துளிபல்லா வீரையா சௌத்ரி

இந்திய அரசியல்வாதி

துளிபல்லா வீரையா சௌத்ரி ( Dhulipalla Veeraiah Chowdary ) தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும், ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். [2] என். டி. ராமராவ் ஆட்சிக் காலத்தில் ஆந்திரப் பிரதேச அரசில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்தார்.

துளிபல்லா வீரையா சௌத்ரி
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் முன்னாள் உறுப்பினர்
பதவியில்
1983–1994
தொகுதிபொன்னூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1942-02-19)19 பெப்ரவரி 1942
சிந்தாலப்புடி
இறப்பு24 சனவரி 1994(1994-01-24) (அகவை 72) [1]
நாரகோடூர்
காரணம் of deathசாலை விபத்து
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
துணைவர்பிரமிளா
பிள்ளைகள்3

இவர் 1983 முதல் 1994 வரை பொன்னூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார் [3] சங்கம் பால் பண்ணை உற்பத்தியாளர் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் வெற்றியில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். [4]

குறிப்பாக ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்திலுள்ள கிராமப்புற பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த இவர் பாடுபட்டார். பால் உற்பத்தியாளர்களுடனான தொடர்புக்காக இவர் பிரபலமாக பால வீரையா என அறியப்பட்டவர்.[5] பால் பண்ணைத் தொழிலுக்கு இவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரித்து, ஐதராபாத்தில் உள்ள ஆந்திரப் பிரதேச பால் வளர்ச்சிக் கூட்டுறவு கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. [4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Launch of schemes marks dairy founder's death anniversary". The Hindu. 25 January 2021. https://www.thehindu.com/news/cities/Vijayawada/launch-of-schemes-marks-dairy-founders-death-anniversary/article33654612.ece. 
  2. "Andhra Pradesh Assembly Election Results in 1983".
  3. "Andhra Pradesh Assembly Election Results in 1985". பார்க்கப்பட்ட நாள் 2020-12-30.
  4. 4.0 4.1 "About us | Dairy Processing Polytechnic". பார்க்கப்பட்ட நாள் 2020-12-30.
  5. "About Us". dvchospitals.com. Archived from the original on 2021-08-19. பார்க்கப்பட்ட நாள் 2020-12-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துளிபல்லா_வீரையா_சௌத்ரி&oldid=4108893" இலிருந்து மீள்விக்கப்பட்டது