தெப்சிரிந்திரா

சியாமின் ராணி தெப்சிரிந்திரா (Queen Debsirindra of Siam), முன்பு ராணி ராம்போய் பமராபிரோம், பிறப்பு பெயர் இளவரசி ராம்போய் சிரிவாங் (18734 சூலை 17 - 9 செப்டம்பர் 1861) மன்னர் மோங்குத்தின் இரண்டாவது மனைவியும், சுலலாங்கொர்ன் மன்னரின் தாயுமாவார்.

தெப்சிரிந்திரா
Queen Debsirindra.jpg
சியாமின் இராணி
பதவிக்காலம்1 ஏப்ரல் 1851 – 9 செப்டம்பர் 1862
பிறப்புசூலை 17, 1834(1834-07-17)
பேங்காக், தாய்லாந்து
இறப்பு9 செப்டம்பர் 1862(1862-09-09) (அகவை 28)
பேங்காக், தாய்லாந்து
துணைவர்மோங்குத் (நான்காம் ராமா)
குடும்பம்உறுப்பினர்சுலலாங்கொர்ன் (ஐந்தாம் ராமா)
சந்திரமண்டோல்
சதுரோன்ராஸ்மி
பானுரங்சி சவாங்வாங்சே
மரபுசக்ரி வம்சம்
தந்தைசிறிவாங், இளவரசர் மட்டயாபிதக்
தாய்நொய் சிரிவோங்சே நா அயுதயா

சுயசரிதைதொகு

 
மன்னர் மோங்குத் ராணி தெப்சிரிந்திராவுடன்

இளவரசி ராம்போய் 1834 ஆம் ஆண்டில் சிறிவாங், இளவரசர் மட்டயாபிதக் ( மூன்றாம் ராமா மற்றும் கான்யூபின் சாப் ஆகியோரின் மகன்) மற்றும் லேடி நொய் (அம்மா நொய்) ஆகியோருக்கு பிறந்தார். இவர் மோன் வம்சாவளியைச் சேர்ந்தவர். [1] இவரது தந்தை தனது 27 வயதில் இறந்தபோது, இவரது தாத்தா - அரசர் இவரையும் இவரது சகோதரி பன்னரையையும் தாய்லாந்தின் பெரிய அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். இவர்கள் அவருக்கு பிடித்த பேரக்குழந்தைகள் என்று கூறப்பட்டது. 1853 ஆம் ஆண்டில், ராம்போய் தனது பெரிய மாமா மோங்குத்தை மணந்தார் .(இவரைவிட 30 வயது மூத்தவர்) இதனால் பிரா ஓங் சாவோ (இளவரசி என்ற உயர் பதவி) என அழைக்கப்பட்டார். அதே ஆண்டில் இவர் இளவரசர் சுலலாங்கொர்னைப் பெற்றெடுத்தார். பின்னர் இவர் ராணி ராம்போய் ஆனார்.

இவருக்கு மன்னர் மோங்குத்துடன் 4 குழந்தைகள் இருந்தனர்.

  1. இளவரசர் சுலலாங்கொர்ன், பின்னர் மன்னராக ஆனார். (1853-1910)
  2. இளவரசி சந்திரமண்டோல்/சந்தோன்மோந்தன் பின்னர் இளவரசி விசுத்கிரசாத் என்ற பெயரில் அழைக்கப்பட்டார் (1855-1863)
  3. இளவரசர் சதுரோன் ராஸ்மி/சதுரன் ராட்சாமி, பின்னர் இளவரசர் சக்ரவர்த்திபோங்ஸ் என அழைக்கப்பட்டார் (1856-1900).
  4. இளவரசர் பானுரங்சி சவாங்வாங்சே, பின்னர் இளவரசர் பானுபந்துவோங்சே வோரதெச் என அழைக்கப்பட்டார் (1859-1928).

இராணி ராம்போய் 1861 இல் இறந்தார். இவரது சகோதரி (மோங்குத்தின் மனைவியும் கூட), இளவரசி பன்னரை, தனது எஞ்சிய காலத்திற்கு மோங்குத்தின் மனைவியாக செயல்பட்டார். 1867 ஆம் ஆண்டில் சுலலாங்கொர்ன் முடிசூட்டப்பட்டபோது, இவரது மரணத்திற்குப் பிறகு டெப்சிரிந்திரமாதாயா, ராணி தாய் என்ற தலைப்பு வழங்கப்பட்டது. இவரது பேரன், வஜிராவுத் (ஆறாம் ராமா ), இஅவருக்கு இராணி டெப்சிரிந்திரா என்ற பெயரைக் கொடுத்தார்.

மேற்கோள்கள்தொகு

  1. "Mon wives and mothers of kings". 25 February 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 March 2008 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெப்சிரிந்திரா&oldid=3042122" இருந்து மீள்விக்கப்பட்டது