தென்கரை (தேனி)
தென்கரை (தேனி) (ஆங்கிலம்:Thenkarai (Theni)), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில் பெரியகுளம் நகரத்தை ஒட்டி அமைந்துள்ள ஊராகும். பெரியகுளம் நகரத்திற்கு தெற்கில் அமைந்துள்ள தென்கரை தேர்வு நிலை பேரூராட்சியின் பகுதிகள் டி. கள்ளிப்பட்டி, வெங்கடாசலபுரம் மற்றும் கைலாசபட்டி ஆகும். இது வேளாண் நிலப்பகுதியாகும்.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,773 வீடுகளும், 14,838 மக்கள்தொகையும் கொண்டது. [1] 10 சகிமீ பரப்பும், 15 வார்டுகள் கொண்ட இப்பேரூராட்சியானது பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [2]
ஆதாரங்கள்
தொகு