தெலூரியம் டையாக்சைடு
தெலூரியம் டையாக்சைடு (Tellurium dioxide) என்பது TeO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தெலூரியம் தனிமத்தின் திண்ம நிலை ஆக்சைடு தெலூரியம் டையாக்சைடு ஆகும். தெலூரியம் டையாக்சைடு இரண்டு வடிவங்களில் காணப்படுகிறது. மஞ்சள் நிறத்தில் காணப்படும் செஞ்சாய் சதுர தெலூரைட்டு (β-TeO2) கனிமம் பீட்டா வடிவம் எனப்படுகிறது. செயற்கை முறை தயாரிப்பான நிறமற்ற நாற்கோண ஆக்சைடு வடிவம் ஆல்பா வடிவம் பாராதெலூரைட்டு எனப்படுகிறது [2]. பெரும்பாலான தெலூரியம் டையாக்சைடின் பண்புகள் ஆல்பா வடிவத்துடன் தொடர்புள்ளவையாகும் [3]. 1245 பாகை செல்சியசு வெப்பநிலை அல்லது 2273 பாகை பாரன்கீட்டு வெப்பநிலையில் தெலுரியம் டையாக்சைடு கொதிக்கும்.
α-TeO2, paratellurite
| |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
தெலூரியம்(IV) ஆக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
7446-07-3 | |
ChemSpider | 56390 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 62638 |
| |
UNII | 397E9RKE83 |
பண்புகள் | |
TeO2 | |
வாய்ப்பாட்டு எடை | 159.60 கி/மோல் |
தோற்றம் | வெண் திண்மம் |
அடர்த்தி | 5.670 கி/செ.மீ3செஞ்சாய்சதுரம் 6.04 கி/செ.மீ3 நாற்கோணம் [1] |
உருகுநிலை | 732 °C (1,350 °F; 1,005 K) |
கொதிநிலை | 1,245 °C (2,273 °F; 1,518 K) |
குறைவு | |
கரைதிறன் | அமிலம், காரங்களில் கரையும் |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 2.24 |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | கந்தக டை ஆக்சைடு செலீனியம் டையாக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுதெலூரியத்துடன் டையாக்சிசன் (O2) வினைபுரிவதால் பாராதெலூரைட்டு α-TeO2 உருவாகிறது:[2]
- Te + O2 → TeO2
தெலூரசு அமிலத்தை நீர்நீக்கம் செய்து மற்றொரு வழிமுறையில் ஆல்பா தெலூரியம் டையாக்சைடை தயாரிக்கலாம். அல்லது கார தெலூரியம் நைட்ரேட்டை (Te2O4.HNO3) 400 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடுபடுத்தி சிதைவு வினைக்கு உட்படுத்தியும் இதை தயாரிக்கலாம் [2].
வேதிப் பண்புகள்
தொகுதெலூரியம் டையாக்சைடு தண்ணீரில் அரிதாகவே கரைகிறது. ஆனால் வலிமையான அமிலங்களிலும், கார உலோக ஐதராக்சைடுகளிலும் நன்கு கரைகிறது[4]. தெலூரியம் டையாக்சைடு ஓர் ஈரியல்பு நிலை ஆக்சைடு என்பதால் அது கரைந்திருக்கும் கரைசலுக்கு ஏற்ப அமிலமாகவும் காரமாகவும் இதனால் செயல்பட முடியும். அமிலங்களுடன் இச்சேர்மம் வினைபுரிந்து தெலூரியம் உப்புகளையும் காரங்களுடன் வினைபுரிந்து தெலூரைட்டுகளையும் இது கொடுக்கிறது. தெலூரிக் அமிலம் அல்லது தெலூரேட்டுகளாக தெலூரியம் டையாக்சைடை ஆக்சிசனேற்றம் செய்ய முடியும். பாராதெலூரைட்டை ( α-TeO2) உயர் அழுத்தத்தில் பீட்டா வடிவ தெலூரியம் டையாக்சைடாக மாற்றலாம்[5]. இரண்டு வகையான தெலூரியம் டையாக்சைடுகளிலும் ஒரு முக்கோண இரட்டைக் கூர்நுனி கோபுரத்தின் நான்கு மூலைகளில் ஆக்சிசன் அணுவுடன் கூடிய நான்கு ஒருங்கிணைவு தெலூரியம் அணுக்களை கொண்டுள்ளன. பாராதெலூரைட்டில் அனைத்து செங்குத்துகளும் ஒரு உரூட்டல் போன்ற அமைப்பைக் கொடுப்பதற்காக பகிரப்படுகின்றன, அங்கு O-Te-O பிணைப்பு கோணம் 140 பாகை ஆகும். ஆல்பா-தெலூரியம் டையாக்சைடு இருக்கும் முக்கோண இரட்டைக்கூர்நுனி தெலூரைட்டு இணைகளில் TeO4 அலகுகள் விளிம்புகளை செங்குத்துகளுடன் பகிர்ந்து கொண்டு ஓர் அடுக்கை உருவாக்குகின்றன[5]. தெலூரைட்டில் உள்ள குறுகிய Te-Te பிணைப்பு இடைவெளி 317 பைக்கோமீட்டர் ஆகும்[5]. அதுவே பாராதெலூரைட்டில் ஒப்பிடும்போது 374 பைக்கோமீட்டர் ஆகும். தென்னிங்கைட்டு கனிமத்தில் Te2O6 அலகுகள் காணப்படுகின்றன[5]. 732.6 பாகை செல்சியசு வெப்பநிலையில் தெலூரியம் டையாக்சைடு உருகி சிவப்பு நிற நீர்மமாகிறது[6].
பயன்கள்
தொகுஒலிசார்ந்த ஒளியியல் கருவிகளில் இப்பொருள் பயனாகிறது. ஓர் ஆக்சைடு அல்லது ஆலைடை இதனுடன் இரண்டாவது சேர்மமாக மோலார் அளவுகளில் சேர்த்து கண்னாடி தயாரிக்கலாம். தெலுரியம் டையாக்சைடு கண்ணாடிகள் உயர் ஒளிவிலகல் குறியீட்டெண்களை கொண்டவையாகும். மின்காந்த அலைமாலையின் நடுப்பகுதி அகச்சிவப்பு பகுதியில் செலுத்தப்படுகின்றன. எனவே ஒளியியல் துறையில் இது கவனிக்கப்பட்டும் ஆய்வுக்கு உட்பட்டும் வருகிறது. ஒளியியல் இழைகளின் பெருக்கத்தில் இது மிகுந்த பயனுள்ள ஒரு பொருளாக உள்ளது.
பாதுகாப்பு
தொகுTeO2ஒரு கருவளர்ச்சி குறைப்பியாகும்.[7] தெல்லூரியம் சேர்மங்கள் காற்றில் வெளிப்படும்போது எத்தில் தெலூரைடு உருவாதலால் சுவாசத்தின்போது பூண்டு போன்ற நெடி தோன்றுகிறது[8].
மேற்கோள்கள்
தொகு- ↑ Pradyot Patnaik (2002). Handbook of Inorganic Chemicals. McGraw-Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8.
- ↑ 2.0 2.1 2.2 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1984). Chemistry of the Elements. Oxford: Pergamon Press. p. 911. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-08-022057-6.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|1=
(help) - ↑ W.R.McWhinnie (1995) Tellurium - Inorganic chemistry Encyclopedia of Inorganic Chemistry Ed. R. Bruce King (1994) John Wiley & Sons பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-93620-6
- ↑ Mary Eagleson (1994). Concise Encyclopedia Chemistry. Berlin: Walter de Gruyter. p. 1081. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-11-011451-8.
- ↑ 5.0 5.1 5.2 5.3 Wells, A. F. (1984), Structural Inorganic Chemistry (5th ed.), Oxford: Clarendon Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855370-6
- ↑ Egon Wiberg; Nils Wiberg; Arnold Frederick Holleman (2001). Inorganic chemistry. Academic Press. pp. 592–593. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.
- ↑ "Maternal toxicity and teratogenicity of tellurium dioxide in the Wistar rat: relationship to pair-feeding". Reprod. Toxicol. 2 (1): 55–61. 1988. doi:10.1016/S0890-6238(88)80009-1. பப்மெட்:2980402. https://archive.org/details/sim_reproductive-toxicology_1988_2_1/page/55.
- ↑ Atta-ur-Rahman (2008). Studies in Natural Products Chemistry, Volume 35. Elsevier. p. 905. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-444-53181-5.