தேசிய நெடுஞ்சாலை 138 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 138 (National Highway 138 (India)) என்பது தமிழ்நாட்டில் திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களை இணைக்கும் இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 138
138

தேசிய நெடுஞ்சாலை 138
தூத்துக்குடி - திருநெல்வேலி நெடுஞ்சாலை
Map
நிலப்படத்தில் தேசிய நெடுஞ்சாலை 138 சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
பராமரிப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
நீளம்:54 km (34 mi)
முக்கிய சந்திப்புகள்
கிழக்கு முடிவு: தே.நெ. 38 in தூத்துக்குடி
மேற்கு முடிவு: தே.நெ. 44 in திருநெல்வேலி
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 137 தே.நெ. 139

வழித்தடம்

தொகு

இந்த நெடுஞ்சாலை திருநெல்வேலி நகரில் உள்ள பாளையங்கோட்டையைத் தூத்துக்குடி நகரத்தில் உள்ள வ. உ. சிதம்பரனார் துறைமுகத்துடன் இணைக்கிறது. இந்த வழித்தடத்தில் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்குச் சரக்குகளை விரைவாகக் கொண்டு செல்ல முடியும். இது துறைமுகத்திற்கு நேரடி பாதையை வழங்குகிறது. இந்த நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 54 கி. மீ. ஆகும்.

தூத்துக்குடி வானூர்தி நிலையம் வாகைகுளம் அருகே இந்த நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. விமான நிலையம் தூத்துக்குடி நகரத்திலிருந்து 26 கி. மீ. தொலைவிலும், திருநெல்வேலி நகரத்திலிருந்து 28 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.

வெளி இணைப்புகள்

தொகு