ராஜஸ்தானின் இசை

ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பரிய இசை பாடல்கள்

ராஜஸ்தானின் இசை எனப்படும் இந்த வகை இசை, இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் இருந்து உருவானதாகும். இந்திய இசையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய உதய்பூர், ஜோத்பூர் மற்றும் ஜெய்ப்பூர் போன்ற பகுதிகள் உட்பட்ட பல முக்கிய மையங்களின் தாயகமாகும். இப்பிராந்தியத்தின் இசையானது பரந்துபட்ட இந்தியாவின் பகுதிகள் மற்றும் இந்திய எல்லையின் மறுபுறமான நாகா, புக்மாங்கா மற்றும் பாகிஸ்தான் மாகாணமான சிந்து போன்ற பகுதிகளில் உள்ள இசையின் பண்புகளையும் சில ஒற்றுமைகளையும் பகிர்ந்து கொள்கிறது.

முன்னோட்டம்

தொகு

ராஜஸ்தான் மாநிலத்தில் லங்காக்கள், சபேரா, போபா மற்றும் மங்கனியர்கள் என பல்வேறு பிரிவுகளில் இசைக்கலைஞர்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் இரண்டு பாரம்பரிய பிரிவுகள் பின்வருவது போல காணப்படுகிறது லங்காக்கள் எனப்படும் இசைக்கலைஞர்கள் இசுலாம் சமுதாயத்தின் பாணியை பின்பற்றி இசையமைத்து அவர்களையே ரசிகர்களாகவும் கொண்டவர்கள். ஆனால் மங்கனியர்கள் எனப்படும் இசைக்கலைஞர்களோ இசை அனைவருக்குமானது என்ற தாராளவாத அணுகுமுறையைக் கொண்டவர்களாவர்.

Rajasthani artists

பணிஹாரி என்று அழைக்கப்படும் இசைக்கோவை பெண்களால் செய்யப்படும் வேலைகளை மையமாக கொண்டதாகும். ராஜஸ்தானின் பாலைவன கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கிணறுகள் மற்றும் தண்ணீர் தேடி அலைவதை பற்றிய பாடல்களில் தொகுப்பாக காணப்படுகிறது. பல்வேறு குழுவினரால் இசைக்கப்படும் பிற பாடல் தொகுப்புகள், பொதுவாக ஆலாபனையுடன் தொடங்குகின்றன, இத்தகைய ஆலாபனைகள் பாடல்களின் ஆரம்பத்தை சிறப்பாக தொடங்க உதவுகிறது. அதைத் தொடர்ந்து ஒரு ஜோடி (தூபா) ஓதப்படும். தேவநாராயண பகவான், கோகாஜி, ராம்தேஜி,பாபுஜி மற்றும் தேஜாஜி போன்ற வீரர்களைப் பற்றி காவிய பாடல்கள் ராஜஸ்தானிய இசையில் அதிகமாக உள்ளன. .

மாறி வரும் பருவங்களை பற்றிய கொண்டாட்டமான பாடல்கள் ராஜஸ்தானின் நாட்டுப்புற இசையில் மையச்சரடாக உள்ளது. பருவமழை அல்லது அறுவடை காலத்தின் கொண்டாட்டங்கள் இத்தகைய பாரம்பரிய நாட்டுப்புற பாடல்களுக்கு உயிரிழையாக உள்ளது. பெரும்பான்மையான பாடல்கள் ராஜஸ்தானின் உள்ளூர் மக்களின் அன்றாட நடவடிக்கைகளை மையமாகவே கொண்டுள்ளது . உதாரணமாக ஜீரா (சீரகம் ) விதைப்பது கடினம் என்பதாக ஒரு பாடலும் அது போலவே புதினா பற்றிய மற்றொரு பாடலும் அந்த தாவரங்கள் ஒவ்வொரு ராஜஸ்தானின் குடும்பத்தின் பல்வேறு உறுப்பினர்களால் எப்படி விரும்பப்படுகிறது என பாடப்படுகிறது. (புதினாவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட உள்ளூர் மதுபானம் பற்றிய உருவகக் குறிப்பும் உள்ளது). நாளுக்கொரு கருப்பொருளை மையமாக கொண்டு பாடல்களை பாடுவது பாரம்பரிய ராஜஸ்தானி நாட்டுப்புற இசையின் மையமாகும் .

மிகவும் பிரபலமான ராஜஸ்தானி மாண்ட் பாடகர்களில் ஒருவர் பிகானேர் கரானாவின் அல்லா ஜிலாய் பாய் ஆவார்.

குறிப்பிடத்தகுந்த ராஜஸ்தானி இசைப்பாடகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜஸ்தானின்_இசை&oldid=3651393" இலிருந்து மீள்விக்கப்பட்டது