துர்கம் ஏரி
துர்கம் செருவு (Durgam Cheruvu) இராய்துர்கம் செருவு எனவும் அழைக்கப்படும் இது என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நன்னீர் ஏரியாகும். 83 ஏக்கர்கள் பரவியுள்ள இது ஐதராபாத்து நகருக்கு அருகில் அமைந்துள்ளது. ஜுபிளி ஹில்ஸ் மற்றும் மாதாபூர் பகுதிகளுக்கு இடையில் மறைந்திருப்பதால் இந்த ஏரி "சீக்ரெட் ஏரி" என்றும் அழைக்கப்படுகிறது. ஏரியைக் கடந்து செல்லும் துர்கம் செருவு பாலம் செப்டம்பர் 2020இல் திறக்கப்பட்டது.
துர்கம் ஏரி | |
---|---|
ஆள்கூறுகள் | 17°25′44″N 78°23′16″E / 17.42886°N 78.387794°E |
வகை | நீர்தேக்கம் |
மேலாண்மை முகமை | ஐதராபாத்து பெருநகர மேம்பாட்டு ஆணையம் |
மேற்பரப்பளவு | 83 ஏக்கர்கள் (34 ha)[1] |
அதிகபட்ச ஆழம் | 28 அடிகள் (8.5 m)[2] |
நீர்க் கனவளவு | 1,679,430 கன சதுர மீட்டர்கள் (1,361.54 acre⋅ft) |
குடியேற்றங்கள் | ஐதராபாத்து |
வரலாறு
தொகுகுதுப் ஷாஹி வம்சத்தின் (சுமார் 1518-1687) ஆட்சியின் கீழ் கட்டப்பட்ட இந்த ஏரி கோல்கொண்டா கோட்டையில் வசிப்பவர்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்தது.
சுற்றுலா
தொகு2001ஆம் ஆண்டில், உள்ளூர் அரசாங்கத்தின் சுற்றுலாத் துறை ஏரியை சுற்றுலாத் தலமாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, ஐந்து படகுகள் ஏரியில் நிறுத்தப்பட இருந்தன. [3]
2002 ஆம் ஆண்டில், ஏரி ஒரு பொழுது போக்குக்காக மீன்பிடிக்கச் செல்லும் மக்களுக்கு ஒரு இடமாக மாறத் தொடங்கியது. அருகிலுள்ள நகரமான ஐதராபாத்தில் இருந்து சிலர் வார இறுதிகளில் இந்த ஏரிக்கு பயணம் செய்கிறார்கள். பார்வையாளர்கள் பயன்படுத்த, உள்ளூர் நிறுவனங்கள் ஏரியை ஒரு மீன்பிடி மண்டலமாக மாற்றுவதன் மூலம் தங்கள் சுற்றுலா திட்டங்களை விரிவுபடுத்தினர். பல்வேறு அழகுபடுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஏரியைச் சுற்றியுள்ள பகுதி ஒளிரும், செயற்கை நீர்வீழ்ச்சிகள், ஒரு பாறைத் தோட்டம் மற்றும் மிதக்கும் நீரூற்று ஆகியவை சேர்க்கப்பட்டன. இது தவிர, சரியான இருக்கை ஏற்பாடுகள், 2 கிலோமீட்டர்கள் (1.2 mi) நடைபாதை மற்றும் உணவகங்கள் நிறுவப்பட்டன. பாறை ஏறுதல், மலையேற்றம், ஒரு கலைத் தொகுப்பு, கலைஞர்களுக்கான ஒரு சிற்பி பூங்கா போன்ற சாகச நடவடிக்கைகளும் ஈர்ப்புகளாக அறிமுகப்படுத்தப்பட்டன. ஒரே நேரத்தில் 1,500 பேரை வைத்திருக்கும் திறன் கொண்ட ஒரு ஆம்பிதியேட்டரும் பொது அணுகலுக்காக சேர்க்கப்பட்டது. முழு உடற்பயிற்சிக் கூடம் ஒன்று ₹20 மில்லியன் (US$2,50,000) செலவில் கட்டி முடிக்கப்பட்டது.
2018 - கே ரஹேஜா குழுமத்தின் பெருநிறுவன சமூகச் செயல்பாட்டுத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஏரி நடைபாதைகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. [4]
சர்ச்சைகள்
தொகுஏரியைக் கடந்து தனித்துவமான பாறை அமைப்புகள் இருப்பதால், இது ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. ஏரிக்கு அருகில் புதிய குடியிருப்பு பகுதிகளை உருவாக்க அனுமதிக்க வேண்டாம் என்று மாநில உயர் நீதிமன்றம் உள்ளூர் மாசு வாரியம் மற்றும் நகரின் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்திற்கு 2001இல் உத்தரவு பிறப்பித்தது. மேலும், நீதிமன்ற உத்தரவு இந்த நிறுவனக்களை ஏரிக்கு அருகிலுள்ள குடியிருப்புகளில் இருந்து ஏரிக்குள் பாயும் உள்ளூர் கழிவுநீரை தடுக்கும் அல்லது சேகரிக்க மற்றும் சுத்திகரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டது. இந்த அறிவிப்புகள் இருந்தபோதிலும், ஏரிப் படுகையில் மாசுபாடு மற்றும் சட்டவிரோத கட்டுமானங்கள் இரண்டையும் கட்டுப்படுத்துவதில் உள்ளூர் நிறுவனங்கள் தவறிவிட்டன.[5]
ஏரியில் மாசுபாட்டைக் கையாள, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளூர் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் 2006 இல் அமைக்கப்பட்டன. [6] ஆண்டுகள் செல்ல செல்ல, ஆலை செயல்படவில்லை. [7]
2013இல் இது இப்போது ஓய்வெடுக்க ஒரு இடமானது. ஒரு ஆம்பிதியேட்டரும் ஆன் தி ராக்ஸ் என்ற சிற்றுண்டிச்சாலையும் உள்ளது. படகோட்டலும் கிடைக்கிறது. [8] பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி ஆணையர் ஹரிச்சந்தனா தாசரி அவர்கள் ஏரியின் முன்பக்கத்தை ஒரு அற்புதமான பூங்காவாக மாற்றினார். [9]
புகைப்படத் தொகுப்பு
தொகு-
ஏரியின் அதிகாலை காட்சி
-
இராய்துர்கம் ஏரி
-
இராய்துர்கம் ஏரி
-
ஏரி அருகே ஒரு பாலம்
-
துர்கம் ஏரியின் பாலம் இரவில் ஒளிர்கிறது
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mission to reclaim Durgam Cheruvu". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 19 February 2010 இம் மூலத்தில் இருந்து 3 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121103150454/http://articles.timesofindia.indiatimes.com/2010-02-19/hyderabad/28139786_1_land-sharks-patta-lake.
- ↑ "Filth, flood make Durgam Cheruvu stink". தி இந்து. 17 September 2006 இம் மூலத்தில் இருந்து 5 டிசம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071205111952/http://www.hindu.com/2006/09/17/stories/2006091714270200.htm.
- ↑ Menon, Jayashankar (31 December 2001). "APTDC Introduces Additional Watersports Facilities". இந்தியன் எக்சுபிரசு இம் மூலத்தில் இருந்து 10 ஜூலை 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110710212605/http://www.expresstravelworld.com/20011231/travelindia4.shtml.
- ↑ "Archived copy". Archived from the original on 30 May 2018. பார்க்கப்பட்ட நாள் 9 June 2018.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ K., Venkateshwarlu (28 November 2002). "Threat to Durgam Cheruvu". The Hindu இம் மூலத்தில் இருந்து 23 ஜனவரி 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050123141707/http://www.hinduonnet.com/2002/11/28/stories/2002112809090300.htm.
- ↑ M. L., Melly Maitreyi (23 August 2006). "Sewage treatment plants: trial runs next month". தி இந்து இம் மூலத்தில் இருந்து 29 ஏப்ரல் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070429201816/http://www.hindu.com/2006/08/23/stories/2006082320400300.htm.
- ↑ S., Bachan Jeet Singh (6 April 2009). "Visiting Durgam Cheruvu? Better get a gas mask first". The Indian Express. http://expressbuzz.com/Cities/Hyderabad/visiting%20durgam%20cheruvu%20better%20get%20a%20gas%20mask%20first/55939.html.[தொடர்பிழந்த இணைப்பு]S., Bachan Jeet Singh (6 April 2009).
- ↑ "Durgam chervu". Aptdc.gov.in. Archived from the original on 10 December 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-12-19.
- ↑ Ghanate, Naveena (2018-08-01). "Durgam Cheruvu now a delight for walkers while Lakefront view awaits to August 15". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-08.