தூய மரியன்னை இணை பேராலயம், சென்னை

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு தேவாலயம்

தூய மரியன்னை இணை பேராலயம் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை புறநகர்ப் பகுதியின்,[1][2] அரண்மனைக்காரன் தெருவில் உள்ள ஒரு கத்தோலிக்க தேவாலயம் ஆகும்.[3][4][5] பொ.ஊ. 1658ஆம் ஆண்டு கபுச்சின்களால் கட்டப்பட்ட இது, முன்னாள் பிரித்தானியாவின் இந்தியாவின் பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும்.

தூய மரியன்னை இணை பேராலயம், சென்னை
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்அரண்மனைக்காரன் தெரு, பாரிமுனை, சென்னை, தமிழ்நாடு
புவியியல் ஆள்கூறுகள்13°05′22.9″N 80°17′14.6″E / 13.089694°N 80.287389°E / 13.089694; 80.287389[1]
சமயம்கத்தோலிக்க திருச்சபை
வழிபாட்டு முறைஇலத்தீன் ரீதி
மண்டலம்சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
மாநகராட்சிபெருநகர சென்னை மாநகராட்சி
நிலைதிருத்தலம்
செயற்பாட்டு நிலைபயன்பாட்டிலுள்ளது
தூய மரியன்னை இணை பேராலயம், சென்னை, தமிழ்நாடு

இந்த தேவாலயமானது, அன்றைய மதராஸின் முதல் கிறித்தவ மிஷனரியான பிரெஞ்சு மறைபணியாளர் தந்தை எப்ரேம் தெ நேவேர் என்பவரால் பொ.ஊ. 1658ஆம் ஆண்டு, சென்னையின் ஆர்மேனியன் தெருவில், ஒரு திறந்த பந்தல் கிறித்தவ தொழுகையிடமாகக் கட்டப்பட்டது. இருப்பினும், இந்த அமைப்பு நீண்ட காலம் நீடிக்கவில்லையாதலால், பொ.ஊ. 1692இல் புனரமைக்கப்பட வேண்டியிருந்தது. மேலும், இந்த தேவாலயம் 1775ஆம் ஆண்டு மற்றும் 1785ஆம் ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டு, மதராஸ் திருச்சபை மாகாணத்தின் கதீட்ரல் நிலைக்கு 1886ஆம் வருடம் உயர்த்தப்பட்டது.

மதராஸ் மற்றும் மயிலாப்பூரின் திருச்சபை மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, சாந்தோம் பேராலயத்தை, தலைமையகமாகக் கொண்டு, மதராஸ் மற்றும் மயிலாப்பூரில் உள்ள ரோமன் கத்தோலிக்க உயர்மறைமாவட்டமாக மாற்றம் செய்யப்பட்ட போது, இத்திருத்தலம் 1952ஆம் ஆண்டு தூய மரியன்னை இணை பேராலயமாக உயர்த்தப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. "சென்னை, புறநகர் பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம்: கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு". Hindu Tamil Thisai. 2021-01-02. பார்க்கப்பட்ட நாள் 2023-10-27.
  2. "குருத்து ஞாயிறு அனுசரிப்பு". Hindu Tamil Thisai. 2023-04-03. பார்க்கப்பட்ட நாள் 2023-10-27.
  3. "St Mary Co-Cathedral – George Town -Chennai Churches- catholic churches.in" (in அமெரிக்க ஆங்கிலம்). 2008-12-18. பார்க்கப்பட்ட நாள் 2023-10-27.
  4. "Chennai Salesians". www.donboscochennai.org. பார்க்கப்பட்ட நாள் 2023-10-27.
  5. "சென்னையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்: தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை". Hindu Tamil Thisai. 2017-12-26. பார்க்கப்பட்ட நாள் 2023-10-27.

வெளி இணைப்புகள் தொகு