தேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு)

புதிய தேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) (New National Education Policy 2019 - Draft) என்பது இந்திய அரசு 2019 ஆம் ஆண்டில் முன்மொழிந்துள்ள புதிய தேசிய கல்விக்கான கொள்கையின் வரைவு ஆகும். இந்த வரைவு அறிக்கையானது புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான குழுவின் தலைவர் முனைவர் கே, கஸ்தூரி ரங்கனால் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேசு போக்கிரியால் நிசாங்க் மற்றும் இணை அமைச்சர் சாம்ராவ் தோத்ரே ஆகியோரிடம் உயர் கல்வித் துறை செயலர் ஆர். சுப்ரமணியம் மற்றும் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவிற்கான துறையின் செயலர் ரினா ராய் ஆகியோர் முன்னிலையில் 2019 மே 31 ஆம் நாள் சமர்ப்பிக்கப்பட்டது. [1]

வரலாறு தொகு

2014-2019 ஆட்சிக் காலத்திலேயே இதற்கான முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. கல்வியில் செய்யப்பட வேண்டிய சீரமைப்புகள் மற்றும் மாற்றங்கள் தொடர்பாக கருத்துக்களைப் பெறுவதற்காக கிராமத்திலிருந்து நகர்ப்புறம் வரைக்கும், அடிநிலையிலிருந்து, மேல்நிலை வரைக்கும், கல்வியின் பொறுப்புதாரர்களையும், மக்களையும் மையப்படுத்திய, உள்ளக்கிய, பங்குபெறக்கூடிய வாய்ப்புகளை இணையம் வழியாகவும், நேரடியாகவும் வழங்கியுள்ளது. இந்த முயற்சி சனவரி 2015 இலேயே தொடங்கியுள்ளது.[2] இதன் பின்னர், மேநாள் அமைச்சரவை செயலாளர் மறைந்த டி எஸ் ஆர் சுப்ரமணியன் தலைமையில் புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கத்திற்கான குழு உருவாக்கப்பட்டது. இக்குழு மே 2016 இல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகமானது, "தேசிய கல்விக் கொள்கைக்கான சில உள்ளீடுகள்" என்ற ஒரு வரைவினை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கத்திற்கான குழுவானது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் சூன் 2017 இல் உருவாக்கப்பட்டது. [3]

புதிய கல்விக் கொள்கை வரைவு முன் வைத்துள்ள ஐந்து தூண்கள் தொகு

2019 புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு முன் வைத்துள்ள ஐந்து தூண்களாவன, 1) அணுக்கம் 2) ஒப்புரவு 3) தரம் 4) தாங்குமை 5) பொறுப்புடைமை ஆகியவையாகும். இவை வழிகாட்டும் அடிப்படை இலக்குகள் எனவும் குறிப்பிடப்படுகின்றன.

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவின் பகுதிகள் தொகு

இந்த வரைவுக் கொள்கையானது பின்வரும் 4 முக்கியப் பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை,

  1. பள்ளிக்கல்வி
  2. உயர் கல்வி
  3. கூடுதல் கவனம் பெறும் பகுதிகள்
  4. மாற்றம் பெறும் கல்வி

ஒவ்வொரு முக்கியப் பகுதியும் பின்வருமாறு துணைத்தலைப்புகளையும் அவற்றின் கீழான உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது.

பள்ளிக்கல்வி தொகு

பள்ளிக்கல்வி என்ற பகுதியில் பின்வரும் தலைப்புகளின் கீழ் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது.

  • ஆரம்ப கால குழந்தை பராமரிப்பும் கல்வியும் : கற்றலுக்கான அடித்தளம்
  • அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு
  • இடைநின்ற மாணாக்கர்களை மீள் ஒருங்கிணைத்தல் : கல்வியை அனைவரும் அணுகுவதை உறுதிப்படுத்தல்
  • பள்ளிக் கலைத்திட்டமும், ஆசிரியமும் (கற்பித்தல் முறையும்)
  • ஆசிரியர்கள்
  • சமமான மற்றும் உள்ளடக்கிய கல்வி
  • பள்ளித்தொகுதிகளின் மூலம் திறனை செம்மையாக பயன்படுத்துவதோடு மேலும் முறையாக நிர்வகிப்பது
  • பள்ளிக் கல்விக்கான மறு ஒழுங்கு செய்தல்

உயர்கல்வி தொகு

உயர்கல்வி என்ற தலைப்பின் கீழ் பின்வரும் பத்து துணைத்தலைப்புகளில் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது.

  • தரமான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் : இந்தியாவின் உயர்கல்வி அமைப்பிற்கான புதிய மற்றும் முன்னோக்கு கனவு
  • கல்வி நிறுவனங்களை மறு கட்டமைத்தலும், ஒருங்கிணைத்தலும்
  • மிகுதாராளமயக் கல்வியை நோக்கி
  • மாணவர்களுக்கு உகந்த கற்றல் சூழலும் மற்றும் வலுவூட்டுதலும்
  • உற்சாகம், ஈடுபாடு மற்றும் திறமையுள்ள ஆசிரியர்கள்
  • தேசிய ஆராய்ச்சி நிறுவனம்
  • ஆசிரியர் கல்வி
  • தொழில்சார் கல்வி
  • உயர்கல்வி நிறுவனங்களுக்கான அதிகாரமுடைய ஆளுகை மற்றும் திறம்பட்ட தலைமைப்பண்பு
  • ஒழுங்கு முறை அமைப்பு மாற்றம்

முக்கிய கவனப் பகுதிகள் தொகு

முக்கிய கவனப் பகுதிகள் என்ற தலைப்பின் கீழ் பின்வரும் துணைத்தலைப்புகளின் கீழ் உள்ளடக்கத்தினைக் கொண்டுள்ளது.

  • கல்வியில் தொழில்நுட்பம்
  • தொழிற்கல்வி
  • வயது வந்தோர் கல்வி
  • இந்திய மொழிகளை ஊக்குவித்தல்

உருமாறும் கல்வி தொகு

உருமாறும் கல்வி என்ற பகுதியில் இந்தியக் கல்வி அமைப்பிற்குத் தலைமை தாங்கும், அதிகாரமிக்க தேசிய கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட இருப்பதையும், கல்விக்கான நிதியளிப்பு எப்படியிருக்கும் என்பது தொடர்பான தகவல்களும் உள்ளன.

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "HRD Ministry drafts new National Educational Policy: 19 changes recommended". India Today. 01 June 2019. பார்க்கப்பட்ட நாள் 27 சூன் 2019. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "Draft National Education Policy 2019" (PDF). mhrd. பார்க்கப்பட்ட நாள் 27 சூன் 2019.
  3. "Draft National Education Policy 2019". PRS Legislative Research. பார்க்கப்பட்ட நாள் 27 சூன் 2019.