தெற்குகாருசேரி வல்லகுளம் குலசேகரநாதசுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

தெற்குகாரசேரி குலசேகரநாதர் கோயில் என்பது தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், தெற்குகாரசேரி என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1]

அருள்மிகு குலசேகரநாதர் கோவில்
ஆள்கூறுகள்:8°36′19″N 77°49′31″E / 8.6054°N 77.8252°E / 8.6054; 77.8252
பெயர்
வேறு பெயர்(கள்):திரு காரசேரி
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தூத்துக்குடி
அமைவிடம்:சன்னதிதெரு, தெற்குகாரசேரி, தெற்குகாரசேரி, ஸ்ரீவைகுண்டம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஸ்ரீவைகுண்டம்
மக்களவைத் தொகுதி:தூத்துக்குடி
ஏற்றம்:83 m (272 அடி)
கோயில் தகவல்
மூலவர்:குலசேகரநாதர்
தாயார்:அறம்வளர்த்தநாயகி
குளம்:தெப்பக்குளம் அருகில் உள்ளது
சிறப்புத் திருவிழாக்கள்:பிரதோஷம் மஹா சிவராத்திரி ,சித்திரை வருடப்பிறப்பு, திருக்கல்யாணம், பௌர்ணமி,திருவாதிரை ஆருத்ரா தரிசனம் , கந்தசஷ்டி பூஜை,
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்த பாண்டியர்கள் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று
கல்வெட்டுகள்:பாண்டியர்கள் கால கல்வெட்டுகள் கயல் கொடி தாங்கிய மீன் சின்னம் பல்வேறு இடங்களில் உள்ளது
வரலாறு
கட்டிய நாள்:ஏழாம் நூற்றாண்டு
அமைத்தவர்:குலசேகரபாண்டியன் மன்னர் மற்றும் குலசேகரபாண்டியன் வம்சாவழிகள்
இணையத்தளம்:சிவன் வரலாறு மற்றும் #நவலிங்கபுரம் சிவதலகள்

தலபுராணம்

தொகு

பாண்டிய தேசத்தை ஆண்ட மன்னன் குலசேகரன் ஒரு முறை தன் படை வீரர்களுடன் காட்டுக்கு வேட்டையாடிப் புறப்பட்டான். பொதியமலையின் அடர்ந்த காட்டுக்குள் பயணித்துச் செல்கின்றபோது வழியில் ஓரிடத்தில் சில முனிவர்கள் பந்தல் அமைத்துக் கொண்டிருந்தனர். தாங்கள் செல்லும் வழியில் அந்தப் பந்தல் இருந்ததால், முனிவர்களைக் கூப்பிட்டு இதை அகற்றச் சொன்னார்கள் படை வீரர்கள், இங்கே மிகப் பெரிய வேள்வி நடத்தப்பட இருக்கிறது. அதனால்தான் இந்தப் பந்தல். இதை அகற்றினால் எங்களில் குருநாதர் கோபித்துக் கொள்வார் என்று சொன்னார்கள் முனிவர்கள். முனிவர்களின் முன்பு விவேகத்துடனும், அடக்கத்துடனும் செயல்பட மன்னனும் படை வீரர்களும் அங்கே மறந்து போனது துரதிர்ஷ்டம். விளைவு – கோபப்பட்ட வீரர்கள், அந்தக் பந்தலைப் பிரித்தெரியத் தொடங்கினர். முனிவர்களின் குரு ஸ்தானத்தில் இருந்த கனகமுனி என்பவர், ஆத்திரத்தில் முகம் சிவந்தார். ஒரு மன்னன் என்பவன் தன் நாட்டு மக்களையும் அந்தணர்களையும் நலமுடன் காத்து, இறை பக்தி தன் சாம்ராஜ்யத்தில் மேலோங்கச் செய்ய வேண்டும். இதுதான் அவனது கடமை, அப்படிப்பட்ட ஒரு மன்னனே, நாட்டின் நலம் காக்க நடத்தப்படும் வேள்விச் சாலையில் பந்தலைப் பிரித்தெரிவதா ? இதை விட கேவலம் ஏதும் இல்லை, தகாத செயலைச் செய்த நீ தீராத வயிற்று வலியால் இன்று முதல் அவஸ்தைப்படுவாய் என்று கடும் கோபத்துடன் சாபம் கொடுத்தார் கனகமுனி. குலசேகர மன்னன் சாபத்தைக் கேட்டுத் துடிதுடித்துப் போனான். தன் பிழை பொறுக்குமாறும், இதற்கு சாப விமோசனம் அருளுமாறும் கனகமுனி மற்றும் அங்கு கூடி இருந்த முனிவர்கள் அனைவரிடமும் வேண்டினான். இதை அடுத்து, மனம் இளகினார் முனிவர்கள். பிறகு, இதுவரை நீ எந்தெந்த இடங்களில் எல்லாம் வேட்டையாடி முனிவர்களுக்கும் காட்டு விலங்குகளுக்கும் தொந்தரவு கொடுத்தாயோ, அங்கெல்லாம் ஒரு சிவாலயம் எழுப்பி வழிபாடு நடத்து. இதன்படி செய்து வந்தால், உன் வயிற்று வலியும் படிப்படியாகக் குணமாகும் என்று விமோசனம் அருளினர் முனிவர்கள். இறை பக்தியுடன் குலசேகர பாண்டியனது பயணம் அங்கிருந்து ஆரம்பமானது. தான் வேட்டையாடி மிருகவதை செய்த இடங்களிலும், முனிவர்களை அலட்சியம் செய்த இடங்களிலும், படை வீரர்களுடன் தங்கினான். கோயில் கட்டினான். வழிபாடுகளைத் துவக்கி வைத்தான். இப்படிப் பயணித்துக் கொண்டே வந்தவன், கடைசியில் பத்தை என்கிற இந்த ஊருக்கு வந்து சேர்ந்தான். இங்கு காமதேனு வழிபாடு செய்த சுயம்பு லிங்கமூர்த்தத்தை பூஜித்தான். சாபமாகத் தான் பெற்ற நோயைப் போக்கி அருளுமாறு இந்த ஆதி நாதரிடம் பிரார்த்தித்தான்.


மன்னனின் பூஜையில் அகம் மகிழ்ந்து ஈசனும் உமையும் ஒரு நாள் குலசேகர மன்னனுக்குக் காட்சி தந்தனர். மன்னனின் தீராத வயிற்று வலி நோய் தீர அருளினார்கள். பிறகு, ஈசனிடம் மன்னன், தாங்கள் எனக்கு இங்கு திருக்காட்சி தந்ததை நினைவுபடுத்தும் வகையில் என் பெயர் தாங்கி, இங்கே என்றென்றும் அருள் வேண்டும். தங்களைத் தரிசிக்க வரும் பக்தர்களின் பிணிகளைத் தீர்த்தருள வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டான். அப்படியே ஆகட்டும் என்று ஈசனும் அருள… பின்னாளில் தனக்குக் காட்சி தந்த ஈசனை, விக்கிரகமாக வடித்து வைத்தானாம் குலசேகரன். அந்த லிங்கத் திருமேனியே, குலசேகரநாதர் என அழைக்கப்பட்டது. மன்னன் குலசேகரனுக்குத் தரிசனம் தரும் அவசரத்தில் தலையில் கிரீடம் எதுவும் அணியாமல், கேசத்தையே ஒரு ஒரு கிரீடம் போல் சுற்றி அமைத்துக் கொண்டு கயிலாயத்தில் இருந்து தேவி வந்தாள். எனவே, தனக்குத் திருக்காட்சி தந்த தேவியின் திருவடிவத்தை நினைவுபடுத்தும் விதமாக மன்னன் வடித்த உமையின் வடிவம், அறம்வளர்த்தநாயகி அம்பாள் என ஆனது. கோயில் கட்டியதோடு தன் பணிகளை நிறுத்திக் கொள்ளவில்லை குலசேகர மன்னன். தனது 15-ஆம் ஆட்சி ஆண்டில் இங்கு தேவாரம் தொடர்ந்து ஓதுவதற்குக் கட்டளை அமைத்தான். மேலும் அமுது படிக்காக நிலங்களை அவன் ஒதுக்கினான் என்றும் கல்வெட்டுகள் தகவல் சொல்கின்றன.

திருக்கோவில் சிறப்பு

தொகு

ஒன்பது சிவத்தலங்கள் உள்ளடக்கிய நவலிங்கபுரம் சிவத்தலங்களில் ஒன்றாக இக்கோயில் உள்ளது. கருவூரார் சித்தர் வழிபட்ட சிவத்தலம் இது.

சிறப்பு

தொகு

சுமார் 800 வருடங்களுக்கு முன் இந்த ஊர் மிகப்பெரிய பட்டினமாக இருந்துள்ளது. அதற்கு பல தடயங்கள் உள்ளன. ஆங்கிலேயர் ஆதிக்கம் தலைவிரித்து ஆடிய சமயத்தில், சுமார் 250 வருடங்களுக்கு முன்பு கூப்பிட்ட குரலுக்கு என்னவென்று கேட்காத பல கோவில்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இக்கோவிலுக்கு வெள்ளைக்கார அதிகாரி குதிரையில் வந்து, கோவில் அருகே உள்ள பாறையில் நின்று கொண்டு “குலசேகரா” என்று இறைவனின் பெயரைச் சொல்லி கூப்பிட்டான். ஆனால் தெய்வம் பதில் அளிக்கவில்லை. இதனால் “கோவிலை தரைமட்டம் ஆக்குங்கள்” என்று கூறினான். உடனே ஆங்கிலேய படையினர் கோவிலை அடித்து நொறுக்கத் தயாரானார்கள். அப்போது எதிர்பாராத விதமாக பாறை மீது நின்ற குதிரை, அந்த துரையை கீழே தூக்கி வீசியது. இதில் நிலைகுலைந்து போன துரை கீழே விழுந்தான். குதிரை மறு நிமிடம் தனது காலால் மிதித்து அவனைக் கொன்று விட்டது. இதனைக் கண்ட மற்ற ஆங்கிலேயர்கள் ஓட்டம் பிடித்தனர். அந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில், தற்போது குதிரையின் கால் தடம் மற்றும் துரையின் கால் தடம், முட்டு, கை தடம் காணப்படுகிறது.

இக்கோவிலில் எல்லா விழாக்களும் மிகச்சிறப்பாக நடைபெறுகின்றன. சித்திரை வருஷ பிறப்பு, வைகாசி விசாகம், பிரதோஷம், சிவராத்திரி, திருவாதிரை, சஷ்டி, திருக்கார்த்திகை, திருக்கல்யாணம் உட்பட அனைத்து பூஜைகளும் சிறப்பாக நடந்து வருகின்றன. குலசேகர மன்னன், தனக்கு எதிரிகள் மூலம் பிரச்சினை வரும் போதெல்லாம் வெற்றி வேண்டுமென்றால் இக்கோவிலில் வந்து வணங்கி சென்றதாக கூறப்படுகிறது. வெற்றியை பெற்று தரும் கோவிலாக இத்தலம் விளங்கி வருகிறது. இதனால் அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றி பெறவும், மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறவும் இங்கே வந்து வணங்கி செல்கிறார்கள். மேலும் நீண்டநாள் நோய், விபத்தில் ஏற்பட்ட பெரும் காயம் நீங்கி விடுவதாகவும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இங்குள்ள வள்ளி - தெய்வானை சமேத முருகன் முன்பு திருமணம் முடித்தால், குழந்தைப்பேறு நிச்சயம் என்பது ஐதீகம். இந்தக் கோவில் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

தொகு

இந்த கோவிலுக்கு நெல்லை - திருச்செந்தூர் மெயின் ரோட்டில் 18 கி.மீ. தொலைவில் இருக்கிறது கருங்குளம் விளக்கு. இங்கிருந்து வலது பக்கமாக திரும்பி சென்றால் 6 கிலோமீட்டர் தூரத்தில் தெற்கு காரசேரி உள்ளது. அங்கிருந்து 1 கிலோமீட்டர் ஊருக்குள் சென்றால் கோவில் இருக்கிறது.

வரலாறு

தொகு

இக்கோயில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.வார்ப்புரு:கூடுதல் சான்று: சிவன் வரலாறு மற்றும் நவலிங்கபுரம் சிவத்தலங்கள் (கோயில்) தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் உள்ளது தெற்கு காரசேரி. தேரோடும் வீதிகள் நிறைந்த பெரும் பட்டணமாக விளங்கிய நல்லூர் இது. இந்த கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் குலசேகர நாதர் என்றும் இறைவியார் குலசேகர நாயகி என்றும் அருள்பாலிக்கின்றனர். குலசேகரப் பட்டணத்தினைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த குலசேகர பாண்டியன் ஆட்சிக் காலத்தில் ஒரே நேரத்தில் 9 சிவன் கோயில்கள் கட்டினார். அக்கோயில்களில் ஒரே நேரத்தில் பூஜை செய்து மகிழ்ந்தார். குலசேகரபட்டிணத்தில் இருந்து திருவாங்கூர் வரை இந்த 9 கோயில்களும் அமைந்திருந்தன. அந்த ஒன்பது கோயில்கள் வரிசையில் இதுவும் அடங்கும்.

கோயிலில் சிவ பெருமான் கிழக்கு நோக்கிச் சற்று இடது புறம் சாய்ந்து பக்தர்கள் கோரிக்கையைக் கேட்கும் விதமாகக் காட்சியளிக்கிறார். அம்மை குலசேகர நாயகி தெற்கு நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கிறார்.

சனி பகவான், பைரவர், சூரியன், சந்திரன், அதிகாரநந்தி, நவக்கிரகம் என எல்லா தெய்வங்களும் அருள்பாலிக்கிறார்கள். தொடர்ந்து கோயிலைச் சுற்றி வந்தால் சுர தேவர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள். கன்னிமூலையில் விநாயகப் பெருமான், மறுபுறம் வள்ளி தெய்வானையும் சமேத முருகபெருமானும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே காசி விசுவநாதர் - விசாலாட்சி, சோமசுந்தரர் - மீனாட்சி அருள் பாலிக்கிறார்கள். அதைத் தொடர்ந்து சண்டிகேஸ்வரர் வீற்றிருக்கிறார்.

குலசேகரநாதர்குலசேகரநாதர் இங்குள்ள சிவனை வணங்கி வேண்டிக்கொண்டால் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருப்பவர்களுக்கும் குணம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. நாள் பட்ட நோய்கள் தீர்கின்றன. இங்குள்ள வள்ளி தெய்வானை சமேத முருகன் முன்பு, பக்தர்கள் திருமணம் செய்துகொண்டால் திருமண வாழ்வு சிறப்பதோடு குழந்தைபேறும் விரைவில் கிடைக்கும்.

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் குலசேகரநாதர், அறம்வளர்த்தநாயகி இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் காரணாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

தொகு