துர்க்மெனிஸ்தானின் பிராந்தியங்கள்

துர்க்மெனிஸ்தானின் நிர்வாக அலகு

துர்க்மெனிஸ்தான் ஐந்து பிராந்தியங்களாக அல்லது வெலாயட்லர் மற்றும் ஒரு தலைநகர நகர மாவட்டமாக ( şäher ) பிரிக்கப்பட்டுள்ளது .

தலைநகர் நகர மாவட்டம் மற்றும் துர்க்மெனிஸ்தானின் பிராந்தியங்கள்
Also known as:
மாகாணம்
வகைஒருமுக அரசு
அமைவிடம்துருக்மெனிஸ்தான்
எண்ணிக்கை5 பிராந்தியங்கள்
ஒரு தலைநகர் மாவட்டம்
மக்கள்தொகை(பிராந்தியங்கள் மட்டும்): 479,500 (பால்கன்) - 1,287,700 (மேரி)
பரப்புகள்(பிராந்தியங்கள் மட்டும்): 139,000 km2 (53,800 sq mi) (பால்கன்) – 97,300 km2 (37,550 sq mi) (அஹால்)
அரசுபிராந்திய அரசு, துருக்மெனிஸ்தான் அரசு
உட்பிரிவுகள்மாவட்டம்

துர்க்மெனிஸ்தான் ஐந்து மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை அஹால், பால்கன், தகோகுஸ், லெபாப், மேரி ஆகும். ஒவ்வொரு மாகாணமும் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. துர்க்மெனிஸ்தானில் 50 மாவட்டங்கள், 24 மாநகரங்கள், 15 நகரங்கள், 76 கிராமங்கள் மற்றும் 553 கிராமப்புற சபைகள் மற்றும் 1903 கிராமப்புற குடியிருப்புகள் உள்ளன. [1]

துர்க்மெனிஸ்தானின் தலைநகரம் அசுகாபாத் ஆகும். இது மாகாண அளவிலான அதிகாரங்களைக் கொண்ட (வெலாயட்) நிர்வாக மற்றும் பிராந்திய அலகு ஆகும். அசுகாபாத் ஆறு மாவட்டங்களைக் கொண்டுள்ளது ( எட்ராப்ளர் ). அவை பாக்டியார்லிக் மாவட்டம், பெர்கரார்லிக் மாவட்டம், கோபெட்டாக் மாவட்டம், அர்ச்சபில் மாவட்டம், அபாதன் மாவட்டம், ருகாபாத் மாவட்டம் ஆகியவை ஆகும். [1]

பிராந்தியம் ஐஎஸ்ஓ 3166-2 தலை நாகரம் பரப்பளவு [2] மக்கள் தொகை (2001) [3] குறிப்பு
அசுகாபாத் டி.எம்-எஸ் அசுகாபாத் 260 km2 (100 sq mi) 730,000 வரைபடத்தில் இல்லை
அஹால் பிராந்தியம் டி.எம்-ஏ அனாவ் 97,260 km2 (37,550 sq mi) 785,800 1
பால்கன் பிராந்தியம் டி.எம்-பி பால்கனாபாத் 139,300 km2 (53,800 sq mi) 479,500 2
தகோகுஸ் பிராந்தியம் டி.எம்-டி தகோகுஸ் 73,400 km2 (28,300 sq mi) 1,196,700 3
லெபாப் பிராந்தியம் டி.எம்-எல் துருக்மெனாபாத் 93,700 km2 (36,200 sq mi) 1,160,300 4
மேரி பிராந்தியம் டி.எம்-எம் மேரி 87,200 km2 (33,700 sq mi) 1,287,700 5

பிராந்தியங்களின் தலைவர்கள் துர்க்மெனிஸ்தானின் சனாதிபதியால் நியமிக்கப்படுகிறார் (துர்க்மெனிஸ்தானின் அரசியலமைப்பு, பிரிவு 80-81).

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 "Ministry of Foreign Affairs of Turkmenistan". www.mfa.gov.tm. பார்க்கப்பட்ட நாள் 2017-04-23.
  2. Passport of Turkmenistan 1998, National Institute of Statistics and Forecasting of Turkmenistan, Ashgabat, 1998 (in உருசிய மொழி).
  3. Social-economic situation of Turkmenistan in 2001, National Institute of State Statistics and Information of Turkmenistan, Ashgabat, 2002, pp. 68-69 (in உருசிய மொழி).