தேசிய செர்ரி மலர்ச்சி திருவிழா, வாசிங்டன், டி சி
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
தேசிய செர்ரி மலர்ச்சி திருவிழா (National Cherry Blossm Festival) என்பது அமெரிக்க நாட்டின் வாசிங்டன், டி.சி.யில் வசந்த காலத்தில் நடைபெறும் ஒரு விழாவாகும். மார்ச் 27, 1912 ஆம் தேதி, டோக்கியோ நகர மேயர் யூகியோ ஓசாகி (ஆங்கிலம்: Yukio Ozaki), வாசிங்டன், டி.சி. நகருக்கு ஜப்பானிய செர்ரி மரங்களைப் பரிசாக வழங்கியதை இந்த திருவிழா நினைவுகூருகிறது. இது ஒரு வசந்த கால தொடக்கத்தைக் கொண்டாடும் விழாவாகவும் கருதப்படுகிறது. இத்திருவிழா வாசிங்டன், டி.சி. நகரில் நான்கு வாரங்கள் நடைபெறும்.[1]
செர்ரி மரம் உயிரியல் வகைப்பாடு
தொகுசெர்ரி, ரோசசி தாவர குடும்பம் (Family: Rosaceae), புருனஸ் பேரினத்தைச் (ஆங்கிலம்: Genus: Prunus) சேர்ந்த தாவரம் ஆகும். இவை அலங்கார மர வகை ஆகும். பல செர்ரி மர சிறப்பினங்கள் (Species) ஜப்பான், கொரியா, சீனா போன்ற கிழக்கு ஆசிய நாடுகளில் வளர்கின்றன. [2] ஜப்பானிய செர்ரி மலரை சக்குரா ('Sakura') மலர்கள் என்றும் அழைப்பார்கள். இது ஜப்பானின் தேசிய மலராக கருதப்படுகிறது. [3]செர்ரி மரங்கள் மலர்வதைக் காண ஜப்பானிய மக்கள் குடும்பத்துடன் செல்வதுண்டு. இதனை “ஹனாமி” எனும் திருவிழாவாக கொண்டாடுவார்களாம். ஹனாமி என்றால் பூக்களைப் பார்ப்பது என்று பொருள்.[4]
தேசிய செர்ரி மலர்ச்சி திருவிழா: ஒரு கண்ணோட்டம்
தொகுவாசிங்டன் டி.சி நகர அளவில் நடைபெறும் இந்தத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பன்னாட்டு பண்பாட்டு நிகழ்ச்சிகளையும், சிறப்பு நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கிய வருடாந்திர நிகழ்வு ஆகும். [5]வாசிங்டன் நகரின் மையத்தில் தேசிய மால் என்னும் திறந்தவெளி பூங்கா அமைந்துள்ளது. இதற்கு தெற்கே டைடல் பேசின் அமைந்துள்ளது. இதனைச் சுற்றி அமைந்துள்ள, மேற்கு பொட்டமக் பூங்கா (West Potomac Park), டைடல் பேசின் (Tidal Basin), கிழக்கு பொட்டமக் பூங்கா (ஹேன்ஸ் பாயிண்ட்) (East Potomac Park, (Hains Point) மற்றும் வாஷிங்டன் நினைவுச் சின்னத்தை (Washington Monument) ஒட்டிய பகுதி, ஆகிய மூன்று இடங்களில் சுமார் 3,500 செர்ரி மரங்கள் வளர்க்கப்படுகின்றன. [6]இவை மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் பூக்கத் தொடங்கிவிடும். இலைகளே கண்ணுக்குத் தெரியாமல் மரம் முழுவதும் இளஞ்சிவப்பு (ஆங்கிலம்: Pink) மற்றும் வெள்ளை வண்ணங்களில் செர்ரி மலர்கள் அடர்த்தியாய் மலர்ந்து காணப்படும். எனினும் உள்ளூர் வானிலையைப் பொறுத்து செர்ரி பூக்கள் மலரும் நிகழ்வு ஆண்டுதோறும் மாறுபடும். ஒவ்வோர் ஆண்டும் இந்தத் திருவிழாவில் சுமார் 1.5 மில்லியன் மக்கள் குடும்பத்துடன் கலந்து கொள்கிறார்கள். [7]உணவு, ஆடல், பாடலுடன் திருவிழா களைகட்டுகிறது. இத் திருவிழாவின் தொடக்க விழா வாஷிங்டனில் உள்ள வார்னர் அரங்கில் (Warner Theatre) நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும், கிட்டத்தட்ட 700,000 பார்வையாளர்கள் வாஷிங்டனுக்கு வருகை தருகிறார்கள், இது நாட்டின் தலைநகரில் வசந்த காலத்தின் வருகையைக் குறிக்கும் பூக்கும் செர்ரி மரங்களைக் கவனிக்கிறது.[8]
வரலாறு
தொகுமார்ச் 27, 1912 அன்று, டோக்கியோ நகரத்தின் மேயர் யூகியோ ஓசாகி , வாஷிங்டன், டி.சி. நகருக்கு ஜப்பானிய செர்ரி மரங்களை ஜப்பான் நாட்டின் நட்புக்குரிய பரிசாக வழங்கினார். மார்ச் 27, 1912 இல் நடந்த ஒரு விழாவில், ஜனாதிபதி வில்லியம் ஹோவர்ட் டஃப்ட்டின் மனைவி ஹெலன் ஹெரான் டாஃப்ட் மற்றும் ஜப்பானிய தூதர் சிந்தா சுதேமியின் (Ambassador Chinda Sutemi) மனைவி வைகௌண்டஸ் சிந்தா ஐவா (Viscountess Chinda Iwa) ஆகிய இருவரும் இணைந்து மேற்கு பொடோமாக் பூங்காவில் உள்ள டைடல் பேசின் வடக்குக் கரையில் யோஷினோ[தொடர்பிழந்த இணைப்பு] வகை செர்ரி மரங்களை (Yoshino Cherry tree) நட்டனர். இந்த இரண்டு மரங்களை 17 வது தெருவின் தெற்கில் உள்ள ஜான் பால் ஜோன்ஸ் சிலைக்கு அருகில் இன்றும் காணமுடிகிறது. 1913 ஆம் ஆண்டு முதல் முதல் 1920 ஆம் ஆண்டு வரை வரை, ஜப்பானிலிருந்து பெறப்பட்ட 1800 சோமி-யோஷினோ வகை செர்ரி மரங்கள் டைடல் பேசினை சுற்றி நடப்பட்டன. மீதமுள்ள யோஷினோ மரங்களும், மேலும் 11 செர்ரி சிறப்பின மரங்களும் (ஆங்கிலம்: Species) கிழக்கு பொடோமாக் பூங்காவில் நடப்பட்டன. 1927 ஆம் ஆண்டளவில், முதன்முதலில் வாசிங்டன், டி.சி யில் செர்ரி மலர்ச்சி தேசிய திருவிழாவாக அங்கீகரிக்கப்பட்டது. 1934 இல், கொலம்பியா மாவட்ட ஆணையர்கள் மூன்று நாள் தேசிய செர்ரி மலர்ச்சி கொண்டாட்டத்திற்கு ஆதரவு அளித்தனர் 1935 ஆம் ஆண்டு செர்ரி மலர்ச்சி அதிகாரப்பூர்வமாக தேசிய ஆண்டு நிகழ்வாக மாறியது. 1937 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் கார்டன் கிளப் (ஆங்கிலம்: Garden Club of America) 25 ஆம் ஆண்டு தேசிய செர்ரி மலர்ச்சி விழாவை சிறப்பாகக் கொண்டாடியது. 1965 ஆம் ஆண்டில் மேலும் 3,800 யோஷினோ செர்ரி வகை மரங்களை ஜப்பானியர்கள் பரிசாக அளித்தனர். 1986 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரை 676 செர்ரி மரங்கள் நடப்பட்டன. 1994 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், தேசிய செர்ரி மலர்ச்சி திருவிழா இரண்டு வார கால கொண்டாட்டமாக விரிவடைந்தது. 2002 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை மேலும் 400 மரங்கள் நடப்பட்டன.[9]
தேசிய செர்ரி மலர்ச்சி திருவிழா 2022
தொகு2022 ஆம் ஆண்டிற்கான தேசிய செர்ரி திருவிழா மார்ச் 20, 2022 ஆம் தேதி முதல் ஏப்ரல் 17, 2022 ஆம் தேதி வரை,. வாஷிங்டன், டிசி. யில் நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "National Cherry Blossom Festival, Home Page". National Cherry Blossom Festival. பார்க்கப்பட்ட நாள் 2 April 2022.
- ↑ "Cherry Tree Names, Species and Types of Cherries". Tree Names. பார்க்கப்பட்ட நாள் 2 April 2022.
- ↑
{{cite web}}
: Empty citation (help) - ↑ "செர்ரி புளோசம் - அதன் மகத்துவம் என்ன, அது எப்படி அமெரிக்காவிற்குச் சென்றது?". செய்தி. 31 மார்ச் 2021. https://seithi.mediacorp.sg/world/cherry-blossom-significance-36661. பார்த்த நாள்: 2 April 2022.
- ↑ "All events". National Cherry Blossom festival. பார்க்கப்பட்ட நாள் 2 April 2022.
- ↑ "நீங்கள் வாஷிங்டன் DC செர்ரி மரங்கள் பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்". TRAASGPU. பார்க்கப்பட்ட நாள் 2 April 2022.
- ↑ "வாஷிங்டன் டி.சி.யில் செர்ரி பூக்கள் திருவிழா..!!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் வருகை". தினகரன் (SUN Publisher). 22 மார்ச் 2022 இம் மூலத்தில் இருந்து 2 ஏப்ரல் 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220402050507/https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=17405. பார்த்த நாள்: 2 April 2022.
- ↑ "National Cherry Blossom Festival". பார்க்கப்பட்ட நாள் 14 November 2022.
- ↑ "National Cherry Blossom Festival". Wikipedia. பார்க்கப்பட்ட நாள் 2 April 2022.