துவஷ்டா
'துவஷ்டா (Tvashta (சமக்கிருதம்: त्वष्टा), வேத கால அரசுர்களைப் போன்ற தைத்திரியர் குல பிரஜாபதி மற்றும் 12 ஆதித்தர்களில் ஒருவர் ஆவர். காசியபர்-அதிதிக்குப் பிறந்தவர். இவரது மகன்கள் மூன்று தலைகள் கொண்ட விசுவரூபன் மற்றும் இந்திரனை வென்ற விருத்திராசூரன் ஆவார். துவஷ்டா, விசுவரூபன் மற்றும் விருத்திராசூரனைக் குறித்த குற்ப்புகள் ரிக் வேதத்தின் புருஷ சூக்தம், பாகவத புராணம் மற்றும் மகாபாரதத்தில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவலோகச் சிற்பியான விஸ்வகர்மாவுடன் துவஷ்டா ஒப்பிடப்படுகிறார்.[1]
துவஷ்டா | |
---|---|
அதிபதி | சொர்க்கத்தை நிர்மாணிப்பவர் தெய்வீக நடைமுறைகளை உருவாக்குபவர் கருப்பைக்கு அதிபதி |
வகை | தைத்தியர்கள் |
ஆயுதம் | கோடாலி |
துணை | ரேச்சனா |
பெற்றோர்கள் | காசியபர் மற்றும் அதிதி |
குழந்தைகள் | விசுவரூபன், விருத்திராசூரன் |
நூல்கள் | புருஷ சூக்தம், பாகவத புராணம் , மகாபாரதம் |
தொன்மவியல்
தொகுபாகவத புராணம் துவஷ்டாவின் வரலாறு கூறுகிறது. தேவகுரு பிரகஸ்பதி இந்திரலோகத்தில் வருவதை அறியாமல் இந்திரன் தன்னை மறந்து சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான். இத தனக்கு ஏற்பட்ட அவமானம் எனக்கருதி பிரகஸ்பதி இந்திரலோகத்தை விட்டு அகன்றார்.
பிரகஸ்பதி சென்ற பிறகு இந்திரன் தனது தவறை அறிந்து வருந்தினான். இந்நேரத்தில் அசுரர்கள் தேவலோகத்தின் மீது படையெடுத்து தேவர்களை விரட்டியடித்தனர். அவர்களை நையப் புடைத்து விரட்டி விட்டார்கள். தேவர்கள் பிரம்மனிடம் முறையிட, துவஷ்டாவின் மகன் விசுவரூபாவை தற்காலிக தேவகுருவாக நியமித்துக் கொள்க என அறிவுரை கூறினார். தேவர்கள் விசுவரூபாவிடம் சென்று தங்களின் குருவாக இருக்க வேண்டினர். தேவர்களின் கோரிக்கையை ஏற்ற விசுவரூபா ஏற்றுக் கொண்டார். விசுவரூபனின் வருகையால் தேவர்கள் அசுரர்களை வென்றனர். விசுவரூபாவிற்கு மூன்று தலைகள் இருந்தன. ஒரு தலை உண்ணவும், மற்றொரு தலை பருகவும், மூன்றாவது தலை யாகங்களில் கிடைக்கும் சோம ரசத்தைக் குடிப்பதற்கென்றே பயன்பட்டது. தேவர்கள் வெற்றிபெற்ற நிலையில் அந்த வெற்றிக்கு உதவிய விசுவரூபாவின் மூன்று தலைகளையும் இந்திரன் வெட்டி விட்டான்.
விசுவரூபாவின் தந்தையாகிய துவஷ்டா, இந்திரனின் நன்றி கெட்டச் செயலைக் கேள்விப்பட்டு, இந்திரன் மற்றும் தேவர்களையும் அழிக்க மாபெரும் யாகம் நடத்தினான். அந்த வேள்வியில் விருத்திராசூரன் தோன்றினான். தைத்திய சேனையோடு தேவலோகம் சென்ற விருத்திராசூரன் தேவர்களையும், இந்திரனையும் விரட்டி அடித்தான். தேவர்கள் விஷ்ணுவிடம் அடைக்கலம் அடைந்தனர். தசீசி முனிவரின் முதுகெலும்பைப் பெற்று, அதனை ஆயுதமாகக் கொண்டு போர் புரிந்தால் அசுரர்களை வீழ்த்தலாம் என விஷ்ணு இந்திரனுக்கு யோசனை கூறினார். விஷ்ணு கூறியவைகளை தசீசி முனிவரிடம் இந்திரன் எடுத்துரைத்தார்.
தசீசி முனிவரும் மகிழ்ச்சியுடன் தம் உடலை நீப்பதாகவும், தேவர்கள் அந்த எலும்பை எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறினார். தசீசி அப்படியே உடலை நீத்தார். விஸ்வகர்மாவின் துணையுடன் தசீசி முனிவரின் முதுகெலும்பைக் கொண்டு வஜ்ராயுதம் தயாரிக்கப்பட்டது. புதிய ஆயுதமான வஜ்ராயுதத்தைக் கொண்டு விருத்திராசூரனை இந்திரன் போரில் கொன்றான்.
பிராமணனான துவஷ்டா முனிவருக்கு பிறந்த விருத்திராசூரனை கொன்றதால், இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோசம் பற்றிக்கொண்டது. ப எங்கு சுற்றியும் அந்தத் தோஷத்தைப் போக்கமுடியாத இந்திரன் மானசரோவருக்குச் சென்று அங்குள்ள தாமரை மலர்த் தண்டில் ஒளிந்திருந்தான். தண்டில் ஒளிந்திருந்த காலத்தில நகுசன் இந்திரப் பதவியில் இருந்தான்.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Dalal, Roshen (2014-04-15). The Vedas: An Introduction to Hinduism's Sacred Texts (in ஆங்கிலம்). Penguin UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8475-763-7.