தேசிய பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்

பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு உண்டாக அமெரிக்காவில் அனுசரிக்கப்படும் ஒரு கொண்டாட்டம

தேசிய பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் (National Colon Cancer Awareness Month) அமெரிக்காவில் பெருங்குடல் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க மார்ச் மாதத்தில் அனுசரிக்கப்படும் ஓர் ஆண்டு கொண்டாட்டமாகும். அமெரிக்காவில் இது பெருங்குடல் மலக்குடல் புற்றுநோய் கூட்டணி நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. " [1]

தேசிய பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்
National Colon Cancer Awareness Month
கடைபிடிப்போர்அமெரிக்கா
திருவழிபாட்டின் நிறம்நீலநிற உடை
நாள்மார்ச்சு

வரலாறு

தொகு

அமெரிக்காவில் தேசிய பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அல்லது தேசிய பெருங்குடல் மலக்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்) முதன்முதலில் குடியரசுத்தலைவர் அறிவிப்பு மூலம் நிறுவப்பட்டது, [2] 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29 அன்று வில்லியம் செபர்சன் கிளின்டன் இதற்காக கையெழுத்திட்டார்.

நிகழ்வுகள்

தொகு

தேசிய பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு மாத பிரகடனத்தை குடியரசுத்தலைவர் பராக் ஒபாமா 2014-2016 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு அனுசரிக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.

தேசிய பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்திற்கான கொண்டாட்ட முறை மாறுபடும், ஆனால் பல நிறுவனங்கள் தங்கள் உள்ளூர் சமூகங்களை விழிப்புணர்வில் ஈடுபடுத்த உதவும் சிறப்பு நிகழ்வுகளை நடத்துகின்றன. அதாவது பெருங்குடல் மலக்குடல் புற்றுநோய் கூட்டணி மூலம் நீல நிற உடை உடுத்த ஊக்குவிப்பது ஓர் உதாரணமாகும். [3] [4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Colon Cancer Awareness Month". Colorectal Cancer Alliance. பார்க்கப்பட்ட நாள் 25 April 2017.
  2. Clinton, Bill. "NATIONAL COLORECTAL CANCER AWARENESS MONTH, 2000". NARA. Archived from the original on 26 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 25 April 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Dress in Blue Day "[தொடர்பிழந்த இணைப்பு] Colorectal Cancer Alliance
  4. "Wear blue on Friday to raise colon cancer awareness" (in en). Reuters. 2015-03-05. https://www.reuters.com/article/us-colon-cancer-awareness-idUSKBN0M11SM20150305. 

 

புற இணைப்புகள்

தொகு