தெரசா ஆண்டர்சன்
தெரசா மேரி ஆண்டர்சன் (Teresa Mary Anderson) (பிறப்பு: 1962) ஒரு பிரித்தானிய இயற்பியலாளர் ஆவார். இவர் மான்செசுட்டர் பல்கலைக்கழகத்தின் ஜோடுரெல் வான்காணகக் கண்டுபிடிப்பு மைய இயக்குநரும் ஆவார். இவர் மான்செசுட்டர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் புளூடாட் விழாவின் அறிவியல் காப்பாளராகவும் உள்ளார்.
தெரசா ஆண்டர்சன் Teresa Anderson | |
---|---|
பிறப்பு | தெரசா மேரி ஆண்டர்சன் திசம்பர் 1962 (அகவை 61) |
பணியிடங்கள் | மான்செசுட்டர் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | |
ஆய்வேடு | MICADO-நேபாள நுண்புனல் மின் நிலைய முடிவெடுப்பு மென்பொருள் (1992) |
ஆய்வு நெறியாளர் | பெர்ட் விட்டிங்டன் ஏவன் மக்பெர்சன்[1] |
அறியப்படுவது | ஜோடுரெல் பாங்க் கண்டுபிடிப்பு மையம் புளூடாட் விழா |
விருதுகள் | கெல்வின் பரிசு (2014) |
கல்வி
தொகுதெரசா மான்செசுட்டர் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பள்ளியில் 1986-ம் ஆண்டு இளநிலைப் பட்டமும் பின்னர் கருவியியல் மற்றும் பகுப்பாய்வு அறிவியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றார். எடின்பரோ பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[1] பர்மிங்காம் கலை மற்றும் வடிவியில பயிலகத்தில் நுண்கலையில் முதுநிலைப் பட்டமும் பெற்றுள்ளார்
வாழ்க்கைப்பணி
தொகுகல்வியில் பட்டம் பெற்ற பின்னர் அவர் வளரும் நாடுகளில் வறுமையைத் தொழில்நுட்பம் வழியாகக் குறைக்கும் நோக்கம் கொண்ட பிராக்டிக்கல் ஆக்சன் என்ற தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்தார்.[2] இமயமலையிலும் இலங்கையிலும் தென் அமெரிக்கக் காடுகளிலும் பணிபுரிந்தார். பின்னர் ஐக்கிய இராச்சியம் திரும்பி புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் பருவநிலை மாற்றக் கொள்கைகள் தொடர்பாக அறிவியல் கொள்கை ஆய்வக அலகிலும் வார்விக் பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்தார்.
ஜோடுரெல் பாங்க் வான்காணகம்
தொகுஆண்டர்சன் 2006 இல் ஜோடுரெல் பாங்க் வான்காணகத்தில் சேர்ந்தார்.[3] இவர் 2010 இல் கண்டுபிடிப்பு மையத்தை உருவாக்கத் தொடங்கி அதை 2011 இல் திறந்துவைத்தார்.[4][5][6] இப்போது ஆண்டர்சன் கண்டுபிடிப்பு மையத்தின் இயக்குநராக உள்ளார். இங்கு ஒவ்வோராண்டும் 185,000 வருகையாளர்களை வரவேற்கிறார்.[7] ஜோடுரெல் பாங்க் பள்ளி நிகழ்ச்சி 2012 இல் தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு ஆண்டுதோறும் 26,000 பள்ளிக் குழந்தைகள் வருகை தருகின்றனர்.[7] இம்மையம் ஒரு சமூக முனைவகமாக இயங்குகிறது. இது வெளியில் இருந்து நிதியேதும் பெறுவதில்லை.[8]
இந்த மையம் Live from Jodrell Bank போன்ற அறிவியல் இசை நிகழ்ச்சிகளை நடத்தியது. இவற்றில் தணல் உதடுகள், புதிய ஒழுங்கு (New Order) முரசம், கால்முட்டி (Elbow) முரசம் ஆகிய இசைகளுடன் கிராபீன், நீள அடர்மி மொத்தி போன்ற அறிவியல் ஆராய்ச்சிகளும் அடங்கும்.[6][9] இந்த மையம் பல விருதுகளைப் பெற்றுள்ளது. அவற்றில் செசயர் சந்தையின் ஆண்டுக் குழு விருது, பிரித்தானிய விழா விருதுகள் சார்ந்த மீஉயர் படைப்புத்திறன் விருது ஆகியன அடங்கும்.[10] ஆண்டர்சன் 2015 இல் இம்மையத்தை முதல்தரக் களமாக வளர்த்தெடுக்க சீட்டுநிதி வழியாக பன்னிரண்டு (12) மில்லியன் பவுண்டுகளைத் திரட்டினார்.[11] இவர் 2016 புளூடாட் எனும் கண்டுபிடிப்பு விழாவை ஜோடுரெல் பாங்க் வான்காணகத்தில் தொடங்கிவைத்தார்.[2][12] பிராக்டிகல் ஆக்சன் நிறுவனம் புளூடாட் விழா அறக்கட்டளையின் ஓர் உறுப்பாண்மையாக விளங்குகிறது.[13] இவருக்கு மான்செசுட்டர் பலகலைக்கழகத்தில் தகைமைப் பேராசிரியர் பதவி அளிக்கப்பட்டது.[14][15] ஆண்டர்சனுக்கும் ஜோடுரெல் பாங்க் வான்காணகக் கண்டுபிடிப்பு மையத்துக்கும் 2017இல் பனிக்காலப் பாதீட்டு அறிக்கையில் நான்கு (4) மில்லியன் பவுண்டுகள் வழங்கப்பட்டன.[16][17][18] ஆண்டர்சனும் பேராசிரியர் திமோத்தி ஜான் ஓ பிறையனும் பல்லாண்டுகள் பணியாற்றிய களமாகிய உலோவல் தொலைநோக்கி இல்லம் 2019 இல் யுனெசுகோவால் பிரித்தானிய மரபு நினைவிடமகத் தேர்வு செய்யப்பட்டது.[19][20][21][22]
தகைமைகளும் விருதுகளும்
தொகுஆண்டர்சன் 2015 இல் தாப்னி ஜாக்சன் அறக்கட்டளைக்குத் தலைவரானார். இந்த அறக்கட்டளை இடையில் நின்ற அறிவியலாளர்களுக்கு மீண்டும் பணியில் தொடர உதவுகிறது.[23][24][25]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Anderson, Teresa Mary (1992). MICADO : a system of decision support software for micro hydro power in Nepal (PhD thesis). hdl:1842/13407. வார்ப்புரு:EThOS.
- ↑ 2.0 2.1 "The intergalactic festival where music, science, arts, culture and the exploration of space meet - Professor Teresa Anderson MBE, Science-Culture Director of Bluedot - Womanthology" (in en-US). Womanthology. 2017-04-19. http://www.womanthology.co.uk/intergalactic-festival-music-science-arts-culture-exploration-space-meet-professor-teresa-anderson-science-culture-director-bluedot/.
- ↑ "An Interview with Professor Teresa Anderson MBE" (in en-US). blue-stocking. 2017-04-17. https://blue-stocking.org.uk/2017/04/17/an-interview-with-professor-teresa-anderson-mbe/.
- ↑ O'Brien, Tim. "Jodrell Bank plans new 'live science' visitor centre | Jodrell Bank Centre for Astrophysics". www.jb.man.ac.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-03.
- ↑ "Jodrell Bank | Work | FCBStudios". fcbstudios.com. Archived from the original on 2018-04-03. பார்க்கப்பட்ட நாள் 2018-04-03.
- ↑ 6.0 6.1 "Jodrell Bank duo honoured for innovative science communication" (in en). Jodrell Bank duo honoured for innovative science communication. http://www.manchester.ac.uk/discover/news/jodrell-bank-duo-honoured-for-innovative-science-communication/.
- ↑ 7.0 7.1 "Teresa Anderson – Bluedot Festival". Bluedot Festival (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-03.
- ↑ "Real Science Pulsar Workshop at Jodrell Bank Discovery Centre". UKRI Gateway. பார்க்கப்பட்ட நாள் 2018-04-03.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ Smith, Stephen (2014-03-13). "Science festival aims to amaze youngsters". chesterchronicle. https://www.chesterchronicle.co.uk/news/chester-cheshire-news/amazed-science-jodrell-bank-brings-6809326.
- ↑ "Jodrell Bank Discovery Centre | The University of Manchester | Jodrell Bank Centre for Astrophysics". www.jodrellbank.manchester.ac.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-03.
- ↑ "£12m funding for Jodrell Bank visitor centre project | Construction Enquirer". www.constructionenquirer.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-03.
- ↑ "Caribou, Underworld for new Jodrell Bank festival - The Skinny" (in en). http://www.theskinny.co.uk/festivals/uk-festivals/music/caribou-underworld-for-new-jodrell-bank-festival.
- ↑ "We have teamed up with Practical Action. – Bluedot Festival". Bluedot Festival (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-03.
- ↑ "Teresa Anderson | British Council México". www.britishcouncil.org.mx (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-03.
- ↑ "Your Manchester 2017" (in en). Issuu. https://issuu.com/alumniuom/docs/kd339_20your_20manchester_202017_20.
- ↑ "Jodrell Bank telescope to receive £4m from the budget | The Mancunion". mancunion.com (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-04-04. பார்க்கப்பட்ட நாள் 2018-04-03.
- ↑ "Heritage protection honour for Jodrell Bank observatory astronomy site" (in en). https://www.yorkshirepost.co.uk/news/heritage-protection-honour-for-jodrell-bank-observatory-astronomy-site-1-8680611.
- ↑ "Chancellor announces £4m for historic Jodrell Bank" (in en). Chancellor announces £4m for historic Jodrell Bank. http://www.manchester.ac.uk/discover/news/chancellor-4m-historic-jodrell-bank-observatory/.
- ↑ "Jodrell Bank UNESCO global Nomination for World Heritage Site" (in en). Jodrell Bank UNESCO global Nomination for World Heritage Site. http://www.manchester.ac.uk/discover/news/jodrell-bank-unesco-global-nomination-for-world-heritage-site/.
- ↑ Kennedy, Maev (2018-01-30). "Jodrell Bank nominated as Unesco world heritage site". the Guardian (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-03.
- ↑ "Heritage Archives - Jodrell Bank". Jodrell Bank (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-03.
- ↑ "UK puts forward Jodrell Bank Observatory as 2019 World Heritage nomination - GOV.UK". www.gov.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-03.
- ↑ caroline.cross@surrey.ac.uk, Caroline Cross,. "Teresa Anderson MBE, to chair Daphne Jackson Trust's Board of Trustees". www.daphnejackson.org (in ஆங்கிலம்). Archived from the original on 2018-04-03. பார்க்கப்பட்ட நாள் 2018-04-03.
{{cite web}}
: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link) - ↑ caroline.cross@surrey.ac.uk, Caroline Cross,. "Trustees". www.daphnejackson.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-03.
{{cite web}}
: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Teresa Anderson MBE to chair Daphne Jackson Trust's Board of Trustees | StaffNet | The University of Manchester". www.staffnet.manchester.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 2018-04-03.