தெப்சங் சமவெளி
தெப்சங் சமவெளி (Depsang Plains) (எளிய சீனம்: 達普桑盆地) இந்தியாவின் லடாக் ஒன்றியத்தில், காரகோரம் மலைப்பிரதேசத்தில் அமைந்த அக்சாய் சின் பகுதியில், சீன-இந்திய கட்டுப்பாட்டு எல்லையை பிரிக்கும் சமவெளிப் பிரதேசம் ஆகும். இது காரகோரம் மலையில் 17,400 அடி உயரத்தில் அமைந்துள்ளது. தெப்சங் சமவெளி கிழக்கு மேற்காக 40 கிமீ நீளமும், வடக்கு-தெற்காக 19-21 கிலோ மீட்டர் நீளமும், மொத்தம் 800 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் கொண்டது.
தெப்சங் சமவெளி | |
---|---|
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Karakoram" does not exist. | |
Floor elevation | 17,400 அடி (5,304 m) [1] |
ஆள்கூறுகள் | 35°18′N 78°00′E / 35.3°N 78.0°E |
Depsang Plains | |||||||
---|---|---|---|---|---|---|---|
சீன எழுத்துமுறை | 達普桑平地 | ||||||
எளிய சீனம் | 达普桑平地 | ||||||
|
தெப்சங் சமவெளியின் கிழக்குப் பகுதி தற்போது சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ளது.[2][3]இதன் மேற்கு பகுதி இந்தியாவின் லடாக் ஒன்றிய நிர்வாகப் பகுதியில் உள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள இதன் கிழக்குப் பகுதியை இந்தியா உரிமை கோருகிறது.[4]இந்திய இராணுவத்தால், வடக்குத் துணைப் பகுதி என தெப்சங் சமவெளி அழைக்கப்படுகிறது.[5]
இப்பகுதியை இந்தியப் படைகள் கைப்பற்ற நினைப்பதால், இந்திய-சீனப் படைகளுக்கு இடையே அடிக்கடி பதட்டம் நிறைந்ததாக உள்ளது. 2013, 2015 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் இப்பகுதியில் இந்திய-சீனப் படைகளுக்கு இடையே போர்ப்பதட்டம் காணப்பட்டது. தெப்சங் சமவெளியின் மேற்கு பகுதியில் பாகிஸ்தான் நிர்வகிக்கும் ஜில்ஜிட் பல்டிஸ்தான் பகுதியில் 80 கிலோ மீட்டர் நீளம் கொண்ட எல்லைக்கோடு உள்ளது இதனைத் தாண்டி, பாகிஸ்தானிலிருந்து ஊடுருவல்கார்கள் அடிக்கடி இந்தியப் பகுதியில் நுழைகின்றனர்.[6]
புவியியல்
தொகு(சீனாவால் 1960-இல் ஒருதலைபட்சமாக தெப்சங் சமவெளியை இந்திய-சீனா இடையே அமைந்த எல்லைக்கோடாக அறிவிக்கப்பட்டது).[7] |
காரகோரம் மலைப்பிரதேசத்தில் உள்ள அக்சாய் சின்னுக்கு வடமேற்கில் தெப்சங் சமவெளி அமைந்துள்ளது.[8] காரகோரம் மலையில் அமைந்த தெப்சங் சமவெளியின் வடக்கில் சிப் சாப் ஆறும், மேற்கில் சியோக் ஆறும், கிழக்கில் தாழ்ந்த லாக் சுங் மலைத்தொடரும் உள்ளது. தெற்கில் பெப்சங் கணவாயும், வடக்கில் காரகோரம் கணவாய் உள்ளது.[9]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Filippi, The Italian Expedition (1932), ப. 308.
- ↑ "Ladakh incursion: India turns to diplomacy to counter belligerent China amid border stand-off", India Today, 2013-04-25
- ↑ Manoj Joshi (2013-05-07). "Making sense of the Depsang incursion". The Hindu. http://www.thehindu.com/opinion/op-ed/making-sense-of-the-depsang-incursion/article4689838.ece.
- ↑ "Khurshid to visit China on May 9, no date for flag meet", Hindustan Times, 2013-04-25, archived from the original on 2013-11-02, பார்க்கப்பட்ட நாள் 2021-02-11
- ↑ Singh, Rahul (2020-08-08), "Indian, Chinese armies hold talks on Ladakh's Depsang plains", Hindustan Times
- ↑ Kaushik, Krishn (2020-09-17), "No ground lost in Depsang but India hasn't accessed large parts for 15 years", The Indian Express, பார்க்கப்பட்ட நாள் 2020-09-18
- ↑ India, Ministry of External Affairs, ed. (1962), Report of the Officials of the Governments of India and the People's Republic of China on the Boundary Question, Government of India Press, Chinese Report, Part 1 (PDF) (Report). pp. 4–5.
The location and terrain features of this traditional customary boundary line are now described as follows in three sectors, western, middle and eastern. ... The portion between Sinkiang and Ladakh for its entire length runs along the Karakoram Mountain range. Its specific location is as follows: From the Karakoram Pass it runs eastwards along the watershed between the tributaries of the Yarkand River on the one hand and the Shyok River on the other to a point approximately 78° 05' E, 35° 33' N, turns southwestwards and runs along a gully to approximately 78° 01' E, 35° 21' N; where it crosses the Chipchap River. It then turns south-east along the mountain ridge and passes through peak 6,845 (approximately 78° 12' E, 34° 57' N) and peak 6,598 (approximately 78° 13' E, 34° 54' N). - ↑ Palit, D. K. (1991). War in High Himalaya: The Indian Army in Crisis, 1962. Hurst. pp. 32, 43. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85065-103-1.
- ↑ Philip, Snehesh Alex (2020-09-19), "Why Depsang Plains, eyed by China, is crucial for India's defence in Ladakh", ThePrint-US, பார்க்கப்பட்ட நாள் 2020-09-19