தூணக்கடவு அணை

தூணக்கடவு அணை (Thunakkadavu Dam) கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள நீர்த்தேக்கமாகும். தமிழ்நாட்டின் முதல்வராக திரு. காமராசர் அவர்கள் இருந்த பொழுது அவரது தலைமையிலான அரசினால் இந்த அணை கட்டப்பட்டது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின்[1] கீழ் வரும் இந்த அணையின் செயல்பாடுகளையும், பராமரிப்பையும் தமிழ்நாடு அரசு கவனித்துக்கொண்டாலும் இந்த அணை கேரள மாநில எல்லைக்குள் வருவதால் அணையின் உரிமை கேரள அரசிற்கு சொந்தமாகும். இந்த அணையின் மொத்தக் கொள்ளளவு இருபத்தி இரண்டு அடியாகும்[2]. பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தின் எல்லைக்குள் உள்ள இந்த அணைக்கு பரம்பிக்குளம் அணை, தூணக்கடவு ஆறு[3], பெருவாரிப்பள்ளம் அணை, மலை, வனப்பகுதிகளில் இருந்து நீர் வரத்து உள்ளது.

தூணக்கடவு அணை
தூணக்கடவு அணை is located in இந்தியா
தூணக்கடவு அணை
Location of தூணக்கடவு அணை in இந்தியா
தூணக்கடவு அணை is located in கேரளம்
தூணக்கடவு அணை
தூணக்கடவு அணை (கேரளம்)
தூணக்கடவு அணை is located in தமிழ் நாடு
தூணக்கடவு அணை
தூணக்கடவு அணை (தமிழ் நாடு)
அமைவிடம்பாலக்காடு மாவட்டம், கேரளம்
புவியியல் ஆள்கூற்று10°26′3″N 76°46′54″E / 10.43417°N 76.78167°E / 10.43417; 76.78167
திறந்தது1965
அணையும் வழிகாலும்
உயரம்26.91 m (88.3 அடி)
நீளம்314 m (1,030 அடி)
வழிகால் அளவு495 m3/s (17,500 cu ft/s)

தூணக்கடவு அணைப் பகுதியில் 'கொம்பேறி மூக்கன்' உள்ளிட்ட நிறைய தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளது. 19 பிப்ரவரி 2010 இல் பரம்பிக்குளம் புலிகள் பாதுகாப்பகம் தொடங்கப்பட்ட பிறகு இப்பகுதியில் திரைப்படப் படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கட்டப்பட்ட ஒரே இரட்டை அணை காமராசர் அரசால் கட்டப்பட்ட தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் அணைகள் ஆகும்[4]

நீர்த்தேக்கம்

தொகு
 
தூணக்கடவு நீர்த்தேக்கம்

இந்த ஆற்றிலிருந்து நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள கால்வாய் ஒன்றும் செல்கிறது. நீர்த்தேக்கத்தில் மீன்பிடி தொழிலும் நடைபெறுகிறது. நீர்த்தேக்கத்தைச் சுற்றி சுற்றுலாவும் தொழிலும் நடைபெறுகிறது.[5] பரம்பிக்குளம் அணையிலிருந்து 30 மெகாவாட்டு மின் உற்பத்தி நிலையும் செயல்படுகிறது. மின் உற்பத்திக்குப் பின்னர் தண்ணீர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணையை அடைகிறது.[6]

நீர்ப்பகிர்வு

தொகு
 
நீர்க்கசிவுப் பாதை

அணையின் நீர்த்தேக்கத்தில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் விவசாயத்திற்கு முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்திலிருந்து கேரளாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் 7.25 டி.எம்.சி தண்ணீர் வழங்க திட்டத்தில் ஒப்பந்தமிடப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. "பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம்".
  2. "தூணக்கடவு அணை நீர்மட்டம்". Archived from the original on 2022-03-16. பார்க்கப்பட்ட நாள் 2020-03-18.
  3. "தூணக்கடவு ஆறு".
  4. "இரட்டை அணை".
  5. "Parambikulam Tour Package | Tree Top Hut | Thunakadavu Dam | Tunakadavu Teehouse". westernghatstourism.com. பார்க்கப்பட்ட நாள் 2021-07-08.
  6. . 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூணக்கடவு_அணை&oldid=3781209" இலிருந்து மீள்விக்கப்பட்டது