தெனிசு தெனிசெங்கோ

தெனிசு விளாதிமீரொவிச் தெனிசென்கோ (Denis Denisenko, உருசியம்: Денис Владимирович Денисенко, பிறப்பு: 16 சனவரி 1971) ஓர் உருசிய வானியளாளர். இவர் 7 மீவிண்மீன் வெடிப்புகளையும் 50 க்கும் மேற்பட்ட மாறும் விண்மின்களையும் ஒரு சிறுகோளையும் ஒரு வால்வெள்ளியையும் கண்டறிந்தார்.

தெனிசு தெனிசெங்கோ
Den Denisenko.jpg
பிறப்புசனவரி 16, 1971(1971-01-16)
மாஸ்கோ, சோவியத் ஒன்றியம்
குடியுரிமைஉருசியக் குடிமகன்
தேசியம்உருசியர்
துறைவானியல், வானியற்பியல்
பணியிடங்கள்சுடென்பெர்கு வானியல் நிறுவனம்
Patronsவிளாதிமிர் இலியாபுனோவ்
கல்வி கற்ற இடங்கள்மாஸ்கோ இயற்பியல், தொழில்நுட்ப நிறுவனம்
அறியப்படுவதுமீவிண்மீன் வெடிப்புகள், பேரழிவு மாறிகள், காமாக்கதிர் வெடிப்புகள், சிறுகோள் ஒளிமறைப்புகள் ஆகியவற்றின் கண்டுபிடிப்புகள்

வாழ்க்கைதொகு

தெனிசெங்கோ 1971 இல் மாஸ்கோவில் பிறந்தார். இவர் 1993 இல் மாஸ்கோ அறிவ்யல், தொழில்நுட்ப நிறுவனத்தில் வானியற்பியலில் மூதறிவியல் பட்டமும் காமாக்கதிரின் கதிர்நிரல் இயல்புகளில் பட்டயமும் பெற்றார். இவர்கிரனாத் வான்காணக ஃபீபசு (PHEBUS) கருவியால் காமாக்கதிராய்வு செய்தார்.இவர் 1991 இலேயே உருசிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் உயராற்றல் வானியற்பியல் துறையில் சேர்ந்தார். அங்கு 2012 வரை பணிபுரிந்தார். இவர் 2002 முதல் 2007 வரை துபிதாக் தேசிய வான்காணக வருகைதரு நோக்கீட்டாளரக விளங்கினார். பிறகு 2012 மே மாத்த்தில் இருந்து மாஸ்கோ பல்கலைக்கழகத்தின் சுடென்பர்கு வானியல் நிறுவனத்தில் விண்வெளி கண்காணிப்பு ஆய்வகத்தில் பணிபுரிகிறார்.இவர் 30 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். 250 வானியல் தொலைவரிகளை அனுப்பியுள்ளார். பல பன்னாட்டு கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார்.

இவர் 1977 முதலாகவே பயில்நிலை வானியலாளராக இருந்துள்ளார். 2002 இல் இருந்து மாஸ்கோ வானியல் குழுமத்தின் உறுப்பினர் ஆவார். மேலும் சிறுகோள்களின் ஒளிமறைப்புப் பனிக்குழுவின் தலைவரும் ஆவார்.இவர் வான்விழாக்களில் 2001 முதல் 2006 வரையிலும் 2013 இலும் கலந்து கொண்டார். மேலும்இவர் முனைவுமிக்க பயில்நிலை தொழில்முரை வானியல் ஆர்வலர். நெடுங்காலமாக இவர் IOTAoccultations, Planoccult, meteorobs, comets-ml, MPML, SeeSat, AAVSO-HEN, AAVSO-DIS, vsnet-விழிப்புறுத்தல், vsnet-வெடிப்புகள், cvnet-விவாத மின்னஞ்சல் வரிசைகள் ஆகிய அமைப்புகளில் பங்கேற்று வருகிறார். இவர் கொம்யேதி, பொரியூதி, மாஸ்கோ-வாணி, மாறுமீன்கள் ஆகிய ஐந்து மின்னஞ்சல் வரிசைகளின் உரிமையாளரும் நடுநிலையாளரும் ஆவார். ’புவியும் புடவியும்’ எனும் உருசிய இதழில் பல மக்கள் அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் இருமுறை ’வானும் தொலைநோக்கியும்’ நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளார். இவர் ’உருசிய விடுதலை’ வானொலி எனும் வானொலி சேவையிலும் ’கசேதா.உரு’ எனும் செய்தித்தாளிலும் பிரித்தானிய ஒலிபரப்பின் உருசியச் சேவையிலும் 2007 இல் நேர்காணல்கள் தந்துள்ளார்.

முதன்மைக் கண்டுபிடிப்புகள்தொகு

 • Deep Eclipses in the Cataclysmic Variable 1RXS J020929.0+283243 (2005) – இரும விண்மீன் அமைப்பு, 4.5m ஒளிமறைப்பு வீச்சுடன்.
 • Optical Afterglow Candidate of GRB 920925C (2007) – பலோமார் வான்காணக ஒளித்தட்டில் பதிவாகிய வரலாற்றுக்கு முந்தைய காமாக்கதிர் வெடிப்பின் பிந்தைய ஒளிப்பொலிவு.
 • NSV 1485 ஐச் சரியாக இனங்காணலும் அதன் சுழல்வலைவு நேரத்தைத் தீர்மானித்தலும்அலைவுநேரம் அளத்தலும் (2007)[1]
 • V713 Cep ஒளிமறைப்புகளும் அவற்றின் அலைவுநேரம் அளத்தலும் (2007)[2]
 • மீவிண்மீன் வெடிப்பு 2011hz[3]
 • மீவிண்மீன் வெடிப்பு 2011ip[4]
 • MASTER OT J211258.65+242145.4 (2012)[5] – WZ Sge-type cataclysmic variable with 7 rebrightenings.
 • MASTER OT J042609.34+354144.8 (2012)[6] – the first dwarf nova in the hierarchical system with a common proper motion companion.
 • மீவிண்மீன் வெடிப்புகள் 2013hi, 2013hm, 2013ho, 2014af, 2014am[7]
 • தீங்குமிகு சிறுகோள் 2014 UR116[8]
 • வால்வெள்ளி C/2015 K1 (MASTER)[9]

மற்ற தகைமைகள்தொகு

 • மாறும் விண்மீன்களின் கண்டுபிடிப்புகள்[10]
 • நெப்டியூன் பொருளால் விண்மீன் ஒளிமறைப்பு ஏற்படுதலை முதலில் முன்கணித்தல் (2004)[11]
 • சிருகோள் 2005 UN கண்டுபிடிப்பு1
 • 2UCAC 31525121 இன் ஒளிமறைப்பை (130) எலெட்ரா வால் காணல்-அதாவது துருகியில் முதன்முதலாக சிறுகோள் ஒளிமறைப்பை வெற்றிகரமாக்க் காணல் (2007)[12]
 • சிறுகோள் 2007 VN ஐச் சரியாக இனங்காணல்84 as the ரொசெட்டா விண்கலம்[13][14]
 • மார்க்குவிசில் நடந்த அறிவியல், பொறியியல் பத்தாம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டவர்கள் பற்றிய விவரத் தகவலைத் தொகுத்தல் (2008–2009)
 • TYC 5161-00925-1இன் ஒளிமறைப்பு ( (2) பல்லாசுவால் ஏற்பட்ட்து) (2011) –மாஸ்கோவில் இருந்து வெற்றிகரமாக முதன்முதலான இவ்வகை நோக்கீடு நிகழ்த்தப்பட்டது[15]

மேற்கோள்கள்தொகு

இலக்கியப் பணிகள் (உருசிய மொழியில்)தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெனிசு_தெனிசெங்கோ&oldid=2712794" இருந்து மீள்விக்கப்பட்டது