அயோடின் ஐம்புளோரைடு

அயோடின் ஐம்புளோரைடு (Iodine pentafluoride) என்பது IF5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு இடை உப்பீனி வேதிச் சேர்மம் ஆகும். மஞ்சள் அல்லது நிறமற்ற நிலைகளில் காணப்படும் அயோடினின் புளோரைடான இச்சேர்மம், 3.250 கி.செ.மீ −3 அடர்த்தியுடைய திரவமாகக் காணப்படுகிறது. என்றி மோயிசான் 1891 ஆம் ஆண்டில் முதன் முதலில் அயோடின் ஐம்புளோரைடைத் தொகுப்பு முறையில் தயாரித்தார். புளோரின் வாயுவில் அயோடின் எரிக்கப்படும்[4] இத்தொகுப்பு முறை ஒரு வெப்ப உமிழ் வினையாகும். அயோடின் ஐம்புளோரைடைத் தயாரிப்பதற்கு இத்தயாரிப்பு முறையே சற்று மேம்படுத்தப்பட்டு இன்று வரையில் பின்பற்றப்படுகிறது[5][6]

அயோடின் ஐம்புளோரைடு
Stereo structural formula of iodine pentafluoride
Stereo structural formula of iodine pentafluoride
Space-filling model of iodine pentafluoride
Space-filling model of iodine pentafluoride
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
Iodine(V) fluoride
முறையான ஐயூபிஏசி பெயர்
ஐம்புளோரோ-λ5-அயோடேன்
வேறு பெயர்கள்
அயோடிக் புளோரைடு
இனங்காட்டிகள்
7783-66-6 N
ChemSpider 455940 Y
EC number 232-019-7
InChI
  • InChI=1S/F5I/c1-6(2,3,4)5 Y
    Key: PJIYEPACCBMRLZ-UHFFFAOYSA-N Y
  • InChI=1S/F5I/c1-6(2,3,4)5
    Key: PJIYEPACCBMRLZ-UHFFFAOYSA-N
  • InChI=1/F5I/c1-6(2,3,4)5
    Key: PJIYEPACCBMRLZ-UHFFFAOYAU
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 522683
  • FI(F)(F)(F)F
பண்புகள்
IF5
வாய்ப்பாட்டு எடை 221.89 கி/மோல்
தோற்றம் நிறமற்றது அல்லது வெளிர் மஞ்சள் நீர்மம்
அடர்த்தி 3.250 கி/செ.மீ3
உருகுநிலை 9.43 °C (48.97 °F; 282.58 K)
கொதிநிலை 97.85 °C (208.13 °F; 371.00 K)
வினைபுரியும்[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சரிவு
புள்ளித் தொகுதி C2/c
ஒருங்கிணைவு
வடிவியல்
சதுரப் பட்டகம்
மூலக்கூறு வடிவம்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நச்சு, ஆக்சிசனேற்றி, அரிப்புத்தன்மை உடையது.
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
GHS pictograms GHS03: Oxidizing The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H271, H330, H311, H301, H314, H371, H410[3]
P202, P232, P304, P310[3]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் அயோடின் ஐந்தாக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் புரோமின் ஐம்புளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)
I2 + 5 F2 → 2 IF5

வேதியியல்

தொகு

அயோடின் ஐம்புளோரைடு ஒரு வலிமையான புளோரினேற்றியாகவும் உயர் ஆக்சிசனேற்றச் சேர்மமாகவும் விளங்குகிறது. தண்ணீருடன் தீவிரமாக வினைபுரிந்து ஐதரோ புளோரிக் அமிலத்தையும் அதிக அளவு புளோரினுடன் இணைந்து [[அயோடின் எழுபுளோரைடு அல்லது அயோடின் எப்டா புளோரைடையும் உருவாக்குகிறது.

முதனிலை அமீன்கள் அயோடின் ஐம்புளோரைடன் வினைபுரியும் போது நீருடனான நீராற்பகுத்தல் வினைக்கு உட்பட்டு நைட்ரைல்களை உருவாக்குகிறது[7]

R-CH2-NH2 → R-CN

மேற்கோள்கள்

தொகு
  1. Patnaik, P. (2002). Handbook of Inorganic Chemicals. McGraw-Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8.
  2. Durbank, R. D.; Jones, G. R. (1974). "Crystal structure of Iodine Pentafluoride at -80° ". Inorganic Chemistry 13 (5): 421–439. doi:10.1021/ic50135a012. 
  3. 3.0 3.1 http://www.chemadvisor.com/Matheson/database/msds/mat11440000800003.PDF
  4. Moissan, M. H. (1891). "Nouvelles Recherches sur le Fluor". Annales de Chimie et de Physique 6 (24): 224–282. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k34894x/f222.tableDesMatieres. 
  5. Otto Ruff; Keim, R. (1930). "Das Jod-7-fluorid [The iodine-7-fluoride]" (in German). Zeitschrift für Anorganische und Allgemeine Chemie 193 (1): 176–186. doi:10.1002/zaac.19301930117. 
  6. Ruff O.; Keim R. (1931). "Fluorierung von Verbindungen des Kohlenstoffs (Benzol und Tetrachlormethan mit Jod-5-fluorid, sowie Tetrachlormethan mit Fluor) [Fluoridation of Carbon Compounds (Benzene and Tetrachlormethane with Iodine-5-Fluoride, and Tetrachloromethane with Fluorine)]" (in German). Zeitschrift für Anorganische und Allgemeine Chemie 201 (1): 245–258. doi:10.1002/zaac.19312010122. 
  7. Stevens, T. E. (1966). "Rearrangement of Amides with Iodine Pentafluoride". Journal of Organic Chemistry 31 (6): 2025–2026. doi:10.1021/jo01344a539. 

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோடின்_ஐம்புளோரைடு&oldid=3231854" இலிருந்து மீள்விக்கப்பட்டது