தெற்கு சித்தூர்

இந்தியாவின் கேரளாவிலுள்ள ஒரு புறநகர்

தெற்கு சித்தூர் (South Chittoor) என்பது இந்தியாவின் கேரளாவில் உள்ள கொச்சி நகரில் அமைந்துள்ள ஆற்றுநீரால் சூழப்பட்ட ஒரு தீவு ஆகும். வடுதலாவிற்கு அருகில் இத்தீவு அமைந்துள்ளது. வடுதாலா பாலம் தெற்கு சித்தூரை வடுதாலாவுடன் இணைக்கிறது. தெற்கு சித்தூர் தியான கேந்திரமும் சித்தூரப்பன் கோவிலும் தெற்கு சித்தூரில் அமைந்துள்ளன.[1] ஆசுட்டர் மெடிசிட்டி என்ற பல்நோக்கு மருத்துவமனையும் இங்கு அமைந்துள்ளது.[2]

தெற்கு சித்தூர்
South Chittoor
ஆற்றின்மேலான தீவு
தெற்கு சித்தூர் South Chittoor is located in கேரளம்
தெற்கு சித்தூர் South Chittoor
தெற்கு சித்தூர்
South Chittoor
இந்தியாவின் கேரளாவில் அமைவிடம்
தெற்கு சித்தூர் South Chittoor is located in இந்தியா
தெற்கு சித்தூர் South Chittoor
தெற்கு சித்தூர்
South Chittoor
தெற்கு சித்தூர்
South Chittoor (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°01′15″N 76°16′27″E / 10.0207°N 76.2741°E / 10.0207; 76.2741
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்எர்ணாகுளம் மாவட்டம்
மொழிகள்
 • அதிகாரப்புர்வம்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
இடக் குறியீடு0484
வாகனப் பதிவுகே எல்-07
அருகாமை நகரம்கொச்சி

கண்ணோட்டம்

தொகு

கொச்சியில் உள்ள மற்ற பகுதிகளை ஒப்பிடும் போது, தெற்கு சித்தூர் ஓர் அமைதியான பகுதியாகும். இப்பகுதி பிரதான நிலப்பகுதியுடன் சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. தெற்கு சித்தூரில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒரு படகுத் துறையும் அமைந்துள்ளது.[3] தெற்கு சித்தூர் நீர் மெட்ரோ நிலையத்தை மேம்படுத்தும் திட்டமும் உள்ளது. இத்திட்டம் தற்பொழுது கட்டுமானத்தில் உள்ளது. கொச்சியின் வடக்கு பகுதிகளுக்கான சேவைகளுக்கான மையமாக நீர்மெட்ரோ நிலையம் இருக்கும்.[4] சித்தூர் கொட்டாரம் அரண்மனை, தெற்கு சித்தூரில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலமாகும். நிசாந்து சுனீச்சு நிர்வகிக்கும் புகழ்பெற்ற அடுமனையான சுச்சிதா உணவகத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் இந்த அரண்மனை அமைந்துள்ளது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Chittoor to be Water Metro hub in city’s northern region". The Times of India. 2023-09-20. https://timesofindia.indiatimes.com/city/kochi/chittoor-to-be-water-metro-hub-in-citys-northern-region/articleshow/103797760.cms. 
  2. Bureau, BL Kochi (2022-09-29). "Aster Medcity inducts houseboats for medical tourists treatment". BusinessLine (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-23.
  3. "ഹബ്ബാകാൻ സൗത്ത് ചിറ്റൂ‍ർ, ചേരാനല്ലൂ‍ർ വരെ കായൽവഴി മെട്രോ, വടക്കൻ കൊച്ചിയിൽ വികസനം അതിവേഗം". Samayam Malayalam (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-23.
  4. "Water Metro services to cover Eloor, South Chittoor & Cheranalloor soon in Kochi". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-11-23.
  5. Rao, Bindu Gopal RaoBindu Gopal. "A palace stay in South Chittoor, Kerala, for the fancy traveller in you". The Times of India. https://timesofindia.indiatimes.com/travel/hotels/a-palace-stay-in-south-chittoor-kerala-for-the-fancy-traveller-in-you/articleshow/95974315.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்கு_சித்தூர்&oldid=3869659" இலிருந்து மீள்விக்கப்பட்டது