தெலுங்கு இலக்கணம்
தெலுங்கு மொழியில் முதல் இலக்கணமாக (தெலுங்கு: వ్యాకరణం vyākaraṇam), ஆந்திர சப்த சிந்தாமணி (தெலுங்கு : ఆంధ్ర శబ్ద చింతామణి Āndhra śabda cintāmaṇi) சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. இதன் ஆசிரியர் நன்னயா ஆவார். இவர் தெலுங்கு மொழியின் முதல் கவிஞராக (ஆதிகவி) விளங்குகின்றார். அதுமட்டுமின்றித் தெலுங்கு மொழியின் இலக்கண கர்த்தாக்களுள் முதல்வராகவும் இடம்பெறுகின்றார். இவர் 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறார். இவருக்குப் பிறகு அதர்வணாவும் அகோபலாவும் சூத்திரங்களை உருவாக்கியுள்ளனர். அவை வர்திகாஷ், பாஷ்யம் என்பன.
நன்னய்யாவிடமிருந்து கருத்துகளையும் கோட்பாடுகளையும் பெற்று 19ஆம் நூற்றாண்டில் சின்னாய சூரி, தான் எழுதிய தெலுங்கு இலக்கண நூலாகிய பாலவியாகரணத்தில் (குறிப்பு- இது குழந்தைகளுக்கான இலக்கணம்), விரிவாக விளக்கியுள்ளார்.[1]
நன்னயாவின் கூற்றுப்படி 'நியம' அல்லாத மொழிகளையும் வியாகரணத்தைப் பின்பற்றாத மொழியையும் கிராமியம் (கிராமிய மொழியம்) அல்லது அபப்பிரம்சம், என அழைக்கப்படுகிறது. இவ்விலக்கணத்தில் அம்மொழிகள் இலக்கிய பயன்பாட்டிற்குத் தகுதியற்றதாக உள்ளது. தெலுங்கில் உள்ள அனைத்து இலக்கிய நூல்களும் வியாகரணத்தைப் பின்பற்றுகின்றன.[1]
திரிதல்
தொகுபிற திராவிட மொழிகளைவிட தெலுங்கு அதிகம் திரிந்துள்ளது. குறிப்பாகத் தெலுங்குப் பெயர்ச்சொற்களுள் எண் (ஒருமை, பன்மை), பாலினம் (ஆண்பால், ஆண்பால் அல்லாதவை), இலக்கண வழக்கு (எழுவாய் வேற்றுமை, செயப்படுபொருள் வேற்றுமை, கருவி வேற்றுமை, கொடை வேற்றுமை, நீங்கல் வேற்றுமை, உடைமை வேற்றுமை, இடவேற்றுமை, விளி வேற்றுமை) ஆகியவற்றில் திரிந்துள்ளன.[1]
பால்
தொகுதெலுங்கில் மூன்று பால்கள் உள்ளன.
- ஆண்பால் (புருஷ லிங்கமு)
- பெண்பால் (ஸிரீ லிங்கமு)
- அலிப்பால் (நபும்ஸக லிங்கமு)
தெலுங்கில் (–டு) பின்னொட்டாக அமைந்தால் ஆண்பாலைக் குறிக்கும். உதாரணத்திற்கு
- தம்முடு (தம்பி)
- முக்யுடு (முக்கியமான மனிதன்)
- ராமுடு (இராமன் )
- நாயகடு (தலைவர்)
இருப்பினும், ஆண்பால் வகுப்பைச் சேர்ந்த (-டு)வில் முடிவடையாத பெயர்ச்சொற்கள் உள்ளன. உதாரணத்திற்கு
- அந்நய (மூத்த சகோதரர்)
- மாமய்ய (மாமா)
தெலுங்கில் (-டு)வில் முடிவடையும் பெரும்பாலான சொற்கள் சமஸ்கிருதத்தில் (-அ)வில் முடிவடையும். இவை சமஸ்கிருதச் சொற்களிலிருந்து கடன் வாங்குவதால் ஏற்படும் மாறுபாடு. எனவே, இந்த வார்த்தைகளின் பெண்பால் வடிவங்கள் சமஸ்கிருதச் சொற்களுக்குச் சமமானவை.
எண் (வசனமு)
தொகுஒரே ஒரு எண்ணிக்கையைக் கொண்ட சொல்லை ஒருமை (ஏக வசனமு) என்றும் ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிக்கும் சொல்லை (-கள்) ஆங்கிலத்தில் உள்ளதைப் போல பன்மை (பஹுவசனமு) என்றும் அழைக்கப்படுகிறது.
தெலுங்கில் பெரியவர்களை மரியாதையுடன் அழைக்கவும் பன்மை பயன்படுத்தப்படுகிறது. சில பெயர்ச்சொற்கள் எப்போதும் பன்மையாகவும் சில ஒருமையாகவும் உள்ளன. உதாரணமாக - நீர் (நீலு) - இது எப்போதும் பன்மை.
கடவுள் (பகவஸ்துடு), சூரியன் (சூரியடு), பூமி (பூமி), சந்திரனும் (சந்துருடு) - இச்சொற்கள் எப்பொழுதும் ஒருமையாகவே உள்ளன. எனினும், தேவலு பகவஸ்துடு ஒரு பன்மை வடிவம், பல தெய்வங்களைக் குறிப்பிடும் பொழுது இத்தன்மை பயன்படுத்தப்படுகிறது.