தென்னாப்பிரிக்கா நாட்டுப்பண்
தெனாப்பிரிக்கா நாட்டுப் பண் என்பது ஒரு கலப்பு பாடலாகும். இது புதிய ஆங்கிலவரிகள் சேர்க்கப்பட்ட கோசி சிகலேல் ஆப்பிரிக்கா (கடவுள் ஆப்ரிக்காவை ஆசிர்வதிக்கட்டும்) மற்றும் "டை ஸ்டெம் வேன் ஐ சவுத்ஆப்பிரிக்கா" ( தென்னாப்பிரிக்காவின் குரல் ) ஆகிய பாடல்களை சேர்த்து 1997 இல் உருவாக்கப்பட்டது ஆகும்.
அமைப்பு
தொகுதென்னாப்பிரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் பதினொன்று, ஆனால் மிகப் பரவலாக பேசப்படுவது ஐந்து மொழிகள் தென்னாப்பிரிக்க மக்களின் ஒற்றுமையை காட்டும் விதமாக இந்த ஐந்து மொழிகளின் வரிகள் கொண்டதாக நாட்டுப்பண் அமைந்துள்ளது அவை,
- சோசா மொழி (முதல் பத்தியில், முதல் இரண்டு அடிகள்),
- சுலு மொழி (முதல் பத்தியில், இறுதி இரண்டு வரிகள்),
- சோத்தோ மொழி (இரண்டாவது பத்தி),
- ஆபிரிக்கான மொழி (மூன்றாவது பத்தி),
- ஆங்கிலம் (இறுதி பத்தி).
வரலாறு
தொகுகோசி சிகலேல் ஆப்பிரிக்கா ( ஆண்டவன் ஆப்பிரிக்காவை ஆசிர்வதிக்கட்டும்) பாடலை மெதடிசம் பள்ளி ஆசிரியரான எனாக் மன்காய் சான்டோங்கா என்பவரால் 1897 இல் பள்ளிக்கூட பாடலாக இயற்றப்பட்டது. பின்பு இது தேவாலயங்களில் பிரபலமாகி அங்கும் பாடப்பட்டுவந்தது. 1925 இல் இப்பாடல், ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் அதிகாரபூர்வ பாடலாக மாறியது. நிற வெறிக்கு எதிராகக் குரல் கொடுத்த மக்கள் இந்தப் பாடலைத்தான் ஒரே குரலில் பாடிக்கொண்டு இருந்தார்கள். மக்கள் பேசும் முதன்மையான நான்கு உள்ளூர் மொழிகளில் உருவாக்கப்பட்டிருந்தது இந்தப் பாடல்.
இதேபோல ஸ்டெம் வேன் ஐ சவுத் ஆப்பிரிக்கா ( தென்னாப்பிரிக்காவின் குரல் ) என்ற ஆங்கிலப் பாடலும் பிரபலமானது. தென்னாப்ரிக்காவின் தலைசிறந்த இலக்கியவாதியான லேங்கன்ஹோவர் என்பவர் 1918 இல் இயற்றிய பாடல் இது. 1921 இல் மார்ட்டின் லினியஸ் டி வில்லியர்ஸ் என்பவர் இந்தப் பாடலுக்கு இசை அமைத்தார். [1] ஸ்டெம் வேன் ஐ சவுத் ஆப்பிரிக்கா பாடல் இணை நாட்டுப்பண்ணாக இருந்தது [2]
தென் ஆப்பிரிக்க அரசுக்கான நாட்டுப்பண்ணாக இரண்டு பாடல்களையும் அதிகாரப்பூர்வமாக 1994 இல் நெல்சன் மண்டேலாவினால் ஏற்பு விழா நடத்தப்பட்டது. [3] 1997 ம் ஆண்டு இந்த இரண்டு பாடல்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு, பாடலின் இறுதியில் ஆங்கில மொழியில் புதியதாக நான்கு வரிகள் சேர்கப்பட்டன.
வரிகள்
தொகுமொழி | வரிகள் | தமிழ் மொழிபெயர்பு[4] |
---|---|---|
சோசா | கோஸி சிக லேல் ஈ ஆஃப்ரிகா மலுஃபகனி ஸ்வூ ஹொன்டுல் வா...யோ, |
ஆண்டவன் ஆப்ரிக்காவை ஆசிர்வதிக்கட்டும். அதன் பெருமை உயரட்டும். |
சுலு | இஸ்வா இமி தன்டா ஸோ.. யது..., கோஸி சிக லேலா தினா லூஸாஃபோல் வா...யோ. |
எமது பிரார்த்தனையைக் கேட்கட்டும், இதன் (ஆப்ரிக்காவின்) குடும்பம் நாங்கள்; இறைவா எங்களை ஆசிர்வதியுங்கள். . |
சோத்தோ | மொரானா புலூகா சட்ஜபா ஸா.. ஹேசூ, ஓ ஃபெடிஸே டின்ட்வாலே மாட்ஸ்வன்யா ஹே, ஓஸே புலூகே ஓசா புலூகே ஸெட்ஜ் ஹாபாஸா ஹே...ஸி, ஜாபாஸா ஸௌத் ஆஃப்ரிகா... ஸௌத் ஆஃப்ரிகா. |
இறைவா எங்கள் நாட்டை ஆசிர்வதியுங்கள், போர்களையும் வேதனைகளையும் நிறுத்துங்கள், இதனைக் காக்கவும்; எங்கள் நாட்டைக் காக்கவும், இந்த நாடு - தென் ஆப்ரிக்கா.. தென் ஆப்ரிக்கா. |
ஆபிரிக்கான | வூ தை ப்ளோ.. ஃபான் ஒன்ஸே ஹே... மல் வூ தை டைப்தே ஃபான் ஊன்... சே, ஊருன் ஸேவிஜே ஜேபர்ட்கஸ், வாரி தை க்ரான்ஸே ஆன்ட்வூட் ஜே, |
எங்கள் நீல வானில் இருந்து, எங்கள் கடலின் ஆழத்தில் இருந்து, என்றும் நிற்கும் மலைகளின் மீதிருந்து, உயர்ந்த பாறைகளில் மோதி எதிரொலிக்கும்! |
ஆங்கிலம் | ஸௌண்ட்ஸ் தி கால் டு கம் டுகதர், அண்ட் யுனைடட் வி ஷெல் ஸ்டேண்ட், லெட் அஸ் லிவ் அண்ட் ஸ்ட்ரைவ் ஃபார் ஃப்ரீ.....டம் இன் ஸௌத் ஆஃப்ரிகா.. அவர் லேண்ட்! |
ஒன்றாய்ச் சேர்ந்து வர (வாழ) அழைப்பு ஒலிக்கிறது. (ஆம்) கூடி வாழ்ந்து (நிலையாய்) நிற்போம். விடுதலைக்காக போராடுவோம்; (சுதந்திரமாய்) வாழ்வோம் நமது பூமி - தென்னாப்பிரிக்காவில். |
மேற்கோள்கள்
தொகு- ↑ "SA National Anthem History". Archived from the original on 2013-05-31. பார்க்கப்பட்ட நாள் 2007-10-21.
- ↑ "The Presidency: National Anthem". Archived from the original on 2012-05-25. பார்க்கப்பட்ட நாள் 2012-06-06.
- ↑ Carlin, John (2008). Playing the Enemy. New York: Penguin. pp. 147, 153. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59420-174-5.
- ↑ "ஒரே தேசிய கீதமான இரு பாடல்கள்!". தி இந்து (தமிழ் ). 27 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)