அரசு மருத்துவக் கல்லூரி தூத்துக்குடி

(தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி (Thoothukudi Medical College) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்திருக்கும் அரசு மருத்துவக்கல்லூரிகளில் ஒன்றாகும். தென்தமிழகத்தில் தூத்துக்குடி நகரில் உள்ள இக்கல்லூரி டி.கே.எம்.சி அல்லது அரசு மருத்துவக்கல்லூரி, தூத்துக்குடி என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் இக்கல்லூரி இந்திய மருத்துவக் கழகம் மற்றும் உலகசுகாதார நிறுவனத்தின் அங்கீகாரங்களை பெற்றுள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி
வகைஅரசு
உருவாக்கம்2001
துறைத்தலைவர்மரு. சிவக்குமார் MD.,
Managementமக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை
அமைவிடம், ,
வளாகம்25 ஏக்கர்கள் (0.10 km2)
சேர்ப்புதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம்
இணையதளம்http://www.tmctkd.ac.in

வரலாறு

தொகு

தமிழக அரசு 16.08.2000ஆம் ஆண்டில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியினை நிறுவியது.[1] இக்கல்லூரியானது முதலில் கடற்கரை சாலையிலுள்ள மீன்பிடி கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய (மீன்வளக் கல்லூரி) வளாகத்திலிருந்து செயல்பட்டது. பின்னர் 2001ஆம் ஆண்டில் தூத்துக்குடி நகரத்திற்கு மாற்றப்பட்டது.

சூலை 2001 முதல் மருத்துவப் பட்டப் படிப்புக்கு ஆண்டுக்கு 100 மாணவர்கள் சேர்க்கை என்ற எண்ணிக்கையுடன் கல்லூரி செயற்படத் தொடங்கியது. புதியதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டன. அடுத்தடுத்த ஆண்டுகளில் மருந்தியல், நோயியல், நுண்ணுயிரியல், சமூகம் மற்றும் பாதுகாப்பு மருத்துவம் போன்ற துறைகள் செயல்படத் தொடங்கின. மாவட்ட தலைமை மருத்துவமனை தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக செயல்படத் தொடங்கியது.

அமைவிடம்

தொகு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி தூத்துக்குடி நகரத்தில் இருந்து 3 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. சுமார் 25 ஏக்கர் அளவில் கல்லூரி வளாகம் பரந்து விரிந்துள்ளது.[2] மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கென தனித்தனியாக விடுதி வசதிகள் உள்ளன. மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை மற்றும் விடுதி போன்ற அனைத்தும் 1 கி. மீ. சுற்றளவிற்குள்ளேயே உள்ளன. தூத்துக்குடி தொடருந்து நிலையத்திலிருந்து 5.1 கி. மீ. தொலைவிலும், பேருந்து நிலையத்திலிருந்து 3.2 கி. மீ. தொலைவிலும் இக்கல்லூரி அமைந்துள்ளது. அரசு பல தொழில் நிறுவன வளாகம், நல்ல வசதியான விரிவுரை அறைகள், நூலகங்கள், வாசிப்பு அறைகள், அரங்குகள் போன்றவை இக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளன.

வழங்கப்படும் படிப்புகள்

தொகு

இளநிலை மருத்துவப் படிப்புகள்

தொகு
  • இளநிலை மருத்துவம் (எம். பி. பி. எசு.) 5½ ஆண்டு படிப்பு

முதுகலை மருத்துவ படிப்புகள்

தொகு
  • பட்டம் படிப்புகள் (கால அளவு 3 ஆண்டுகள்)
  1. எம்.டி பொது மருத்துவம் (ஆண்டுக்கு 10 இடங்கள்)
  2. எம்.டி மயக்கவியல் (ஆண்டுக்கு 08 இடங்கள்)
  3. எம்.டி குழந்தை மருத்துவம் (ஆண்டுக்கு 06 இடங்கள்)
  4. எம்எஸ் பொது அறுவை சிகிச்சை (ஆண்டுக்கு 10 இடங்கள்)
  5. எம்.எஸ் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் (ஆண்டுக்கு 06 இடங்கள்)
  6. எம்.எஸ் எலும்பியல் (ஆண்டுக்கு 03 இடங்கள்)
  7. எம்.எஸ் காது மூக்கு தொண்டை மருத்துவம் (02 இடங்கள் / ஆண்டு)

பட்டயச்சான்றிதழ்

தொகு
  • செவிலியர் மருத்துவப்படிப்பு (3 ½ ஆண்டுகள் படிப்பு)
  • மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம் (2 ஆண்டுகள் படிப்பு)

தொழில் நுட்பப் படிப்புகள்

தொகு
  • அரங்க நிபுணர் - (1 ஆண்டு)
  • மயக்கமருந்து நிபுணர் - (1 ஆண்டு)
  • எலும்பியல் நிபுணர் - (1 ஆண்டு)
  • அவசர சிகிச்சை நிபுணர் - (1 ஆண்டு)
  • சுவாச சிகிச்சை நிபுணர் - (1 ஆண்டு)
  • கதிரியக்க நிபுணர் - (1 ஆண்டு)

பிற படிப்புகள்

தொகு
  • உதவி செவிலியர் (1 ஆண்டு)

மாணவர் சேர்க்கை

தொகு

இந்தக் கல்லூரியில் 2000-2012 கல்வி ஆண்டு வரை 100 மாணவர்கள் வீதம் சேர்க்கப்பட்டனர். தற்போது மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 150ஆக உள்ளது.[3] 15% இடங்கள் அகில இந்திய மருத்துவக் கழகப் பரிந்துரையிலும் 85 சதவீத இடங்கள் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையை பின்பற்றி நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.

துறைகள்

தொகு
  • பொது அறுவை சிகிச்சை
  • பொது மருத்துவம்-
  • காது மூக்கு தொண்டை மருத்துவம்
  • குழந்தை நலம்
  • தோல் நோய்
  • மார்பு மருத்துவம்
  • மனநலம்
  • மகப்பேறியல்
  • எலும்பு மூட்டு மருத்துவம்
  • கதிரியக்க சிகிச்சை
  • பல்மருத்துவம்
  • நரம்பியல்
  • இரைப்பை குடல் இயல்
  • உயிர்வேதியியல்
  • மயக்க மருந்தியல்

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-11-29. பார்க்கப்பட்ட நாள் 2017-05-17.
  2. https://maps.google.co.in/maps?client=ubuntu&channel=fs&oe=utf-8&gfe_rd=cr&gws_rd=ssl&um=1&ie=UTF-8&fb=1&gl=in&cid=12630577496008836260&q=Government+Medical+College,+Tuticorin&sa=X&ei=blVsVKWCMoe2uATijIDQCA&ved=0CIgBEPwSMA4&output=classic&dg=brw
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-11-29. பார்க்கப்பட்ட நாள் 2017-05-17.