தேசிய தாவரவியல் பூங்கா, சிம்பாப்வே

தேசிய தாவரவியல் பூங்கா, சிம்பாப்வே (National Botanic Garden of Zimbabwe[1]) என்ற தாவரவியல் பூங்கா சிம்பாப்வே நாட்டின் நகரமான ஹராரேவிலிருந்து, தெற்குப் பக்கத்தில் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் நடுவே அலெக்சாண்ட்ரா பூங்காவுள்ளது. இத்துடன் உலர் தாவரக இல்லங்கள் உள்ளன. இவையே சிம்பாப்வேயின் உலர் தாவரகங்கள் ஆகும். இப்பூங்கா ஏறத்தாழ ஏழு சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவு உள்ளது. 1902 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இது பொழுது போக்கு பூங்காவாகத் தொடங்கப்பட்டது. 1962 ஆம் ஆண்டு, பேராசிரியர் அய்ராம் வைல்டு (Prof. Hiram Wild) பரிந்துரையால் இது தேசியா பூங்காவாக மாற்றப்பட்டது. இப்பூங்காவின் பாதிக்கு மேலான  இடத்தில், இந்நாட்டின் 750 தாவர இனங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மீதமுள்ள இடத்தில் ஆப்பிரிக்கக் கண்ட நாடுகளில் இருந்தும், தென் அமெரிக்கா, இந்தியா, ஆத்திரேலியாதொலை கிழக்கு பகுதிகளில் இருந்தும் அருகியத் தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன. இவற்றிற்கான 90% வேறுபட்ட சூழ்நிலை வாழ்விடகள், இந்நாட்டில் காணப்படுகின்றன.[2] பேராசிரியர் அய்ராம் வைல்டு, உலர் தாவரகத்தின் காப்பாளர் (curator) 1961/1962 ஆக , சுவிட்சர்லாந்து நாட்டவரான,  டோம் மியல்லரை நியமித்தார். அப்பொழுது இந்த உலர் தாவரகம் பழைய கட்டிடத்தில் இருந்தது. 1967 ஆம் ஆண்டு இது தேசிய பூங்காவிற்கு மாற்றப்பட்டது.

இப்பூங்காவிலுள்ள கள்ளி (பேரினம்) (Euphorbia cooperi)

மேற்கோள்கள்

தொகு
  1. https://tools.bgci.org/garden.php?id=232&ftrCountry=&ftrKeyword=&ftrBGCImem=&ftrIAReg=/1000
  2. "National Botanic Gardens | Harare, Zimbabwe Attractions". Lonely Planet (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 31 மார்ச்சு 2024.

வெளியிணைப்புகள்

தொகு