தெற்கு ஒசேத்தியா

(தென் ஒசேத்தியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தெற்கு ஒசேத்தியா (South Ossetia, ஒசேத்தியம்: Хуссар Ирыстон, குசார் இரிஸ்தோன், ஜோர்ஜிய மொழி: სამხრეთ ოსეთი, சம்க்ரேத் ஒசேட்டி; ரஷ்ய மொழி: Южная Осетия, யூசுனாயா ஒசேத்தியா) ஜோர்ஜியாவில் ஒரு நடப்பின்படி மெய்யான தன்னாட்சிப் பகுதியாகும். 1990களின் ஆரம்பத்தில் ஜோர்ஜியா-ஒசேத்தியப் பிரச்சினை ஆரம்பித்தபோது தெற்கு ஒசேத்தியா விடுதலையை அறிவித்தது. ஆனாலும் உலகில் எந்த ஒரு நாடும் தெற்கு ஒசேத்தியாவின் விடுதலையை ஒப்புக்கொள்ளவில்லை. தொடர்ந்து ஜோர்ஜியாவின் கீழேயே இருந்து வருகிறது. ஜோர்ஜியா இப்பகுதியின் கிழக்கு, மற்றும் தெற்கு மாகாணங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஏப்ரல் 2007 இல் அங்கு "தெற்கு ஒசேத்தியாவின் தற்காலிக நிருவாகம்" ஒன்றை[1][2][3][4] பிரிந்துபோன முன்னாள் ஒசேத்திய உறுப்பினர்களின் தலைமையில் அமைத்தது[5].

தெற்கு ஒசேத்தியா
Хуссар Ирыстон
სამხრეთ ოსეთი
Южная Осетия
South Ossetia
தெற்கு ஒசேத்தியாவின்அமைவிடம்
பரப்பு
• மொத்தம்
3,900 km2 (1,500 sq mi)
• நீர் (%)
சிறிய பகுதி
மக்கள் தொகை
• 2000 மதிப்பிடு
70,000
• அடர்த்தி
18/km2 (46.6/sq mi)
நேர வலயம்ஒ.அ.நே+3

ஜோர்ஜிய-ஒசேத்திய முறுகல்

தொகு

ஆகஸ்ட் 2008இல் ஜோர்ஜியா இராணுவம் இப்பகுதியை படையெடுத்து இப்பகுதியின் தலைநகரம் திஸ்கின்வாலியை கைப்பற்ற முனைந்தது. இதற்குப் பதிலாக ரஷ்ய இராணுவம் தெற்கு ஒசேத்தியாவில் வந்து ஜோர்ஜிய இராணுவத்துக்கு எதிராக தாக்குதல் செய்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. Online Magazine - Civil Georgia
  2. Georgia’s Showcase in South Ossetia
  3. "Georgia Quits Mixed Control Commission - Kommersant Moscow". Archived from the original on 2016-05-01. பார்க்கப்பட்ட நாள் 2008-08-08.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-08-20. பார்க்கப்பட்ட நாள் 2008-08-08.
  5. Online Magazine - Civil Georgia



"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்கு_ஒசேத்தியா&oldid=4009256" இலிருந்து மீள்விக்கப்பட்டது