சப்பானிய நாடாளுமன்றம்

சப்பானிய நாடாளுமன்றம் (National Diet, யப்பானியம்: 国会, கொக்காய்) எனப்படுவது சப்பானின் ஈரவை நாடாளுமன்ற அமைப்பாகும். டயட் என்ற வார்த்தை லத்தீன் மொழியிலிருந்து உருவாக்கப்பட்ட வார்த்தையாகும். அதற்கு சட்டமன்றம் என்ற பொதுவான அர்த்தம் தருவதாக இருக்கின்றது.

சப்பானின் நாடாளுமன்றம்
National Diet of Japan

日本国の国会
Coat of arms or logo
வகை
வகைஈரவை
அவைகள்கவுன்சிலர் அவை
பிரதிநிதிகள் அவை
தலைமை
அவைத் தலைவர்தடமோரி ஓசிமா, எல்டிபி
ஏப்ரல் 21, 2015 முதல்
கவுன்சிலர் அவைத் தலைவர்மசாக்கி யமசாக்கி, எல்டிபி
ஆகத்து 2, 2013 முதல்
தேர்தல்
இறுதித் தேர்தல்21 சூலை 2013 (23வது)
இறுதித் தேர்தல்14 டிசம்பர் 2014 (47வது)
கூடும் இடம்
Diet of Japan Kokkai 2009.jpg
நாடாளுமன்றக் கட்டடம், டோக்கியோ
வலைத்தளம்
கவுன்சிலர் அவை]
பிரதிநிதிகள் சபை

அமைப்புEdit

தேசிய டயட், இரு அவைகளைக் கொண்ட நாடாளுமன்றம் ஆகும். இது, 480 உறுப்பினர்களைக் கொண்ட கீழவை சபை என்று அழைக்கப்படும் பிரதிநிதிகள் சபையையும், 242 உறுப்பினர்களைக் கொண்ட மேலவை சபை என்று அழைக்கப்படும் கவுன்சிலர் அவையையும் உள்ளடக்கியது. இரண்டு அவைகளின் உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவையும், கவுன்சிலர் அவை உறுப்பினர்கள் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் மக்களால் தெரிவு செய்யப்படுகின்றனர். 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை உண்டு.

பொறுப்புகள்Edit

தேசிய டயட்டின் முக்கிய பொறுப்பு பிரதம அமைச்சரைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் சட்டங்களைத் தாக்கல் செய்வதாகும். பிரதம அமைச்சரே அரசின் தலைவர் ஆவார். தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களிலிருந்து நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்படும் ஒருவரைப் பிரதம அமைச்சராகப் பேரரசர் நியமிப்பார். பிரதம அமைச்சர் நாட்டின் அமைச்சர்களைத் தெரிவு செய்வதற்கும், பதவியில் இருந்து நீக்குவதற்குமான அதிகாரம் உடையவர்.

வரலாறு, அமைவிடம்Edit

அரசியல் சட்டப்படி 1889 ஆம் ஆண்டில் இம்பீரியல் டயட் என்ற பெயரில் பாராளுமன்றம் ஏற்படுத்தப்பட்டு செயல்படத் தொடங்கியது. மெய்ஜி அரசியலமைப்பு என்று அழைக்கப்படும் ஜப்பான் நாட்டின் அரசியலைப்பை உருவாக்கி நடைமுறைப்படுத்தும்போது டயட் ஆரம்பிக்கப்பட்டது. தேசிய டயட் கட்டடம் டோக்யோ நகரில் சியோடா என்ற இடத்தில் அமையப்பெற்றுள்ளது.

வெளி இணைப்புகள்Edit