துளசிதாஸ் ஜாதவ்
துளசிதாஸ் ஜாதவ் (Tulsidas Jadhav) (ஜனவரி 25,1905-செப்டம்பர் 11,1999) இந்திய விடுதலை இயக்க வீரரும், அரசியல் ஆர்வலரும், சமூக சேவகரும், விவசாயியும் மற்றும் பம்பாய் சட்டப் பேரவை மற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினரும் ஆவார்.
துளசிதாஸ் ஜாதவ் | |
---|---|
பிறப்பு | 25 ஜனவரி 1905 தைதானே, சோலாப்பூர், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 11 செப்டம்பர்r 1999 மும்பை, இந்தியா |
தேசியம் | இந்தியா |
பணி | இந்திய விடுதலை இயக்க வீரர் |
அறியப்படுவது | விடுதலை இயக்க வீரர், சமூக ஆர்வலர், காந்தியவாதி |
துளசிதாஸ் சுபன்ராவ் ஜாதவ் 1905 ஜனவரி 25 இந்தியாவில் உள்ள மகாராட்டிரம் மாநிலத்தில் சோலாப்பூர் மாவட்டம் , தைதானே என்ற ஊரில் பிறந்தார். [1] அரிபாய் தியோகர்ன் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.[2]
குடும்பம்
தொகுஇவர் 1913 இல் ஜனாபாய் என்பவரை மணந்தார் [2] இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் நான்கு மகள்கள் இருந்தனர். [2] இவரது ஒரு மகள் கலாவதி, ஜனவரி 1982 முதல் பிப்ரவரி 1983 வரை மகாராட்டிராவின் முதலமைச்சராக இருந்த[3] பாபாசாகேப் போசலேவை மணந்தார். மற்றொரு மகள் நிர்மலதாய் சங்கர்ராவ் தோகல் 1972 இல் சோலாப்பூர் நகர தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் [4]
தொழில்
தொகுஒரு வேளாண்மை விவசாயியான துளசிதாஸ் [2] [5] சந்தானத் நகர், வைரக், தால் போன்ற இடங்களில் போகவதி சககாரி சர்க்கரை ஆலையை நிறுவினார். இது சோலாப்பூர் பகுதியில் உள்ள ஆரம்பகால சர்க்கரை ஆலை மற்றும் மகாராட்டிராவின் ஆரம்பகால சர்க்கரை ஆலைகளில் ஒன்றாகும்.
அரசியல் வாழ்க்கை
தொகுதுளசிதாஸ் 1921 முதல் 1947 வரை இந்திய தேசிய காங்கிரசுடன் தொடர்பிலிருந்தார். சோலாப்பூரில் இருந்த தீவிர இந்திய விடுதலை இயக்க வீரர்களில் ஒருவராக இருந்தார். 1930 இல் மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியாகிரகத்தைத் தொடங்கியபோது கிருஷ்ணாஜி பீம்ராவ் அந்த்ரோலிகர், துளசிதாஸ் ஜாதவ் மற்றும் ஜஜூஜி போன்ற இளம் தொழிலாளர்கள் முன்வந்து காந்தியத் தத்துவத்தின் தீவிரப் பின்பற்றுபவர்களாக மாறினர்.[6] 1930 ஆம் ஆண்டில் வகுப்புவாத காலத்தில் இவர் 1931, 1932, 1941 மற்றும் 1942 ஆம் ஆண்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டார்.[1] [2] 1937-1939, 1946-1951 மற்றும் 1951-57 வரை பம்பாய் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். [1] [2] ஒருமுறை சத்தியாகிரகத்தின் போது, பிரித்தானிய காவல் அதிகாரி இவரது மார்பில் ஒரு துப்பாக்கியை வைத்து, அவரை வெளியேறும்படி கட்டளையிட்டார். ஆனால் இவர் அசைய மறுத்தார் - அதிர்ஷ்டவசமாக இவர் விடுவிக்கப்பட்டார்.[6] துளசிதாஸ் மகாத்மா காந்தியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். காந்தி 1932 இல் எரவாடா சிறையில் இருந்தபோது அவரது செயலாளராகவும் பணியாற்றினார்.[7][8]
சுதந்திரத்திற்குப் பிறகு, துளசிதாஸ் 1947 இல் காங்கிரசை விட்டு வெளியேறினார். வேறு சில முன்னாள் காங்கிரசு நண்பர்களுடன் சேர்ந்து, இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சியை உருவாக்கினார். அதில் இவர் நிறுவனர் உறுப்பினராக இருந்தார். [2] 1951 ஆம் ஆண்டு பம்பாய் சட்டமன்றத் தேர்தலில் பார்சி-மாதா தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார்.
1957 இல் தனது சகாக்களுடன் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார். [9] 1957 தேர்தலில் சோலாப்பூர் தொகுதியில் இரண்டாவது மக்களவைக்கு போட்டியிட்ட இவர் தோல்வியடைந்தார். 1962-67 வரை நாந்தேடு தொகுதியிலிருந்து மூன்றாவது மக்களவை உறுப்பினராகவும், காங்கிரசு கட்சி வேட்பாளராக பாரமதியிலிருந்து நான்காவது மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] துளசிதாஸ் சில சமயங்களில் யஷ்வந்த்ராவ் சவானின் கொள்கைகள் மற்றும் முடிவுகளின் பல விஷயங்களில் கடுமையான எதிர்ப்பாளராக இருந்தார். அதற்காக 1971 தேர்தலில் இவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இவர் மகாராட்டிரா காங்கிரசின் தீவிர முகாமின் ஒரு பகுதியாக இருந்தார். இதில் சங்கர்ராவ் மோர் மற்றும் ஆர்கே காட்லிகர் ஆகியோரும் அடங்குவர்.[10] [11]
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் வரைவுக்கான நாடாளுமன்றக் குழுக்களாகவும் பணியாற்றினார்.[2] மற்றவற்றுடன், இவர் மகாராட்டிர பிரதேச காங்கிரசு கமிட்டியின் உறுப்பினராகவும் பணியாற்றினார். மேலும் 1957-60 வரை அதன் பொதுச் செயலாளராக இருந்தார். மின்சார ஆலோசனைக் குழு, காசநோய் வாரியம், சாலைப் பாதுகாப்பு பற்றிய ஆய்வுக் குழு மற்றும் தொழுநோய்க் குழு ஆகியவற்றின் உறுப்பினராக இவர் தனது சேவைகளை வழங்கினார்.[2] [12] 1985 இல், இந்தியக் குடியரசுத் தலைவர் கியானி ஜைல் சிங்கால் "அமைதியின் திருத்தூதர்" விருது இவருக்கு வழங்கப்பட்டது.[8]
சமூக சீர்திருத்தவாதி
தொகுஒரு சமூக சீர்திருத்தவாதியாக, அரிசன் மற்றும் தலித் சமூகங்களின் மேம்பாட்டிற்காக 1930 ஆம் ஆண்டு முதல் தனது இடைவிடாது உழைத்தார்.[2] [5]
இறப்பு
தொகுதுளசிதாஸ் ஜாதவ் 11 செப்டம்பர் 1999 அன்று மும்பையில் இறந்தார்.[5] [13] [14]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Yaśavantarāva Cavhāṇa, vidhimaṇḍaḷātīla nivaḍaka bhāshaṇe, Volume 2 by Yaśavantarāva Cavhāṇa Pratishṭhāna Mumbaī, 1990 - Maharashtra (India)pp: 31-32, 447
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 4th Lok Sabha Members Bioprofile
- ↑ "Babasaheb Bhosale dead". The Hindu (India). 7 October 2007 இம் மூலத்தில் இருந்து 25 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121025170344/http://www.hindu.com/thehindu/holnus/004200710070340.htm. பார்த்த நாள்: 6 October 2007.
- ↑ "Babasaheb Anantrao Bhosale The eighth Chief Minister Of Maharashtra". Archived from the original on 2019-02-11. பார்க்கப்பட்ட நாள் 2024-04-17.
- ↑ 5.0 5.1 5.2 Reference Made To The Passing Away Of Shri Tulshidas Jadhav On 11Th ... on 13 March 2000
- ↑ 6.0 6.1 The Gazetteer SHOLAPUR DURING POST-1818 PERIOD
- ↑ International Peace Research Newsletter. International Peace Research Association. 1994. pp. 36, 45. பார்க்கப்பட்ட நாள் 5 March 2015.
- ↑ 8.0 8.1 "War Protestor". Archived from the original on 2018-08-30. பார்க்கப்பட்ட நாள் 2024-04-17.
- ↑ Journal of Shivaji University: Humanities, Volumes 35-38 by Shivaji University, 2000 pp:28
- ↑ PMO Diary: The emergency by Bishan Narain Tandon; Konark Publishers Pvt .Limited, 2006 pp: 35
- ↑ Link - Volume 12, Part 1 - Page 14
- ↑ Report - Page 112 India (Republic). Study Group on Road Safety, Tulsidas Jadhav
- ↑ व्यंकटेश कामतकर (2005). स्वातंत्र्य सेनानी तुळशीदास जाधव. महाराष्ट्र राज्य साहित्य आणि संस्कृती मंडळ.
- ↑ Lok Sabha Debates by India. Parliament. House of the People Lok Sabha Secretariat., 2000 pp:6