தேசிய குடும்பநல சுகாதாரக் கணக்கெடுப்பு
தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு (National Family Health Survey) இந்திய அளவில் மேற்கொள்ளப்பட்ட நாடு தழுவிய ஒரு கணக்கெடுப்பாகும். இந்திய குடும்ப நல அமைச்சகமும் மைய முகவராகச் செயல்படும் அனைத்துலக மக்கள்தொகை அறிவியல் நிறுவனமும் இணைந்து இக்கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டன. [1]
வரலாறு
தொகு1992-93 ஆம் ஆண்டில் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் முதல் சுற்று மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டது. [2] கருவுறுதல், குடும்பக் கட்டுப்பாடு, இறப்பு, தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம் குறித்த நம்பகமான மற்றும் புதுப்பித்த தகவல்களை சேகரிப்பதே இக்கணக்கெடுப்பின் முக்கிய நோக்கமாகும்.[3] தொடர்ந்து, 1998 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை நான்கு சுற்றுகளாக கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன.
கடைசியாக ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு 2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. கோவிட்டு -19 பெருந்தொற்று பாதிப்பும் ஊரடங்கு உத்தரவு காரணமாக இடையில் நிறுத்தப்பட்டு இறுதியாக கண்டுபிடிப்புகள் 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன. [4][5] இந்த கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், ஊட்டச்சத்து குறைபாடு, வளர்ச்சிக் குறைபாடு, இரத்த சோகை மற்றும் அறுவைச் சிகிச்சை பிரசவம் தொடர்பான குறிகாட்டிகளை மேம்படுத்த தொழில்நுட்ப நிபுணர் குழுவை அமைச்சகம் அமைத்துள்ளது. [6]
கணக்கெடுப்புப் பட்டியல்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "National Family Health Survey". rchiips.org. பார்க்கப்பட்ட நாள் 2021-03-13.
- ↑ 2.0 2.1 "India - National Family Health Survey 1992-1993". microdata.worldbank.org. பார்க்கப்பட்ட நாள் 2021-03-13.
- ↑ "தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணிக்கு மக்கள் ஒத்துழைக்க மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்". பார்க்கப்பட்ட நாள் 1 June 2021.
- ↑ "Release of Fact sheets for National Family Health Survey-5 (2019-20) for 22 Phase-I States/ UTs | Ministry of Health and Family Welfare | GOI". main.mohfw.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-03-13.
- ↑ 5.0 5.1 "Vital Stats". PRS Legislative Research (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-13.
- ↑ "Panel to study NFHS-5 findings" (in en-IN). The Hindu. 2021-01-07. https://www.thehindu.com/news/national/panel-to-study-nfhs-5-findings/article33523146.ece.
- ↑ Rajan, S. Irudaya; James, K. S. (2004). "Second National Family Health Survey: Emerging Issues". Economic and Political Weekly 39 (7): 647–651. பன்னாட்டுத் தர தொடர் எண்:0012-9976. https://www.jstor.org/stable/4414638.
- ↑ "India - National Family Health Survey 2005-2006". microdata.worldbank.org. பார்க்கப்பட்ட நாள் 2021-03-13.
- ↑ National Family Health Survey (NFHS-4) 2015-16: India (in ஆங்கிலம்). 2017-12-01.