துவிதா
துவிதா (Duvidha) என்பது 1973 ஆம் ஆண்டு இந்தியாவில் மணி கவுல் இயக்கிய ஒரு பேய்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் விசயதன் தேத்தாவின் இதே பெயரிலான இராசத்தான் மாநிலத்தில் வழக்கிலிருந்த கதையை அடிப்படையாகக் கொண்டது.[1] இப்படத்தில் ரவி மேனன் மற்றும் ரைசா பதம்சி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. சிறந்த இயக்கத்திற்கான தேசிய திரைப்பட விருதும் [2] 1974 ஆம் ஆண்டுக்கான பிலிம்பேர் விருதுகளில் சிறந்த திரைப்படத்திற்கான விமர்சகர்கள் விருதும் இப்படத்திற்கு கிடைத்தன.[3] சாருக்கான் மற்றும் இராணி முகர்ச்சி முக்கிய வேடங்களில் நடிக்க இந்தப் படம் 2005 ஆம் ஆண்டு பகேலி என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.
துவிதா Duvidha | |
---|---|
இயக்கம் | மணி கவுல் |
தயாரிப்பு | இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் தேசிய இசை நடன மையம் |
திரைக்கதை | மணி கவுல் |
நடிப்பு | இரவி மேனன் இரைசா பத்மாசீ |
ஒளிப்பதிவு | நவ்ரோசு ஒப்பந்தக்காரர் |
படத்தொகுப்பு | இரவி பட்நாயக்கு |
வெளியீடு | 1973 |
ஓட்டம் | 84 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
கதை
தொகுஇத்திரைப்படம் இராசத்தானின் கிராமப்புற பின்னணியில் உருவாகியது. திரைப்படத்தின் கதை விசயதன் தேத்தாவின் கதையை அடிப்படையாகக் கொண்டதாகும். ஒரு வணிகரின் மகனான கிரிசன்லால் (ரவி மேனன்) பற்றி இராசத்தானில் இருந்த பிரபலமான நாட்டுப்புறக் கதையுடன் இத்திரைப்படத்தின் கதை தொடர்பு கொண்டிருந்தது.[1]
நடிகர்கள்
தொகு- இலச்சியாக ரைசா பதம்சீ
- கிருட்டிணலால், வியாபாரியின் மகனாக ரவி மேனன்
- அர்டன்
- சம்புதன்
- மனோகர் லாலாசு
- கானா ராம்
- போலா ராம்
தயாரிப்பு
தொகுசோத்பூர் மாவட்டத்தில் உள்ள பிலாரா தாலுக்காவின் போருண்டா கிராமத்தில், எழுத்தாளர் விசய்தான் தேத்தா' பிச்சியின் கிராமத்தில் படம் விரிவாகப் படமாக்கப்பட்டது.[1]
இசை
தொகுபடத்தின் இசையை இராசத்தானின் நாட்டுப்புற இசைக்கலைஞர்களான ரம்சான் அம்மு, லத்தீப் மற்றும் சாகி கான் ஆகியோர் வழங்கினர்.[4]
மறு ஆக்கம்
தொகு2005 ஆம் ஆண்டு வெளியான அமோல் பலேகர் திரைப்படமான பகேலியும் இதே கதையை அடிப்படையாகக் கொண்டதாகும். .
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Profile". upperstall.com.
- ↑ "21st National Film Awards" (PDF). Directorate of Film Festivals. p. 2,32. பார்க்கப்பட்ட நாள் 29 September 2011.
- ↑ "Filmmaker Mani Kaul dead". 6 July 2011. http://www.thehindu.com/arts/cinema/article2163928.ece.
- ↑ "Duvidha". Cinemas of India. Archived from the original on 4 November 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-10-08.
புற இணைப்புகள்
தொகு- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Duvidha
- "Duvidha". Cinemas of India (NFDC). Archived from the original on 4 November 2013.