தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கொல்கத்தா
தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கொல்கத்தா (National Institute of Pharmaceutical Education and Research, Kolkata) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தாவில் அமைந்துள்ள இந்திய பொது மருந்தியல் ஆராய்ச்சி பல்கலைக்கழகமாகும். இதுதேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாகத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாகும்.[2][3]
வகை | மருந்தியல் ஆய்வு நிறுவனம் |
---|---|
உருவாக்கம் | 2007 |
பணிப்பாளர் | வி. இரவிச்சந்திரன் |
கல்வி பணியாளர் | 36[1] |
மாணவர்கள் | 113[1] |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 83[1] |
30[1] | |
அமைவிடம் | , , 22°34′49″N 88°23′56″E / 22.5804°N 88.3988°E |
வளாகம் | நகரம் |
இணையதளம் | niperkolkata |
வழங்கப்படும் மருந்தியல் கல்வி
தொகுதேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கொல்கத்தா 2-ஆண்டு எம். எஸ். (மருந்தியல்) படிப்பினை வழங்குகிறது.[4] மருந்து அறிவியலில் முனைவர் ஆய்வுத் திட்டம் செயல்படுகிறது.[5] மருந்துத் துறையின் தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, மருந்துகள் மற்றும் நுகர்வோர் சுகாதாரப் பொருட்கள் ஆகிய துறைகளில் கல்வித் திறன் மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக 2016-ல் நிறுவனம் சனோபி இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.[6]
தரவரிசை
தொகுதேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கொல்கத்தா 2021 ஆம் ஆண்டில் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் மருந்தியல் நிறுவன தரவரிசையில் இந்தியாவில் 33வது இடத்தைப் பிடித்தது.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "NIPER Kolkata Data for NIRF'2021'" (PDF). NIPER Kolkata Feb 19, 2021. பார்க்கப்பட்ட நாள் Feb 19, 2021.
- ↑ "NIPER now an institute of national importance". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா 04:36 IST (Hyderabad). Dec 8, 2021. https://timesofindia.indiatimes.com/city/hyderabad/niper-now-an-institute-of-national-importance/articleshow/88152503.cms.
- ↑ NIPER sets the benchmark
- ↑ NIPER conducts convocation
- ↑ [1]
- ↑ "Sanofi India inks pact with NIPER Kolkata". தி எகனாமிக் டைம்ஸ் 04:16 PM IST. November 17, 2016. https://economictimes.indiatimes.com/industry/healthcare/biotech/pharmaceuticals/sanofi-india-inks-pact-with-niper-kolkata/articleshow/55476008.cms?from=mdr.
- ↑ https://www.nirfindia.org/2021/PharmacyRanking.html