தேசிய நீர்வழி 6

தேசிய நீர்வழி 6 (National Waterway 6) என்பது இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் இருக்கும் கசார் மாவட்டம் லக்கிபூருக்கும் பராக் நதியின் பங்கா நகருக்கும் இடையில் அமைந்துள்ள நீர்வழியாகும் [1]. இத்திட்டம் 2013-14 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் உள்நாட்டு நீர்வழி ஆணையம் இரண்டு கட்டங்களில் இத்திட்டத்தை நிறைவேற்றும். 2016-17 ஆம் ஆண்டு காலத்தில் இத்திட்டத்தின் முதலாவது கட்டமும், 2018-2019 இல் இத்திட்டத்தின் இரண்டாவது கட்டமும் நிறைவேற்றப்படும். வடகிழக்கில் உள்ள நீர்வழிகளை ஒருங்கிணைத்து அசாம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசம் வழியாக சரக்கு போக்குவரத்துக்கு உதவுவது இத்திட்டத்தின் முக்கிய இலக்கு ஆகும்.

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "National Waterway - 6". www.india-wris.nrsc.gov.in/. India-WRIS. பார்க்கப்பட்ட நாள் 30 January 2017.

புற இனைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_நீர்வழி_6&oldid=3480009" இலிருந்து மீள்விக்கப்பட்டது