தூக்குத் தூக்கி (1935 திரைப்படம்)

ஆர். பிரகாஷ் இயக்கத்தில் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தூக்குத் தூக்கி 1935 ஆம் ஆண்டு வெளிவந்த 15,000 அடி நீளமுடைய கிராமீயத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. வி. வி. பந்துலு, கிளௌன் சுந்தரம், கே. டி. ருக்மணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

தூக்குத் தூக்கி
இயக்கம்ஆர். பிரகாஷ்
தயாரிப்புராயல் டாக்கீஸ்
கதைஉடுமலை நாராயண கவி
நடிப்புசி. வி. வி. பந்துலு,
கிளௌன் சுந்தரம்,
கே. டி. ருக்மணி,
எம். ஆர். கமலம்,
தேவகி
வெளியீடு1935
நீளம்15000 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

கூடுதல் செய்திகள்

தொகு

1935 இல் வந்த ‘தூக்குத் தூக்கி’யின் புதிய பதிப்பு, சிவாஜி கணேசன் நடிப்பில் 1954 இல் வெளியானது. இதற்குச் சான்றாக இரண்டு படங்களுடனும் நேரடி தொடர்புள்ள ஒருவர் உடுமலை நாராயண கவி ஆவார். இத்தகைய உடுமலைதான், மதுரையைச் சேர்ந்த 'ராயல் டாக்கி டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்' 1935 இல் எடுத்த ‘தூக்குத் தூக்கி’யின் கதை, வசனம் பாடல்களை எழுதியவர். மேலும், சென்னையில் முதன்முதலில் பேசும் பட ஸ்டூடியோவை அமைத்து அதை ஒலிநகரம் ஆக்கிய ஏ. நாராயணன் மேற்பார்வையில், ஆர். பிரகாஷின் திரைக்கதை, கேமரா, இயக்கத்தில் 1935 இன் ‘தூக்குத் தூக்கி’ திரைக்கு வந்தது. சிவாஜி கணேசன் 1954 இல் நடித்த பிரதான வேடத்தை இப்படத்தில் நடித்தவர் சி. வி. வி. பந்துலு.[2]

சான்றாதாரங்கள்

தொகு
  1. "1935 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2018-10-20. பார்க்கப்பட்ட நாள் 2016-10-18.
  2. "மூன்று அவதாரங்கள் எடுத்த 'தூக்குத் தூக்கி!'". www.dinamalarnellai.com (தமிழ்). Archived from the original on 2021-10-06. பார்க்கப்பட்ட நாள் 2016-10-18.