துரோணர் (யானை)

ஆசிய யானை

துரோணர் (Drona) (1936கள் - 1998) என்பது மைசூரு தசராவின் முன்னணி யானைகளில் ஒன்றாகும். இது 1981-1997 க்கும் இடையில் தொடர்ச்சியாக 18 வருடங்கள் தங்க அம்பாரியை எடுத்துச் சென்றது. 20ஆம் நூற்றாண்டிலிருந்து அம்பாரியைச் சுமந்து சென்ற அனைத்து யானைகளிலும், இது சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் "இது தனக்குத் தானே கற்றுக்கொள்ளவும் திருத்திக் கொள்ளவும் ஒரு சிறந்த திறனைக் கொண்டிருந்தது".[2]

துரோணர்
இனம்ஆசிய யானை
பால்ஆண்
பிறப்பு1936கள்[1]
இறப்பு1998 (அகவை 61–62)
பல்லே, கெக்கடதேவன கோட்டை, கருநாடகம், இந்தியா
நாடுஇந்தியா
Occupationதங்க அம்பாரி சுமந்து செல்லுதல்
செயற்பட்ட ஆண்டுகள்1981–1997
Predecessorஐராவதம்

பெயர்

தொகு

இந்த யானைக்கு மகாபாரதக் கதையில் வரும் கௌரவர், பாண்டவர்களுடைய ஆசானான துரோணரின் பெயரிடப்பட்டது. காவியத்தில், துரோணாச்சாரியார் ஒரு துறவி, ஆனால் அவர் மிகவும் முதிர்ச்சியுள்ளவராகவும் புத்திசாலியாகவும், போர்க்கலைகளில் மிகவும் தேர்ந்தவராகவும் இருந்தார்.

வரலாறு

தொகு

1971இல் கர்நாடகாவின் மைசூரின் ககனகோட்டு வனப்பகுதியில் துரோணர் பிடிபட்டது. இது சிமோகாவில் சிறிது காலத்திற்கு மரங்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டது. தொண்டப்பாஜி என்பவர் துரோணரின் பாகனாவார். இவரது தந்தை சென்னகேசவையா அதை அடக்கும் பொறுப்பில் இருந்தார். இருவரும் ஒன்றாக வளர்ந்த பிறகு, இவர் மற்றவர்களை விட இந்த விலங்கை நன்றாக புரிந்து கொண்டார்.[3]

இறப்பு

தொகு

1998 இல் கர்நாடகாவின், குடகு, மைசூர் மாவட்டங்களில் எல்லைகளை தாண்டி நாகர்ஹோளே தேசிய பூங்காவில் மேய்ந்து கொண்டிருந்த போது, துரோணர் மின்சாரம் தாக்கி இறந்தது. ஒரு மரத்திலிருந்து இலைகளை சாப்பிட முயன்றபோது, உயர் அழுத்த மின் கம்பியில் விழுந்து உடனடியாக மின்சாரம் தாக்கியது. இதன் மரணத்தைத் தொடர்ந்து, துரோணருக்கு கர்நாடகாவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. David, Stephen (27 October 1997). "Dussehra Drona". India Today. பார்க்கப்பட்ட நாள் 2 November 2015.
  2. P. K. Surendran (31 August 2009). "Balarama is raring to go". Daily News and Analysis. பார்க்கப்பட்ட நாள் 22 October 2015.
  3. Srivatsa, Sharath A. (13 September 2005). "A gentle giant he cannot get out of his mind". தி இந்து. http://www.thehindu.com/2005/09/13/stories/2005091308450400.htm. பார்த்த நாள்: 22 October 2015. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=துரோணர்_(யானை)&oldid=3230872" இலிருந்து மீள்விக்கப்பட்டது