பெத்தோங், தாய்லாந்து
பெத்தோங் (மலாய்: Betong; ஆங்கிலம்: Betong அல்லது Betung; தாய்: เบตง; bēː.tōŋ; சீனம்: 勿洞) என்பது தெற்கு தாய்லாந்தில், மலேசியா-தாய்லாந்து எல்லைக்கு அருகில் உள்ள ஒரு நகரமாகும். இந்த நகரம் பாங்காக்கிற்கு தெற்கே 1,590 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும் 2023-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி 29,935 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.[1]
பெத்தோங் | |
---|---|
Betong | |
தாய்லாந்து | |
ஆள்கூறுகள்: 5°46′23″N 101°4′21″E / 5.77306°N 101.07250°E | |
நாடு | தாய்லாந்து |
மாவட்டாரம் | யாலா மாவட்டாரம் |
மாவட்டம் | பெத்தோங் |
அரசு | |
• வகை | நகர நகராட்சி |
• மாநகர முதல்வர் | சோமியோட் லெர்ட்லமியோங் (Somyot Lertlamyong) |
பரப்பளவு | |
• மொத்தம் | 78 km2 (30 sq mi) |
மக்கள்தொகை (2023) | |
• மொத்தம் | 29,935 |
நேர வலயம் | தாய்லாந்து நேரம் ஒ.ச.நே +7 |
அஞ்சல் குறியீடு | 95110 |
தாய்லாந்து தொலைபேசி எண்கள் | (+66) 73 |
இணையதளம் | betongcity |
இந்த நகரம் தாய்லாந்தின் தெற்கு முனை நகரமாக இருந்தாலும், மலேசிய மாநிலமான பேராக் மாநிலத்தின் எல்லையில், மிக அருகாமையில் அமைந்து இருப்பதால், மலேசியச் சுற்றுலாப் பயணிகளின் இடையே மிகவும் பிரபலமாக உள்ளது.
பெத்தோங் நகரம், யாலா (Yala) நகரத்தில் இருந்து 140 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த நகரம் மலேசிய மாநிலங்களான பேராக் மற்றும் கெடா மாநிலங்களுடன் எல்லையைக் கொண்டுள்ளது. மேலும் இது மலேசியர்களுக்கான பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
நிலவியல்
தொகுநிலவியல் அடிப்படையில் பெத்தோங் நகரம் ஒரு பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ளது. தொலைவில் இருந்து பார்க்கும் போது மலைகளால் சூழப்பட்ட ஒரு குளம் போல் தெரியும். பெத்தோங்கின் மையப் பகுதியில் உள்ள முக்கியமான இடம், பெத்தோங் கால்வாய் (Betong Canal) ஆகும்.
இந்தக் கால்வாய் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்து பட்டாணி ஆற்றில் சங்கமிக்கிறது. பள்ளத்தாக்கின் நிலப்பரப்பு காரணமாக, பெத்தோங்கைச் சுற்றியுள்ள பகுதி யாலா மற்றும் தெற்குப் பகுதியான பட்டாணி ஆற்றின் பிறப்பிடமாகவும் விளங்குகிறது.
இங்கு பேங் லாங் அணை (Bang Lang Dam) உள்ளது. இது தென் எல்லை மாநிலங்களுக்கு மின்சார உற்பத்தி வழங்கி வருகிறது. யாலா நகரின் வெள்ளப் பிரச்சினையையும் ஓரளவிற்குத் தீர்க்கிறது. பெத்தோங்கில் ஆண்டு முழுவதும் மூடுபனி இருக்கும். எனவே "மூடுபனி மற்றும் அழகான பூக்கள் உள்ள நகரம்" (A city in fog and beautiful flowers) எனும் புனைப்பெயரையும் பெற்றது.[2]
சொற்பிறப்பியல்
தொகுபெத்தோங் என்ற பெயர் உண்மையில் தாய் மொழிச் சொல் அல்ல. இதன் அசல் மலாய் பெயர் 'மூங்கில்' என்று பொருள்.
வரலாறு
தொகு1939 செப்டம்பர் 30-ஆம் தேதி, தெசபன் தம்போன் (Thesaban Tambon) எனும் துணை மாவட்ட நகராட்சி அமைக்கப்பட்டபோது, இந்த நகரம் உள்ளூர் நிர்வாக ஆட்சியாக உருவாக்கப்பட்டது. 20 பிப்ரவரி 2004-இல் இந்த நகரம் தெசபன் மியூயாங் (Thesaban Mueang) எனும் நகராட்சி நிலைக்கு மேம்படுத்தப்பட்டது.[3][4]
பொருளாதாரம்
தொகுபெத்தோங் நகரின் பொருளாதாரத்தின் முக்கிய இயக்கியாக சுற்றுலாத் துறை விளங்குகிறது. மார்ச் 2022-இல், பெத்தோங் நகரில், வணிக வானூர்திகளுக்கான வானூர்தி நிலையம் திறக்கப்படும் வரையில், மேற்கத்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இல்லை.[4]
இந்த நகரத்தில் 3,000 முதல் 5,000 வரையிலான பாலியல் தொழிலாளர்கள் வசிப்பதாகவும்; அவர்களில் பெரும்பாலோர் மலேசியச் சுற்றுலாப் பயணிகளுக்கு சேவைகள் செய்வதாகவும் அறியப்படுகிறது. 2014-ஆம் ஆண்டில், 466,913 வெளிநாட்டினர் பெத்தோங்கிற்கு வருகை தந்தனர். இதன் மூலம் 2,130 மில்லியன் பாட் வருவாய் கிடைத்தது. 2016-இல் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 700,000-ஆக உயர்ந்தது.
சான்றுகள்
தொகு- ↑ "Betong, Thailand — statistics 2023". zhujiworld.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 18 April 2023.
- ↑ cultural information center(19 May 2554). of Betong Subdistrict/ Betong Subdistrict History.
- ↑ Royal Gazette 56 (g): 951–954. September 30, 1939. http://www.ratchakitcha.soc.go.th/DATA/PDF/2482/A/951.PDF. பார்த்த நாள்: ஏப்ரல் 18, 2023.
- ↑ Royal Gazette 122 (Special 20 D): 9–10. February 20, 2004. http://www.ratchakitcha.soc.go.th/DATA/PDF/0E/00138743.PDF. பார்த்த நாள்: ஏப்ரல் 18, 2023.
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளம்
- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Betong