயத்திற்கு கிணறுகள் தோண்டவும் குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்பட்டது.

இறப்பு

தொகு

1930ஆம் ஆண்டு தனது 58 அல்லது 59 வயதில் இறப்பெய்தினார். [1]  

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Manul Of Pudukkottai State Volume II Part I. 1907. p. 383.
  2. Tiruchchirappalli (India : District) -- Gazetteers. 1907. pp. 361.
  3. Manul Of Pudukkottai State Volume II Part I. 1907. p. 447.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய_ரகுநாத_பல்லவராயர்&oldid=4137558" இலிருந்து மீள்விக்கப்பட்டது