தூலியம்(II) புளோரைடு

வேதிச் சேர்மம்

தூலியம்(II) புளோரைடு (Thulium(II) fluoride) என்பது TmF2 என்ற என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலாந்தனைடு வகை தனிமமான தூலியத்தின் புளோரைடு உப்பாக இது அறியப்படுகிறது. தூலியம்(II) புளோரைடு 900 ° செல்சியசு வெப்பநிலையில் சிர்க்கோனியம் டெட்ராபுளோரைடுடன் வினைபுரிந்து TmZrF6 சேர்மத்தை உருவாக்குகிறது. இது அறுகோண படிக அமைப்பைக் கொண்டுள்ளது.[1] தூலியம்(II) புளோரைடு குறித்து கூடுதலாக , குறைந்த வெப்பநிலை மௌசுபாவெர் நிறமாலையியல் ஆய்வும்,[2] துலியம்(II) புளோரைடின் சில கோட்பாட்டு ஆய்வுகளும்[3] பதிவாகியுள்ளன.

தூலியம்(II) புளோரைடு
Thulium(II) fluoride
பெயர்கள்
வேறு பெயர்கள்
தூலியம் இருபுளோரைடு, தூலியம் டைபுளோரைடு
இனங்காட்டிகள்
54952-16-8 Y
InChI
  • InChI=1S/2FH.Tm/h2*1H;/q;;+2/p-2
    Key: WWYXXLSAQZONJA-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 101288941
  • [F-].[F-].[Tm+2]
பண்புகள்
TmF2
வாய்ப்பாட்டு எடை 206.93
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Ivanenko, O. P.; Kompanichenko, N. M.; Omel'chuk, A. O.; Rudkovs'ka, L. M.; Zinchenko, V. F. Reaction of zirconium tetrafluoride with nonstoichiometric lanthanide (samarium, europium, thulium, and ytterbium) fluorides. Ukrainskii Khimicheskii Zhurnal (Russian Edition), 2009. 75 (7-8): 83-88. ISSN: 0041-6045
  2. Triplett, B. B.; Dixon, N. S.; Boolchand, P.; Hanna, S. S.; Bucher, E. Low temperature Moessbauer studies of thulium compounds. Journal de Physique, Colloque, 1974. 6: 653-657. ISSN: 0449-1947 .DOI: 10.1051/jphyscol:19746144
  3. Michael Hülsen, Michael Dolg, Pascal Link, Uwe Ruschewitz (2011-06-25). "Improved valence basis sets for divalent lanthanide 4f-in-core pseudopotentials" (in en). Theoretical Chemistry Accounts 129 (3–5): 367–379. doi:10.1007/s00214-010-0855-y. பன்னாட்டுத் தர தொடர் எண்:1432-881X. http://link.springer.com/10.1007/s00214-010-0855-y. பார்த்த நாள்: 2019-03-26. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூலியம்(II)_புளோரைடு&oldid=4156227" இலிருந்து மீள்விக்கப்பட்டது