தெக்கினீசியம் பெண்டாபுளோரைடு
தெக்கினீசியம் பெண்டாபுளோரைடு (Technetium pentafluoride) TcF5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் இருமச் சேர்மமாகும். டெக்னீசியம் உலோகமும் புளோரின் தனிமமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2][3][4]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
தெக்கினீசியம்(V) புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
31052-14-9 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
F5Tc | |
வாய்ப்பாட்டு எடை | 192.99 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் நிறப் படிகங்கள் |
உருகுநிலை | 50 °C (122 °F; 323 K) |
நீருடன் வினை புரியும் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுநைட்ரசனுடன் கலந்த நீர்த்த புளோரின் வாயுவை தெக்கினீசியம் பொடியுடன் சேர்த்து சூடாக்குவதன் மூலம் தெக்கினீசியம் பெண்டாபுளோரைடு தயாரிக்க முடியும்:
- 2Tc + 5F2 → 2TcF5
அயோடின் பெண்டாபுளோரைடில் உள்ள தெக்கினீசியம் அறுபுளோரைடு கரைசலில் அயோடின் வாயுவை செலுத்தி தயாரிப்பது மற்றொரு வழிமுறையாகும்:
- 2TcF6 + I2 → 2TcF5 + 2IF
இயற்பியல் பண்புகள்
தொகுதெக்கினீசியம் பெண்டாபுளோரைடு செஞ்சாய்சதுரப் படிக அமைப்பில்[5] மஞ்சள் நிறப் படிகங்களாக உருவாகிறது.[6] தண்ணீருடன் வினைபுரிகிறது, மற்றும் எளிதில் ஆவியாகும்.
வேதிப் பண்புகள்
தொகுதெக்கினீசியம் பெண்டாபுளோரைடு நீரால் நீராற்பகுப்பு செய்யப்படுகிறது. மேலும் இச்செயல் முறையில் உருவாகும் நிலையான தெக்கினீசியம் சேர்மங்களுக்கு விகிதாசாரம் இல்லை:
- 3TcF5 + 8H2O → HTcO4 + 2TcO2 + 15HF
மேற்கோள்கள்
தொகு- ↑ "WebElements Periodic Table » Technetium » technetium pentafluoride". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 19 April 2023.
- ↑ Gutmann, Viktor (2 December 2012). Halogen Chemistry (in ஆங்கிலம்). Elsevier. p. 197. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-14847-4. பார்க்கப்பட்ட நாள் 19 April 2023.
- ↑ Schwochau, Klaus (21 November 2008). Technetium: Chemistry and Radiopharmaceutical Applications (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 113. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-527-61337-3. பார்க்கப்பட்ட நாள் 19 April 2023.
- ↑ "Some physical properties of technetium pentafluoride" (in en). Journal of Inorganic and Nuclear Chemistry 28: 231–232. 1 January 1976. doi:10.1016/0022-1902(76)80635-5. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1902. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022190276806355. பார்த்த நாள்: 19 April 2023.
- ↑ Kemmitt, R. D. W.; Peacock, R. D. (26 January 2016). The Chemistry of Manganese, Technetium and Rhenium: Pergamon Texts in Inorganic Chemistry (in ஆங்கிலம்). Elsevier. p. 889. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4831-8762-4. பார்க்கப்பட்ட நாள் 19 April 2023.
- ↑ Lide, David R. (29 June 2004). CRC Handbook of Chemistry and Physics, 85th Edition (in ஆங்கிலம்). CRC Press. p. 4-88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-0485-9. பார்க்கப்பட்ட நாள் 19 April 2023.