துளிபல்லா நரேந்திர குமார்

இந்திய அரசியல்வாதி

துளிபல்லா நரேந்திர குமார் (Dhulipalla Narendra Kumar) தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதியாவார். இவர் 1994 - 2019 வரை பொன்னூர் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் முன்னாள் உறுப்பினர் ஆவார். 1994 ஆம் ஆண்டு சாலை விபத்தில் தனது தந்தை துளிபல்லா வீரையா சௌத்ரியின் திடீர் மறைவு காரணமாக அரசியலில் நுழைந்தார். ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்கு 1994-1999[3], 1999-2004[4], 2004-2009[3], 2009-2014[5][6][7][8] , 2014-2019 என ஐந்து முறை தொடர்ந்து வெற்றி பெற்ற சில உறுப்பினர்களில் இவரும் ஒருவர். தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், ஏலூரு மக்களவைத் தொகுதி மற்றும் விஜயவாடா மக்களவைத் தொகுதி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். [9]

துளிபல்லா நரேந்திர குமார்
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை
முன்னையவர்துளிபல்லா வீரையா சௌத்ரி
தொகுதிபொன்னூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1967-12-14)14 திசம்பர் 1967
ச்ந்தலப்புடி[1]
துணைவர்ஜோதிர்மணி[1][2]
பிள்ளைகள்
  • வேர வைஷ்ணவி
  • நாக சாய் விதீப்தி
[1]
பெற்றோர்
  • துளிபல்லா வீரையா சௌத்ரி
  • பிரமீளா

ஆனால், 2019 இல் இவர் 1100 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். [10] [11]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Telugu Political Wiki".
  2. "About Us". Archived from the original on 2021-08-19. பார்க்கப்பட்ட நாள் 2023-11-07.
  3. 3.0 3.1 "Ponnur Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com.
  4. "Ponnur Vidhan Sabha Election - Ponnur Assembly Election Results, Polling Stations, Voters, Candidates". www.electionsinindia.com. Archived from the original on 2021-01-16. பார்க்கப்பட்ட நாள் 2023-11-07.
  5. "Ponnur Election Results 2019 | 2014 | 2009 | 2004 - 1955 | Present MLA".
  6. "AP Cong Seeks Disqualification of 9 of Its MLAs". www.outlookindia.com/.
  7. "TDP whip Dhulipalla Narendra Kumar escapes unhurt in mishap". Sakshi Post. 30 June 2013.
  8. "Cong, TDP to seek disqualification of 'rebel' MLAs" – via The Economic Times.
  9. "TDP announces in-charges for Parliamentary constituencies". 27 September 2020. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/tdp-announces-in-charges-forparliamentary-constituencies/article32709128.ece. 
  10. "Ponnur Assembly Election Results 2019 Live: Ponnur Constituency (Seat) Election Results, Live News".
  11. "ఈయన గాని ఇంకోసారి ఎమ్మెల్యేగా గెలిస్తే...ఇక్కడ రికార్డు బద్దలే!".