தாய்லாந்து நேரம்

தாய்லாந்து முழுவதும் கடைப்பிடிக்கப்படும் ஒரு நேர முறைமை

தாய்லாந்து நேரம் அல்லது தாய்லாந்து சீர் நேரம் (ஆங்கிலம்: Time in Thailand; தாய்: เวลามาตรฐานไทย) என்பது தாய்லாந்து நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படும் ஒரு நேர முறைமையாகும்.

UTC +07:00-ஐ பயன்படுத்தும் நாடுகள்

இந்த நேர வலயம், கிரீன்விச் துள்ளிய நேரத்திற்கு (ஆங்கிலம்: Greenwich Mean Time (GMT) UTC+07:00 மணி நேரத்திற்கு முன்னதாக அமைகின்றது.[1]

பாங்காக் நகருக்கு முன்பு உள்நாட்டு நேரமாக UTC+06:42:04 என இருந்தது. 1920-ஆம் ஆண்டு வரை இந்த நேரப் பயன்பாடு அமலில் இருந்து வந்தது. அதன் பின்னர் இந்தோசீனா நேரம் (Indochina Time): எனும் UTC+07:00; ICT; உள்நாட்டு நேரமாகப் பயன்படுத்தப் படுகிறது.

தாய்லாந்து, பகல் சேமிப்பு நேரத்தைக் கடைபிடிப்பது இல்லை. வியட்நாம், கம்போடியா, லாவோஸ், கிறிஸ்துமஸ் தீவு மற்றும் மேற்கு இந்தோனேசியாவுடன் ஒரே நேர மண்டலத்தைப் பகிர்ந்து கொள்கிறது.[2][3]

விளக்கம்

தொகு

தமிழ்: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் ஆங்கிலம்: Coordinated Universal Time or UTC

ஒருங்கிணைக்கப்பட்ட பன்னாட்டு நேரம் அல்லது ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் (ஒ.ச.நே) என்பது அதிதுல்லிய அணு நேர சீர்தரம் ஆகும். பன்னாட்டு அணு நேரத்தின் மூலம் வரையறுக்கப்பட்டு உள்ளன.

தாய்லாந்து நேரம்

தொகு
பயன்பாட்டில் உள்ள காலம் கிரீன்விச் நேரம் ஈடுசெய்யப்பட்டது நேரத்தின் பெயர்
1 ஜனவரி 1880 - 31 மார்ச் 1920 UTC+06:42:04 பாங்காக் சராசரி நேரம்
1 ஏப்ரல் 1920 – தற்போது UTC+07:00 இந்தோசீனா நேரம் (ICT)

மேற்கோள்

தொகு
  1. "Time Zone & Clock Changes in Bangkok, Thailand". www.timeanddate.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-20.
  2. Arnold, Wayne (28 July 2001). "Thailand's Leader Wants to Switch Time Zones". New York Times. https://www.nytimes.com/2001/07/28/business/international-business-thailand-s-leader-wants-to-switch-time-zones.html. 
  3. Mok Ly Yng. "What time is it really?". Mathematics Department, National University of Singapore. பார்க்கப்பட்ட நாள் 2 July 2019.

மேலும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்லாந்து_நேரம்&oldid=3523014" இலிருந்து மீள்விக்கப்பட்டது