தெமங்கோர் அணை

மலேசியாவில் உள்ள அணை

தெமங்கோர் அணை (மலாய்: Empangan Temenggor; ஆங்கிலம்: Temenggor Dam); என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், உலு பேராக் மாவட்டத்தில் (Hulu Perak District) கிரிக் பகுதியில் அமைந்துள்ள ஓர் அணையாகும்.

தெமங்கோர் அணை
Temenggor Dam
தெமங்கோர் ஏரி
அதிகாரபூர்வ பெயர்Empangan Temenggor
நாடு மலேசியா
பேராக்
அமைவிடம் கிரிக், பேராக், மலேசியா
புவியியல் ஆள்கூற்று5°24′24″N 101°18′04″E / 5.40667°N 101.30111°E / 5.40667; 101.30111
நோக்கம்மின்சார உற்பத்தி
நிலைசெயல்பாட்டில் உள்ளது
திறந்தது1972

இந்த அணை, ஈப்போவில் இருந்து வடகிழக்கே சுமார் 200 கிமீ தொலைவில் பேராக் ஆற்றில் அமைந்துள்ளது. அணையின் கட்டுமானத்தினால் தெமங்கோர் ஏரி ஈர்த்துக் கொள்ளப்பட்டது. ஏரியின் நடுவில் உள்ள தீவு பன்டிங் தீவு என்று அழைக்கப்படுகிறது.[1]

தெமங்கோர் ஏரி

தொகு

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக தெமங்கோர் அணை (Temenggor Dam) கட்டப்பட்டதன் மூலம் இந்த ஏரி உருவாக்கப்பட்டது. இந்த ஏரி உலு பேராக் மாவட்டத்தின் தலைநகரான கிரிக் நகரில் இருந்து ஏறக்குறைய 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

இந்த ஏரி உலு பேராக் மாவட்டத்தின் தலைநகரான கிரிக் நகரில் இருந்து ஏறக்குறைய 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

செயற்கையாக உருவாக்கப்பட்ட பன்டிங் தீவு; மற்றும் தெமங்கோர் ஏரிப் பாலம் (Lake Temenggor Bridge) ஆகியவை இந்த ஏரியில்தான் உள்ளன. கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை (East–West Highway) (Malaysia) இந்த ஏரிக்கு அப்பால் கடந்து செல்கிறது.

மின் நிலையம்

தொகு

இந்த அணையின் மூலமாக அங்கு ஒரு புனல் மின் நிலையம் உருவாக்கப்பட்டு உள்ளது. 87 மெகாவாட் திறன் கொண்ட 4 இத்தாச்சி விசையாழிகள் (Hitachi Turbines) மூலமாக மின் உற்பத்தி செய்யப்படுகிறது. சராசரியாக ஓர் ஆண்டிற்கு 900 மில்லியன் யூனிட் மின்னாற்றல் உற்பத்தியாகிறது. இந்த நிலையம் தெனாகா நேசனல் (Tenaga Nasional) மூலமாக இயக்கப்படுகிறது.

மேலோட்டம்

தொகு

சனவரி 1974-இல் கட்டுமானம் தொடங்கப்பட்டு 1978-ஆம் ஆண்டின் மத்தியில் நிறைவடைந்தது. முதல் மின் பகிர்மானம் அக்டோபர் 1, 1977-இல் தொடங்கப்பட்டது.

தொழில்நுட்பக் குறிப்புகள்

தொகு

அணையின் கூறுகள் பின்வருமாறு:[2]

  • முதன்மை அணை
    • அடித்தளத்திற்கு மேல் அதிகபட்ச உயரம் 128 மீட்டர்கள் (420 அடி), மற்றும் முகடு நீளம் 537 மீட்டர்கள் (1,762 அடி), நிரப்புதலின் அளவு 70.9 மில்லியன் கன மீட்டர்.
    • முகடு உயரம் கடல் மட்டத்திலிருந்து 258 மீட்டர்கள் (846 அடி)
    • நீர்த்தேக்கப் பகுதி 245 மீட்டர்கள் (804 அடி); மொத்த சேமிப்பு 6,050 மில்லியன் கன மீட்டர்.
  • மின்னாற்றல் உட்கொள்ளும் அமைப்பு - 4 குடாக்கள்.
  • நீர்க்கசிவு - கட்டுப்பாடற்றக் கசிவு
    • நீர்த்தேக்கத்தின் வெள்ள மட்டத்தில் அதிகபட்ச வெளியேற்றத் திறன் 2830m3/s ஆகும். இந்த உயரத்தில் அணையில் 890 மில்லியன் கன மீட்டர் வெள்ள நீர் அல்லது 3 மாத வருட சராசரி மழைக்கு சமமான நீர் உள்ளது. இந்த நீர் ஒரு மாதத்திற்கு குறையாமல் படிப்படியாக கீழ்நிலங்களுக்கு வெளியேற்றப்படும்.
  • சுரங்கக் குடைவு - 4 சுரங்கக் குடைவுகள்.
    • 850 அடி நீளம்
    • சராசரி விட்டம் 5.5மீ; எஃகு விட்டங்கள்
  • மின் நிலையம்
    • மேற்பரப்பு மின் நிலையம்
    • 87 மெகாவாட் திறன் கொண்ட 4 விசையாழிகள்
    • ஓர் ஆண்டிற்கானஆற்றல் உற்பத்தி 870GWh

தெமெங்கோர் அணை தற்போது மலேசியாவின் மூன்றாவது பெரிய அணையாகும். இந்த அணை 1979-இல் கட்டி முடிக்கப்பட்டவுடன் மிகப்பெரிய அணையாகவும்; மிகப்பெரிய நீர்மின் உற்பத்தி நிலையமாகவும் இருந்தது. அந்தச் சாதனையை 1985-இல் கென்யிர் அணை முறியடித்தது.

இந்த அணை பேராக் ஆற்றில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்கிறது. அத்துடன் தாய்லாந்தில் உள்ள பெத்தோங் பகுதியில் இருந்து மலாயா பொதுவுடைமை கட்சியின் ஆதரவாளர்கள் மலேசியாவிற்குள் ஊடுருவதையும் தடுத்தது. அந்த வகையில் அதன் பங்கிற்காக மலேசிய வரலாற்றில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Located in Perak, Sungai Perak is the second longest river in West Malaysia (after Sungai Pahang). It is about 400 kilometres long, flowing from highlands to the Straits of Malacca". PBA - SPRWTS. பார்க்கப்பட்ட நாள் 13 September 2024.
  2. "Power plant profile: Temenggor Power Station, Malaysia". Power Technology. 24 April 2023. பார்க்கப்பட்ட நாள் 13 September 2024.
  • Temengor Hydro-Electric Project, The resident engineer's completion report, Vol.1, Report 5067-01-80, June 1980

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெமங்கோர்_அணை&oldid=4089385" இலிருந்து மீள்விக்கப்பட்டது